poppy seeds in tamil-அடேங்கப்பா..கசகசாவில் இவ்ளோ மருத்துவ குணங்களா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

poppy seeds in tamil-கசகசா விதையின் பயன்பாடு (கோப்பு படம்)
poppy seeds in tamil-கசகசா விதைகள் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இதில் புரதம், நார், கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய முக்கிய கூறுகள் அடங்கியுள்ளன.
கசகசா தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இது சமையல் பயன்பாடுகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், மனித உடலில் ஏற்படும் இதய பிரச்சினைகள், செரிமானம், முடி மற்றும் தோல் பிரச்சினைகள், தூக்கமின்மை, நீரிழிவு, உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். ஹிந்தியில் கஸ் கஸ் என்றும், கன்னடத்தில் கசிகீஸ் என்றும், பெங்காலியில் போஸ்டோ என்றும் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. கசகசா விதைகள் பலவகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும். கசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது.
poppy seeds in tamil
இதன் புல் மற்றும் அதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவப் பயன்களுக்காகவும், சோப்புகள், நறுமண திரவியங்கள், மேலும் உணவுகள் மற்றும் பானங்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவில்லாத பயன்களைக் கொண்ட மூலப்பொருள் ஆகும். இது உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை தருகிறது. கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாங்க..
அறிவாற்றலை அதிகரிக்கிறது
கசகசா விதைகளில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இது இயற்கையான இரத்த சுத்திகரிப்பானாகவும், இரத்தத்தில் இரத்த சிவப்பணு மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் சரியான அளவில் வழங்குவது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
poppy seeds in tamil
செரிமானத்தை சீர் செய்கிறது
கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக இருப்பதால் இது முறையான செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கிறது. இது உடலின் இயக்க அமைப்பை மேம்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயு உற்பத்தி போன்ற நோய்களிலிருந்து நிவாரணமளிக்கிறது.
கருவளர்ச்சி மேம்பட உதவுகிறது
கசகசாவின் மருத்துவ குணம் பெண்களின் கருவளத்திற்கு பெரிதும் நன்மை பயப்பதாக உள்ளது. கசகசா விதைகளின் எண்ணை கருக்குழாய் கழுவப்பட்டு தூய்மையாக்கப்படுபவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் பெண்களின் கருவுறும் விகிதம் அதிகரிக்கிறது. இது கருக்குழாயிலுள்ள கருச் சிதைவுகள் அல்லது சளி போன்ற திரவ கசடுகளை நீக்குகிறது. இது சுமார் 40 சதவிகித பெண்களுக்கு நேர்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது. மேலும், கசகசா விதைகள் உங்கள் பாலியல் எண்ணெங்களை தூண்டுவதாக உள்ளது. ஆண்மையையும் பாலுணர்ச்சியையும் அதிகரித்து ஆரோக்கியமான பாலியல் உறவை மேம்படுத்துகிறது.
poppy seeds in tamil
ஆற்றலை அதிகரிக்கிறது
கடினமான வேலைகளை செய்வதற்கு ஆற்றல் அளவை அதிகரிக்க நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் தேவைப்படுகிறது. கசகசா விதைகள் கலப்பு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இது உடலில் கரையும் போது ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மேலும் சோர்வுக்கு வழிவகுக்கும் கால்சியம் குறைபாடு ஏற்படும் போது, கச கசா போதுமான கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.
கண்களுக்கு சிறந்தது
கசகசா விதைகளில் உள்ள துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம், பார்வையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் கண் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
poppy seeds in tamil
வாய்ப்புண்ணை குணப்படுத்துகிறது
உங்களுக்கு வாய்ப்புண் இருந்தால் கசகசா விதைகளின் குளிர்ச்சியான மூலக்கூறுகள் உங்களுக்கு நன்மை தரக்கூடியது. இந்தப் பிரச்சனைக்கு கசகசாவை பொடித்த சர்க்கரை மற்றும் கொப்பரைத் தேங்காய்த் துருவலுடன் சேர்த்து சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உங்களுக்கு வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது
கசகசா விதைகளில் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் தாமிரம் ஆகியன அடங்கியுள்ளன. இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு அத்தியவசியமானதாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்த உதவுகிறது மேலும் மூளையின் ஒழுங்கான இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும் இது அறிவுத்திறன் மங்கும் குறைபாட்டை குறைக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது.
எலும்புகளை பலப்படுத்துகிறது
நமது எலும்புகளின் வலிமைக்கு போதுமான கால்சியம் மற்றும் தாமிரச் சத்து தேவைப்படுகிறது. 40 வயதுக்குப் பிறகு எலும்புகள் தேயத் தொடங்குகின்றன. அப்போது மக்கள் கால்சியம் மாத்திரைகளை தேர்ந்தெடுக்கின்றனர். கசகசா விதைகள் எலும்புகளையும் அத்துடன் தொடர்புடைய திசுக்களையும் பலப்படுத்தக்கூடிய இயற்கையான மூலக்கூறு ஆகும். இதில் செறிந்துள்ள பாஸ்பரஸ் எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. இதைத் தவிர கசகசா விதைகளில் அடங்கியுள்ள மாங்கனீசு எலும்புகளை தீவிரமான காயங்களிலிருந்து காப்பதற்கு உதவுகிறது.
poppy seeds in tamil
இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்துகிறது
நீங்கள் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் கசகசா அதிகம் அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் உங்களுக்கு நன்மை தரும். கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஓலிக் அமிலம் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
கசகசா விதைகளில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இதில் உள்ள துத்தநாக மூலக்கூறுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் முக்கியமாக தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இந்த விதைகள் உடலில் நோயெதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
poppy seeds in tamil
இதயத்துக்கு நல்லது
கசகசாவில் அடங்கியுள்ள துத்தநாகம் சுவாசக் கோளாறுகளை சீர்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த கசகசா விதைகள் உண்ணக்கூடிய நார்ச்சத்து நிறைந்த இயற்கை மூலக்கூறு ஆகும். இது உடலில் கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமன்றி கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஒமேகா - 3 மற்றும் ஒமேகா - 6 மூலக்கூறுகள் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு நன்மை புரிகிறது.
நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது
கசகசா விதைகளின் ஏராளமான மருத்துவப் பயன்களுடன் இது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் முறைப்படுத்துகிறது. நீரழிவு நோயாளிகளுக்கு கசகசா விதைகளில் அடங்கியுள்ள உயர் அளவு நார்ச்சத்தும் மாங்கனீசும் சர்க்கரை நோய்க்கு குணமளிப்பதற்கு சிறந்தது.
கேன்சரைத் தடுக்க உதவுகிறது
ஓபியம் கசகசா விதைகளிலிருந்து பிரத்தெடுக்கப்படும் நாஸ்காபைன் என்றழைக்கப்படும் ஒரு மருந்து மூளைக்கட்டிகளையும் மற்றும் மார்பக மற்றும் புராஸ்டேட் கேன்சர் செல்களுக்கு சிகிச்சையளிக்க சிறந்த திறன் வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது.
poppy seeds in tamil
கசகசா விதைகளிலுள்ள கார்சினோஜென் என்னும் நச்சுகளை நீக்கும் நொதியும் குளுடதைன் (ஜிஎஸ்டி) என்னும் கடத்தியும் கிட்டத்தட்ட 78 சதவிகிதம் வரை கேன்சர் செல்கள் பரவுவதை தடுக்கிறது. மேலும் இந்த கசகசா செடியின் தாய்த்திரவம் கூட கேன்சர் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
poppy seeds in tamil
சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
சிறுநீரகக் கற்களால் அவதிப்படுபவர்கள் கசகசா விதைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணலாம். ஏனென்றால் இது சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதுடன் மீண்டும் வராமல் தடுக்கிறது. ஆனால் ஹைப்பர் ரோக்ஸ்லூரியாவால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் கசகசாவை தவிர்த்து விடுங்கள் அல்லது கசகசா சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதில் அடங்கியுள்ள ஆக்சாலிக் ஆசிட் கால்சியம் ஆக்ஸலேட் (சிறுநீரகக் கற்கள்) உற்பத்தியை தூண்டும் அபாயம் உள்ளது.
தைராய்டு செயல்பாட்டிற்கு நல்லது
கசகசாவில் அடங்கியுள்ள தைராய்டு சுரப்பிக்கு தேவையான முக்கிய மூலக்கூறான துத்தநாகம் தைராய்டு சுரப்பியின் இயக்கத்திற்கு உதவுகிறது. அயோடின் சேர்க்கப்பட்ட கசகசா விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தைராய்டு செயல்பாட்டில் ஏற்படும் அயோடின் குறைபாட்டை குறைக்க உதவுகிறது.
poppy seeds in tamil
தீவிரமான கண் நோய்களைத் தடுக்கிறது
கசகசா விதைகள் உங்கள் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது மேலும் கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகளும் மற்றும் துத்தநாகமும் தீவிர கண் பிரச்சனையான கருவிழி படலத்தின் நசிவால் ஏற்படும் குருட்டுத்தன்மையை தடுக்க உதவுகிறது.
தூக்க பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது
நீங்கள் அளவுக்கதிகமான மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் உள்ளவர்களுக்கு ஒரு குவளை கசகசா பானம் குடிக்கக் கொடுத்தால் அது கார்டிசால் அளவைக் குறைத்து உங்கள் உடலை அமைதிப்படுத்துவதன் மூலம் மன அழுத்த அளவைக் குறைக்கிறது. அதிலும் குறிப்பாக கசகசாவில் உள்ள ஓபியம் போதுமான தூக்கத்தை தூண்டுகிறது.
poppy seeds in tamil
கசகசா விதைகளில் தேநீர் தயாரித்துக் குடியுங்கள் அல்லது கசகசாவை பேஸ்டாக அரைத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து இரவில் படுக்கப் போவதற்கு முன் குடியுங்கள். இது உங்கள் தூக்கமற்ற இரவுகளின் பிரச்சனையை முற்றிலும் ஒழித்துவிடும்.
எனவே, இவை தான் கசகசா விதைளின் முக்கிய நற்பயன்களாகும். இது உங்கள் உடலில் உள்ள எந்த நோயாக இருந்தாலும் இயற்கையாக தீர்த்து விடும். இருந்தாலும், நோய்கள் மிகப் பெரிய வடிவில் இருந்தால் சிறந்த வழிகாட்டுதலுக்கு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. மேலும், உங்கள் குழந்தைக்கு கசகசா விதைகளை கொடுப்பதற்கு முன் ஒரு குழந்தை நல சிறப்பு மருத்துவரை கலந்தாலோசித்து கொடுக்கலாம். இதனால் குழந்தையின் உடலில் தீங்கான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu