/* */

ஏழைகளின் ஆப்பிள் தெரியுமா உங்களுக்கு? அட நம்ம பேரிக்காய்தாங்க..! நன்மைகளை தெரிஞ்சுக்கங்க..!

Berikai Fruit Benefits in Tamil-பேரிக்காய் இரண்டு வகைகளில் தமிழகத்தில் கிடைக்கிறது. ஒன்று உருண்டையாக பெரிய காயாக இதுக்கும். மற்றொன்று தலைப்பகுதியில் கழுத்துபோல நீண்டிருக்கும் வால்பேரி.

HIGHLIGHTS

Berikai Fruit Benefits in Tamil
X

Berikai Fruit Benefits in Tamil

Berikai Fruit Benefits in Tamil

ஏழைகளின் ஆப்பிள் என்று பேரிக்காயை கூறுவடைத்து வழக்கம். தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் ஏராளமாக விளைகிறது. இதுவும் ஆப்பிளைப் போன்றே அதிக சத்துக்களைக் கொண்டது. பேரிக்காய். பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. நல்ல நீர்ச்சத்துமிக்கது. இதை கழுவிட்டு அப்படியே கடித்து சாப்பிடலாம்.

கெட்ட கொழுப்பு நீங்க

பேரிக்காயை உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கெட்ட கொழுப்பு உடலில் தங்குவதைத் தடுத்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. பேரிக்காயில் நார்ச்சத்துக்களோடு சேர்த்து கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் எனப்படும் குறிப்பிடத் தக்க இரு வகையான ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் சேராமல் தடுக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளன.

நடுக்கம்

திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும். வியர்வை ஏற்படும். கை, கால்களில் நடுக்கம் ஏற்படுவதுபோலத் தோன்றும். இப்படி பலமற்று இருப்பவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனம் இல்லாமல் நீங்கிவிடும்.

சீரான சிறுநீரக செயல்பாட்டுக்கு

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பழமாக கருதப்படுகிறது. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கவும் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

எலும்பு, பல் வலிமை பெற

பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படுகிறது. இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.

வயிற்றுப்போக்கு கட்டுப்பட

அடிக்கடி பேரிக்காய் உண்ணும்போது நல்ல பசி எடுக்கும். அதேநேரத்தில் நல்ல ஜீரண சக்தியும் கிடைக்கும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.

பேரிக்காய் தோல்

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் பேரிக்காயில் சிறப்பு. பேரிக்காயைத் தோலுடன் அப்படியே சாப்பிடும்போது, அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது.

யூரிக் அமிலம் சேராமல் தடுக்க

யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறாமல் உடலில் தங்கினால் அதனால் சிரமம் ஏற்பட்டு கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுவிடும். அவ்வாறு உடலில் சேர்ந்த இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. அதனால் பேரிக்காயை சாப்பிட்டால் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை இலகுவாக வெளியேற்றுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 18 March 2024 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...