/* */

மாதவிடாயின்போது வலி ஏற்படுவது ஏன்..? என்ன செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

Ovulation Symptoms in Tamil -பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் அண்டவிடுப்பு வலி உருவாவது இயல்பு. அது எப்படி ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

HIGHLIGHTS

மாதவிடாயின்போது வலி ஏற்படுவது ஏன்..? என்ன செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
X

ovulation symptoms in tamil-அண்டவிடுப்பு அறிகுறிகள் (கோப்பு படம்)

Ovulation Symptoms in Tamil -பெண்கள் பருவமடைந்தது முதல் அவர்களுக்கான கருமுட்டை உற்பத்தி தொடங்கிவிடுகிறது. அதாவது பருவம் அடைவது, அடுத்த தலைமுறையை உருவாக்கும் தகுதிபெற்றுவிட்டதை உறுதிப்படுத்தும் நிலையே பருவமடைதல்.

மாதவிடாய் சுழற்சியில் முதிர்ந்த கருமுட்டைகள் வெளியேற்றப்படுவதே அண்டவிடுப்பு(Ovulation) எ எனப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம் வாங்க.

அண்டவிடுப்பு வலி என்றால் என்ன ?

அண்டவிடுப்பு என்பது மாதவிடாயின்போது கருப்பை ஒரு முட்டையை கருப்பை குழாயினுள் (fallopian tube) வெளியிடும் ஒரு இயக்கம். இது பொதுவாக இரண்டு மாதவிடாய் சுழற்சிகளின் நடுவில் நிகழ்கிறது. எனவே, அண்டவிடுப்பின் வலி மாதவிடாயின் நடு சுழற்சி வலி (mid cycle pain) என்றும் அழைக்கப்படுகின்றது.

பெண்களின், கர்பக்காலத்தை தவிர ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பு ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் அண்டவிடுப்பு ஏற்படுவதில்லை. அண்டவிடுப்பின் வலியை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அனுபவிக்கின்றனர். சில பெண்களுக்கு திடீரென கடுமையான வலி ஏற்படுகிறது. எனினும், இந்த வலி சில கணங்கள் மட்டுமே நீடிக்கிறது. சில பெண்களுக்கு லேசான வலியே ஏற்படுகின்றது. இந்த வலி சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை நீடிக்கிறது.


ovulation symptoms in tamil

அண்டவிடுப்பின் வலி ஒரே இடத்தில் ஏற்படாது. ஏனெனில் ஒரு பெண்ணின் கருவறைகள் இருபுறமும் உள்ளது. அதனால் கருப்பையின் இருபுறத்திலிருந்தும் கரு முட்டை வெளியேறுகின்றது. சில சமயங்களில் அண்டவிடுப்பின் வலி கடுமையாகும் போது, பெண்கள் அதை அப்பன்டிக்ஸ் வலி என கருதுகின்றனர். ஒரு பெண் 3 நாட்களுக்கு மேலாக அண்டவிடுப்பின் வலியால் அவதிப்பட நேரிட்டால் அல்லது மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

அண்டவிடுப்பு வலிக்கான காரணங்கள் என்ன?

அண்டவிடுப்பினால் கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியே வரத் தொடங்கும். அப்போது ​​பெண்கள் வலியை உணரத்தொடங்குகின்றனர். அண்டவிடுப்பின் பின்னர், ஃப்லோப்பியன் குழாய் ஒரு முட்டையை வழங்க சுருங்குகிறது. இந்த சுருக்கமே வலி மற்றும் தசைப் பிடிப்பை ஏற்படுத்துகிறது.

அண்டவிடுப்பின் போது, ​​கருப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள மென்மையான தசைகள் சுருங்குகின்றன. இதனால் வலி அதிகரிக்கிறது. மேலும், இந்த புரோஸ்டாக்லாண்டின் லிப்பிட் கலவையே மாதவிடாய்க்கு முக்கிய காரணமாகும்.

பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்தில் பல நுண்ணறைகள் (follicles) ஏற்படத் தொடங்குகின்றன. எனினும், இவற்றில் ஒன்றே பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக கருமுட்டையின் இருபுறமும் நுண்ணறைகள் முதிர்ச்சியடைவதாக அறியப்பட்டுள்ளது. இதனால் அண்டவிடுப்பின் வலி அவ்வப்போது இருபுறமும் ஏற்படுகிறது.


அண்டவிடுப்பு வலியின் அறிகுறிகள் யாவை?

ovulation symptoms in tamil

ஒரு பக்கம் வயிற்று வலி

குறிப்பிட்ட நாட்களில் மாதவிடாயை வழக்கமாகக் கொண்ட பெண்கள் அண்டவிடுப்பின் செயல்முறையை எளிதில் புரிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இருப்புறத்திலும் வலி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த வலி திடீரென எச்சரிக்கையின்றி ஏற்படுகின்றது. இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை நீடிக்கலாம். சில பெண்களுக்கு மலம் வெளியேறுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு வலியுடன் வயிற்று வலியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

அண்டவிடுப்பு வலிக்கான சிகிச்சைகள் என்ன?

அண்டவிடுப்பு வலி பொதுவாக 24 மணி நேரத்திற்குள் குறைகிறது. இதற்கு எந்தவொரு சிறப்பு சிகிச்சையும் தேவையில்லை. எனினும், சில பெண்கள் இதனால் அதிக வலியை அனுபவிக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சிறிது நேரம் கழித்து இந்த வலி தானாகவே குறைகிறது. சில பெண்கள் நீண்ட நேரம் வலியை அனுபவிக்கிறார்கள்.வலிமிகுதியாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

வலி மாத்திரைகள் :

இபுரூஃபன், அசிடொமினோபன், காஉண்டர் போன்ற வலியை குறைக்கும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உட்கொள்ளலாம். வலி ஏற்படுவதற்கு எந்தவித மருத்துவ காரணங்களும் இல்லையெனில், மருத்துவர் வேறு சில ஆலோசனைகளை வழங்குவார். அதனால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

ஓய்வு

வலி உண்டாகும் போது படுக்கையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். வலியிலிருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில், நீங்கள் அழற்சி எதிர்ப்பு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

கருத்தரிக்க விரும்பினால், மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும். கருத்தடை மாத்திரைகளும் மற்றும் பிற கருத்தடை மருந்துகளும் அண்டவிடுப்பின் ஹார்மோன் செயல்முறையைத் தடுக்கிறது. இதன் விளைவாக அண்டவிடுப்பின் வலி குறைகிறது. மேலும், இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்வதே பாதுகாப்பானது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Aug 2022 10:10 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..