protein rich food in tamil-இறைச்சியில் மட்டும்தான் புரதம் உள்ளதா..? புரதம் நிறைந்த சைவ உணவுகளை தெரிஞ்சுக்கங்க..!

protein rich food in tamil-இறைச்சியில் மட்டும்தான் புரதம் உள்ளதா..? புரதம் நிறைந்த சைவ உணவுகளை தெரிஞ்சுக்கங்க..!

protein rich food in tamil-புரதச் சத்தின் அவசியம் (கோப்பு படம்)

protein rich food in tamil-புரதம் என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட தொகுப்பு ஆகும். உடலுக்கு தேவையான சத்துக்களில் ஒன்றாகும்.

protein rich food in tamil-புரதம் பால்,சீஸ், முட்டை, கோழி போன்ற இறைச்சி வகைகளிலும், தாவர உணவுகளான சோயா, கடலை வகைகள், பருப்பு வகைகளில் புரதம் உள்ளது. முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகை உணவுகளிலும், தினை போன்ற தானிய வகையிலும், குதிரைவாலி போன்ற சிறு தானிய வகைகளிலும் புரதம் உள்ளது.

தசைகள் கட்டமைப்புக்கு புரதச்சத்து அவசியம். உடலில் புரதச்சத்து இருந்தால் மட்டுமே உடல் உறுதியானதாக இருக்கும். புரதச் சத்தை நாம் உணவின் மூலமாகவே பெற முடியும். புரதச்சத்தின் தேவை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.


ஒருவருக்கு உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவைப்படும். 50 கிலோ எடை கொண்ட ஒருவருக்கு 40 கிராம் புரதம் தேவைப்படும். தினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும். புரதச்சத்து நிறைந்த உணவைப் பொறுத்தவரை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் மட்டுமே புரதம் நிறைந்து காணப்படுகிறது. அதனால் சைவ உணவு உண்பவர்களுக்கு புரத தேவையை பூர்த்தி செய்வதற்கு வழியே இல்லை என்று எண்ணுபவர்களுக்கு இங்கே சைவம் சார்ந்த புரத உணவுகள் தரப்பட்டுள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

protein rich food in tamil

சோயா

சோயா பீன்ஸ் புரதம் செறிந்த உணவாகும். இரைஹ்ச்சியில் இருக்கும் புரத அளவைக்காட்டிலும் சோயாவில் அதிக புரதச் சத்து சேர்ந்துள்ளது. கூடவே வைட்டமின்கள் பி மற்றும் ஈ, கால்சியம், இரும்பு மற்றும் ஜின்க் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்களும் உள்ளன.


விளையாட்டு வீரர்களுக்கு

ஆய்வுகளின்படி, சோயாவிலுள்ள புரதம் மோசமான கொழுப்பின் அளவையும் அதிகப்படியான இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஐசோஃப்ளேவோன்களைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு புரதத்தின் தேவை அதிகம். அதை ஈடுகட்ட சோயா சிறந்த உணவாகும்.

மெனோபாஸ் காலத்துக்கு

மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் குறையும். அந்த காலகட்டத்தில் வாரத்தில் 5 நாட்கள் சோயா பால் உட்கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் இந்த சோயாபீன்ஸ் குறைக்கிறது.


பச்சை பட்டாணி

100 கிராம் பச்சை பட்டாணியில் ஐந்து கிராம் புரதம் உள்ளது. மருத்துவ ஆய்வுகளின்படி, பச்சை பட்டாணி பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிகான்சர் பண்பு போன்றவை சேர்ந்துள்ளன. இந்த பண்புகள் நீரிழிவு குறைபாட்டை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. உடல் செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பின் சீரான இயக்கத்துக்கு ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம் தேவை. பட்டாணியில் ஃபோலேட்ஸ் பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் உள்ளது. அதனால் இது டி.என்.ஏ தொகுப்பின் சீரான இயக்குத்துக்கு துணைபுரிகிறது.

protein rich food in tamil


பட்டாணி உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. கண் பார்வை நன்றாக தெரிவதற்கு வைட்டமின் 'இ' மிகவும் அவசியம். அதேபோல உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் பட்டாணியில் உள்ள வைட்டமின்கள் உதவுகின்றன.

100 கிராம் மைசூர் பருப்பில் 9 கிராம் புரதம் உல்ளது. அதேபோல 100 கிராம் பாசிப்பருப்பில் 7 கிராம் புரதம் உள்ளது. இந்த புரதம் ஆரோக்யமான எடை மேலாண்மைக்கும், நீரிழிவு குறைபாட்டைத் தடுப்பதற்கு உதவுகிறது.


பருப்பு வகைகள்

மேலும் பருப்புகளில் நார்ச்சத்துக்களும் உள்ளன. கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றில் 100 கிராமுக்கு 20 முதல் 25 கிராம் அளவு புரதம் உள்ளடங்கி இருக்கிறது. துவரம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், அதன் நிறத்துக்காக சேர்க்கப்படும் நிறமி, நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, இதற்கு பதிலாக பாசிப் பயிறு, பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே, அசைவ உணவுகளை உண்ணாதவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Tags

Next Story