placenta meaning in tamil-கருவில் குழந்தை மூச்சுவிட ஆக்சிஜன் தருவது நஞ்சுக்கொடி..! எப்டீன்னு தெரிஞ்சுக்கோங்க..!
placenta meaning in tamil-நஞ்சுக்கொடி என்பது பிரசவத்தின் பொது தனியாக வெட்டி எடுத்து அகற்றப்படும் பிரசவ காலத்து தனி உறுப்பாகும்.
HIGHLIGHTS

placenta meaning in tamil-நஞ்சுக்கொடி (கோப்பு படம்)
placenta meaning in tamil-நஞ்சுக்கொடி என்பது பிளாஸ்டோசிஸ்ட் எனப்படும் கருமுட்டையில் இருந்து உருவாக்கப்படும் குழாய். இந்த பிளாஸ்டோசிஸ்ட் என்னும் முட்டை தான் குழந்தையை உருவாக்கும். குழந்தையை உருவாக்கும் அந்த கருமுட்டையில் இருந்து தான் நஞ்சுக்கொடியின் நீட்சி உருவாகிறது. இந்த நீட்சியில் இருந்துதான் தொப்புள் கொடி தோன்றி தாயையும் குழந்தையையும் இணைக்கிறது.
பலருக்கு தொப்புள் கொடி எவ்வாறு தாயையும் குழந்தையையும் இணைக்கிறது? நஞ்சுக்கொடி என்பது என்ன? இது எப்படி உருவாகிறது? போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருப்பார்கள். நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள்கொடி பொன்றைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம் வாங்க.
placenta meaning in tamil
நஞ்சுக்கொடி, தொப்புள் கொடி
பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன், அவர்களின் வயிற்றில் குழந்தை உருவாகத் தொடங்கும் நேரத்தில், குழந்தையுடன் சேர்ந்து அதே கருமுட்டையில் இருந்து, கருமுட்டையின் ஒரு பகுதியில் உருவாகும் குழாய் வடிவ உறுப்புதான் இந்த நஞ்சுக்கொடி. நஞ்சுக்கொடியில் இருந்து உருவாகும் இந்த நீட்சி தொப்புள் கொடியாக கருவறையில் குழந்தையுடன் இணைக்கிறது. இந்த குழாய் சக்தி பரிமாற்ற குழாய் போன்று செயல்படுகிறது.
ஆமாம், நஞ்சுக்கொடி தாயின் உடலில் இருந்து தேவையான சத்துகளை உள்வாங்கி அதை தொப்புள் கொடி வழியாக குழந்தைக்குச் சேர்க்கிறது.
கொடிகளின் நிலை எப்படி இருக்கும்?
நஞ்சுக்கொடி எப்பொழுதும் கருவறையின் மேல் பகுதியில் இருப்பது நல்லது. இந்த நஞ்சுக்கொடியை பற்றி சரியான புரிதல் கணவன் மற்றும் மனைவிக்கும் தெரிந்திருக்கவேண்டும். இதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்று கர்ப்பிணி பெண்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் கணவர்களும் நன்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த நஞ்சுக்கொடியின் நிலை மாற்றம் அடைந்தால் கர்ப்பிணி பெண்களின் பிரசவத்தில் ஏதேனும் பிரச்னைகள் நிகழ வாய்ப்புள்ளது.
இதைத்தான் கொடி சுற்றி இருத்தல் என்று கூறுவார்கள். அது போன்று பல வித பிரச்னைகளை இந்த கொடிகளின் நிலை மாற்றத்தால் ஏற்படும். கர்ப்பிணி தாய் படுக்கும்போது கவனமாக ஒருக்களித்து படுக்கவேண்டும். மல்லாந்து படுக்கக் கூடாது என்பார்கள்.
நஞ்சுக்கொடியின் வேலை
நஞ்சுக்கொடிதான் கருவறையில் வளரும் கருவிற்கு தேவையான உணவு, ஆக்சிஜன் போன்ற முக்கிய ஆதாரங்களை கொடுசெல்லும் வாகனம். ஆமாம் கருவில் வளரும் குழந்தைகள் நஞ்சுக்கொடி மூலமாகவே சுவாசிக்கிறார்கள்.நஞ்சுக்கொடிதான் கருவறையில் குழந்தைகள் உயிர்வாழ தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது.
placenta meaning in tamil
நஞ்சுக்கொடி வெட்டுதல்
பிரசவசமயத்தில் குழந்தைகள் பிறக்கும் சமயத்தில் மூச்சு விடுவதற்காக நஞ்சுக்கொடி திரவம் குழந்தையின் நுரையீரலில் சிறிதளவு இருக்கும். அதன் உதவியால் குழந்தைகள் பிரசவ சமயத்தில் சுவாசித்து, கருவறையில் இருந்து வெளிவந்த பின், சாதாரண மனிதர்களை போல சுவாசிக்கத் தொடங்குகின்றனர்.
குழந்தைகள் பிறந்த பின் தொப்புள் கொடி வெட்டப்பட்டப்பின் நஞ்சுக்கொடியும் குழந்தையின் உடலின் இணைப்பில் இருந்து அகற்றப்படுகிறது.
நஞ்சுக்கொடி முந்தும் பிரசவம்
நஞ்சுக்கொடி முந்து பிரசவம் என்பது நஞ்சுக்கொடியின் நிலை மாறி, அது தாயின் பிறப்புறுப்பை முழுமையாக மூடிக்கொள்ளுதல் அல்லது பாதி அளவுமூடிக்கொள்ளுதல் என்பது தான். பொதுவாக நஞ்சுக்கொடி கருவறையின் மேற்புறத்தில்தான் இருக்கவேண்டும். அந்த நிலையில் இருந்து மாற்றம் அடைந்து கீழாக வந்து விட்டால், குழந்தை வெளியே வருவதில் சிக்கல் ஏற்படும். அதனால் பிரசவத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படலாம்.
ஆனால், தற்போதைய மருத்துவ வளர்ச்சியால் நஞ்சுக்கொடி நிலை மாற்றம் அடைந்திருந்தால் பிரசவத்துக்கு முன்னரே மருத்துவர்கள் கண்டறிந்து அதற்கேற்ப பிரசவம் பார்க்கின்றனர். அறுவை சிகிச்சை செய்து குழந்தையையும் தாயையும் பாதுகாக்கின்றனர்.