Pregnancy Symptoms Before Period In Tamil-கர்ப்பமானதை எப்படி தெரிஞ்சிக்கலாம்..? இப்படித்தான்..!

Pregnancy Symptoms Before Period In Tamil-கர்ப்பமானதை எப்படி தெரிஞ்சிக்கலாம்..? இப்படித்தான்..!
X
ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை கண்டறிவதற்கு சில அடிப்படை அறிகுறைகளை கவனிக்க வேண்டும். அவை கீழே தரப்பட்டுள்ளன.

Pregnancy Symptoms Before Period In Tamil

திருமணம் முடிந்து சில தம்பதிகள் இப்போதே குழந்தை வேண்டாம். நான்றாக என்ஜாய் பண்ணிட்டு ஒரு இரண்டு வருஷம் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் உள்ளனர். ஆனால் உண்மை என்னவெனில், இந்த காலகட்டத்தில் புதுமண தம்பதிக்கு கால தாமதமில்லாமல் குழந்தைப் பேறு உண்டாகுவது இறைவன் கொடுக்கும் வரமாக பார்க்கப்படுகிறது.

சிலர் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து, கோயில் கோயிலாக சென்று வந்து, பல மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு கர்ப்பம் அடையும் தம்பதிகளும் உள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கும் தம்பதியருக்கு, இந்த முறை குழந்தை உண்டாகியுள்ளதா என்பதை அறிந்து கொள்ள துடிப்பது இயல்பானதே.


Pregnancy Symptoms Before Period In Tamil

குறிப்பாக, குழந்தைப் பேறுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும், வழக்கமாக வரக் கூடிய மாதவிலக்கு காலத்தை மனதில் கணக்குப் போட்டபடி இருப்பார்கள். மாதவிலக்கு தவறிவிட்டாலே ஏறக்குறைய கர்ப்பம் உறுதியானது என்பதன் அடையாளம்தான்.

இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து அதை உறுதி செய்து கொள்ளலாம். அதே சமயம், மாதவிலக்கு காலம் வர இருக்கும் சமயம் வரை பலருக்கு பொறுமை இருக்காது. தங்களுக்கு கரு உண்டாகியிருக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள அளவுக்கு அதிகமாக ஆர்வமும் ஆசையும் ஆர்வம் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல ஒன்றிரண்டு அடையாளங்களை வைத்து நாம் இதை உறுதி செய்து கொள்ள இயலும்.

Pregnancy Symptoms Before Period In Tamil


இரத்தக்கசிவு :

பொதுவாக மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், கர்ப்பம் அடையும் பெண்களுக்கு முன்னதாகவே லேசான இரத்தக்கசிவு இருக்கும். இது பிங்க் நிறத்தில் அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். உங்கள் மாதவிலக்கு காலத்திற்கு ஒரு வாரம் அல்லது அதற்கு முன்பாக இந்த அறிகுறி தென்படும். இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. முதிர்ச்சி அடைந்த கருமுட்டை, கர்ப்பப்பை லைனிங்கோடு சேருகையில் லேசான எரிச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக இரத்தக்கசிவு ஏற்படலாம்.

வயிற்றுப்பிடிப்பு :

மாதவிலக்கு வலி உண்டாகும்போது வயிற்றுப்பிடிப்பு ஏற்படும் என பொதுவாக அறியப்படுகிறது. அதே சமயம், இது கர்ப்பத்திற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அதாவது கர்ப்பம் அடையும் சமயத்தில் கர்ப்பப்பைக்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால் லேசான அல்லது கடுமையான பிடிப்பு ஏற்படலாம்.

Pregnancy Symptoms Before Period In Tamil


காலைச் சோர்வு :

காலையில் எழுந்ததும், குமட்டல் அல்லது வாந்தி உணர்வுடன் உடல் சோர்வாக காணப்பட்டால், அது கர்ப்பத்திற்கான அறிகுறி ஆகும். அதே சமயம், ஒரு நாளில் எந்த நேரத்திலும் இதேபோன்ற சோர்வு ஏற்படக் கூடும்.

மார்பக மாற்றங்கள் :

மார்பக அமைப்பில் , அளவிலும் தோற்றத்திலும் மாற்றம் அடைவதை பெண்கள் உணர முடியும். குறிப்பாக, மார்பகங்கள் இறுக்கம் அடைந்தது எடை அதிகமாக இருப்பதையும் பெரிதானதைப் போல இருப்பதையும் உணரமுடியும். மேலும் மார்பகங்கள் கருத்து காணப்படும். இது கர்ப்பத்திற்கான அறிகுறி ஆகும்.

மனநிலை மாற்றம் :

கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறியாக பெண்களுக்கு கவலை மற்றும் ஸ்ட்ரெஸ் அதிகரித்துக் காணப்படலாம். உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோகெஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகிறது.

Pregnancy Symptoms Before Period In Tamil


அதிகரித்த பசி:

உங்கள் வயிறு வளர்ந்து வருவதால் நீங்கள் இயல்பை விட அதிகமாக சாப்பிட விரும்பலாம். பாலாடைக்கட்டி, தயிர், ஐஸ்கிரீம், சாக்லேட், பாப்கார்ன், பருப்புகள் மற்றும் வறுத்த உணவுகள் போன்ற உணவுகளின் மீது உங்களுக்கு ஆசை ஏற்படலாம்.

Pregnancy Symptoms Before Period In Tamil

குமட்டல்:

குமட்டல் கர்ப்பத்தின் மற்றொரு அறிகுறியாகும். முதல் மூன்று மாதங்களில் இது மிகவும் பொதுவானது. இது குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வால் வகைப்படுத்தப்படுகிறது. காலை சுகவீனத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் 2 வாரங்களில் குணமடைவார்கள்.


முதுகுவலி:

முதுகுவலி கர்ப்பிணிப் பெண்களிடையே மிகவும் பொதுவாக ஏற்படும் ஒன்றாகும். ஏனென்றால், குழந்தைக்கு ஏற்றவாறு கருப்பை விரிவடைகிறது. அந்த விரிவாக்கத்தை தாங்குவதற்கு இடுப்பின் தாங்குத்தானம் உதவிக்கு வரும். அதனால் வலி ஏற்படும்.

Pregnancy Symptoms Before Period In Tamil

எல்லா பெண்களும் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளை கண்டுணர முடியுமா?

சில பெண்கள் மாதவிடாய் ஏற்படாத வரை இந்த ஆரம்ப கர்ப்ப அறிகுறிகளை கவனிக்க மாட்டார்கள். நேர்மறையான சோதனை முடிவைப் பார்க்கும் வரை அவர்கள் கர்ப்பமாக இருப்பதை மற்றவர்கள் உணர மாட்டார்கள். ஆனால், இந்த ஆரம்ப கர்ப்ப அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், நீங்கள் நிச்சயமாக உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த ஆரம்பகால கர்ப்பப் பிரச்னைகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவர் சோதனைகளை மேற்கொள்வார். நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியவுடன், உங்களையும் உங்கள் பிறக்காத குழந்தையையும் எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்த வழிமுறைகளை மருத்துவர் உங்களுக்கு வழங்குவார்.

Pregnancy Symptoms Before Period In Tamil


கர்ப்ப அறிகுறிகள் எப்போது தொடங்கும்?

கர்ப்ப அறிகுறிகள் எப்போது தொடங்குகின்றன என்பதை அறிய சிறந்த வழி, அவற்றை நுணுக்கமாக கவனிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, இந்தப் பிரச்னையைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இவைகளை வைத்து தொடக்கத்தில் கர்ப்பத்திற்கான நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.

Tags

Next Story
why is ai important to the future