precautions to lower the risk of typhoid infection -டைபாய்டு-க்கு பை சொல்லுங்க..! எப்டீன்னு தெரிஞ்சுக்கங்க..!

precautions to lower the risk of typhoid infection -டைபாய்டு-க்கு பை சொல்லுங்க..! எப்டீன்னு தெரிஞ்சுக்கங்க..!
X

-டைபாய்டு காய்ச்சல்.(கோப்பு படம்)

precautions to lower the risk of typhoid infection-டைபாய்டு ஏன் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி தற்காத்துக்கொள்ளலாம் என்பதை இந்த கட்டுரையில் அறிந்துகொள்ளலாம்.

precautions to lower the risk of typhoid infection-டைபாய்டு உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 21.5 மில்லியன் மக்களை பாதிக்கிறது. தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், டைபாய்டை வெற்றிகரமாக மருந்துகளால் குணப்படுத்த முடியும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், டைபாய்டு ஆபத்தானதாகும்.

டைபாய்டு காய்ச்சல் பாக்டீரியாத் தொற்றினால் வரக்கூடியது. அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். 'சால்மோனெல்லா டைஃபி' என்ற பாக்டீரியாதான் டைபாய்டு வருவதற்கு முக்கிய காரணியாகிறது. சுத்தமற்ற உணவு மற்றும் குடிநீரினால் இந்நோய் பரவுகிறது.


டைபாய்டு: நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்கு சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

டைபாய்டு என்பது செரிமான மண்டலம் மற்றும் இரத்த ஓட்டத்தில் பாக்டீரியா தொற்றுக் காரணமாக ஏற்படுகிறது.டைபாய்டு என்பது சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். அந்த பாக்டீரியா உடலை தாக்கும்போது அதிக காய்ச்சல் மற்றும் பிற பிரச்னைகள் எழுகின்றன. அசுத்தமான உணவு அல்லது அசுத்தமான தண்ணீர் அல்லது டைபாய்டு பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. டைபாய்டு என்பது செரிமான மண்டலம் மற்றும் இரத்த ஓட்டத்தில் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுவதாகும்.

precautions to lower the risk of typhoid infection

டைபாய்டு அறிகுறிகள் வெளியே அவ்வளவு விரைவாக தெரிய வராது. மெதுவாகவேத் அறிகுறிகள் தோன்றும். பொதுவாக, மழைக்காலத்தில் குழந்தைகள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நீர் மாசுபாடு அதிகரிப்பதால் நீரினால் பரவும் பிற நோய்களும் ஏற்படலாம். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு, அதன் அறிகுறிகள் பொதுவாக 6 முதல் 30 நாட்களுக்குள் வெளிப்படத் தொடங்கும். காய்ச்சல் மற்றும் சிவப்பாக தொழில் தடித்து காணப்படல் ஆகியவை இரண்டு முக்கிய அறிகுறிகளாகும்.

இது தவிர, பலவீனம், சோர்வு, பசியின்மை, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வியர்வை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வீக்கம் ஆகியவை நோயின் மற்ற அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் புறக்கணிக்கப்பட்டால், நிலைமை மோசமாகிவிடும். அதனால்தான் டைபாய்டுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்வது மிக அவசியம் ஆகும்.

டைபாய்டு பாக்டீரியா

precautions to lower the risk of typhoid infection

டைபாய்டு காய்ச்சல் உடலின் எந்தப் பகுதியை தாக்குகிறது?

டைபாய்டு ஒரு பாக்டீரியா தொற்று. இது ஒரு உறுப்பை மட்டுமல்ல, உடலின் பல உறுப்புகளையும் பாதிக்கிறது. பாக்டீரியா இரத்த ஓட்டத்தை அடைந்த பிறகு கல்லீரல், மண்ணீரல் மற்றும் தசைகள் உட்பட இரைப்பைக் குழாயைத் தாக்குகிறது. சில நேரங்களில், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கமடையும். பித்தப்பை, நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றையும் பாக்டீரியா இரத்தத்தின் மூலம் சென்றடையும்.

தடுப்பு நடவடிக்கைகள்

டைபாய்டு தடுப்பூசி தாராளமாக கிடைத்தாலும், அது 100 சதவீதம் பலனளிபதில் வெற்றி காணவில்லை. அதனால், தொற்றுநோயைத் தடுக்க இன்னும் பல எளிய வழிகள் உள்ளன.


வடிகட்டிய நீரைக் குடிப்பது

அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள குடிநீர் அசுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வடிகட்டிய நீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

புதிய உணவுகளைப் பயன்படுத்துங்கள்

புதிய காய்கறிகள் மற்றும் உணவுகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். காய்கறிகள் மற்றும் உணவுகளை நீண்ட நீண்ட நாட்கணக்கில் சேமித்து வைக்கவேண்டாம்.காய்கறிகளை பயன்படுத்துவதற்கு முன் அதை நன்கு கழுவுதல் அவசியம்.

precautions to lower the risk of typhoid infection

அடிக்கடி கைகளை கழுவவேண்டும்

கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியா மற்றும் தொற்றுகள் கைகளில் இருந்து அகற்றப்படும். இந்த சுத்தம் செய்யும் முறை பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

மருத்துவ ஆலோசனை

டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். மருத்துவர் நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்