Omicron virus symptoms in tamil-ஒமிக்ரான் இருந்தா இதெல்லாம் அறிகுறி..!
Omicron virus symptoms in tamil-ஒமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் (கோப்பு படம்)
Omicron virus symptoms in tamil
கொரோனா தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகளானது, தற்போது மாறியுள்ளது. ஆரம்பத்தில் வந்த ஒமிக்ரான் தொற்றுடன் ஒப்பிடும்போது அறிகுறிகள் சற்று வித்தியாசமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
Omicron virus symptoms in tamil
கொரோனா தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகளானது, தற்போது மாறி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் வந்த ஒமிக்ரான் தொற்றுடன் ஒப்பிடும்போது அறிகுறிகள் சற்று வித்தியாசமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து வைரஸ்களுக்கும் பொதுவான ஒரு பண்பு உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அவை நிரூபிக்கின்றன. SARS-CoV-2 என்பது, 2019 இல் கண்டறியப்பட்ட வைரஸாக இருந்தாலும், பல முறை மாற்றமடைந்து புதிய மாறுபாடுகள் மற்றும் துணை வகைகளாக உருப்பெற்றன.
வைரஸ் கடந்து வந்த மிக ஆபத்தான பிறழ்வுகளில் ஒன்று டெல்டா ஆகும், இது இந்தியாவில் கோவிட்-19 இன் கொடூரமான இரண்டாவது அலைக்கு வழிவகுத்தது. இருப்பினும், டெல்டாவை முறியடித்து, COVID-19 இன் மிகவும் முக்கியமான விகாரத் தன்மை உடைய ஒன்றாக மாறிய மற்றொரு மாறுபாடு ஓமிக்ரான். கொரோனா வைரஸின் மாறுபாடு, அதன் ஸ்பைக் புரதத்தில் 42 க்கும் மேற்பட்ட கவலைக்குரிய பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.
Omicron virus symptoms in tamil
கொரோனா வைரிஸின் திரிபான ஒமிக்ரான் முந்தைய திரிபைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியதாக இருக்கிறது. எனவே மக்கள் எந்த மாதிரியான நோய் அறிகுறிகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதை காணலாம் வாங்க.
முந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படுகிறது.
அதனால்,சில அறிகுறிகள் ஏற்படும்போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுடுத்தப்படுகிறது. அவையாவன :
- தொடர்ச்சியான இருமல்
- காய்ச்சல் அல்லது அதிக உடல் வெப்பநிலை
- வாசனை அல்லது சுவையை இழத்தல் அல்லது மாறுபடுதல்
ஆனால் கோவிட் பாதிப்பு இருக்கும் சிலருக்கு, "மோசமான சளி இருப்பதைப் போல்," தலைவலி, தொண்டைப் புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Omicron virus symptoms in tamil
ஸோயி கோவிட் ஆய்வு (Zoe Covid App) என்ற செயலியில், லட்சக்கணக்கான மக்களிடம் அவர்களுடைய அறிகுறிகளைப் பதிவு செய்யும்படி கேட்டு, ஆதிக்கம் செலுத்தும் டெல்டா திரிபு மற்றும் தற்போது அதிகமாகப் பரவக்கூடிய புதிய திரிபான ஒமிக்ரான் ஆகிய இரண்டிலும் உள்ள அறிகுறிகளை புலனாய்வாளர்கள் பார்த்து வருகின்றனர்.
முதல் ஐந்து அறிகுறிகள்:
- மூக்கு ஒழுகுதல்
- தலைவலி
- லேசான அல்லது கடுமையான சோர்வு
- தும்மல்
- தொண்டை வலி
உங்களுக்கு கோவிட் இருக்கலாம் என்று நினைத்தீர்களானால், பரிசோதனை செய்துகொள்வது அவசியம். உடல்நிலையில் பெரியளவுக்குப் பிரச்னை இல்லாமல் இருப்பவர்கள் கூட, மற்றவர்களை அபாயத்தில் தள்ளலாம். அதனால் சந்தேகம் ஏற்பட்டால் பரிசோதனை என்பது அவசியம்.
மீண்டும் வரலாம்
மீண்டும் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மக்களை தீவிரமாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒமிக்ரான் ஏற்கனவே பாதித்தவர்களையும் மீண்டும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது மேலும் பிறழ்ச்சியடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் தொற்றும்போது ஏற்படும் அறிகுறிகள் வாசனை இழப்பு அல்லது காய்ச்சல் என்பதுடன் நின்றுவிடவில்லை.
வேறு சில அறிகுறிகளையும் இந்த கோவிட் நோய் ஏற்படுத்துகிறது. ஓமிக்ரான் வகை மாறுபாடு, கொரோனாவின் மிகவும் பிறழ்ந்த பதிப்பாகும். இதன் துணை-வேறுபாடு BA.5 அதன் ஸ்பைக் புரதத்தில் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக உருவாகியிருக்கிறது.
COVID-19 இன் மிகவும் பிறழ்ந்த பதிப்பு ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் 2021 நவம்பர் மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இந்த மாறுபாடு பல முறை பிறழ்ந்து, புதிய வகைக கொரோனா மாறுபாடுகள் ஏற்படவும் வழிவகுத்தது. உலகெங்கிலும் தங்கள் தாக்கத்தைக் கொண்டிருக்கும் BA.4 மற்றும் BA.5 என இரண்டு வைரஸ்களும் மிகவும் ஆபத்தான துணை வகைகளாகும்.
ஒமிக்ரானின் பொதுவான அறிகுறிகள் என்ன?
ஒமிக்ரானின் வளர்ந்து வரும் தொற்றுநோயைத் தவிர்க்க, அதன் அனைத்து அறிகுறிகளையும் அறிந்திருப்பது அவசியம். பொதுவாக இருமல், சோர்வு, கன்ஜெஷன் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை ஓமிக்ரான் மாறுபாட்டின் நான்கு பொதுவான அறிகுறிகளாகும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பகுப்பாய்வு மையம் தெரிவித்துள்ளது.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியரான டிம் ஸ்பெக்டரின் கூற்றுப்படி, லேசான காய்ச்சல், சோர்வு, தொண்டை வலி, உடல்வலி, இரவில் வியர்த்தல் ஆகியவை ஒமிக்ரான் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஒமிக்ரான் வகைகளின் முக்கிய மூன்று அறிகுறிகள் என்னவென்று பார்போம்.
தொண்டை வலி:
தொண்டை புண் (Soar Throat) என்பது ஒமிக்ரான் வகைகளின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இது தொண்டையில் வலி மற்றும் எரிச்சாலை ஏற்படுத்தும். ஒமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிந்த முதல் நபரும் இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, கோவிட்-19 இன் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் லேசான காய்ச்சலுடன் தொண்டை புண் இருப்பதாக கூறுகிறார்கள்.
தலைவலி:
தலைவலி என்பது பல காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு நிலை. ஆனால் கோவிட்-19 அல்லது ஒமிக்ரான் மாறுபாட்டைப் பொறுத்த வரை, அது அதிகாரப்பூர்வ அறிகுறி பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். தலைவலி என்பது ஒரு பொதுவான பாதிப்பாகும். இது தொற்றுக்குப் பிறகு உடலில் ஏற்படும் அழற்சியைக் கொடுக்கிறது.
மூக்கு ஒழுகுதல்:
பெரும்பாலான ஒமிக்ரான் அறிகுறிகள் சளி அல்லது காய்ச்சலுடன் ஒத்துப்போவதால், அது கோவிட்-19 -ன் அறிகுறியா அல்லது ஜலதோஷமா என்ற சந்தேகம் எழுகிறது. மூக்கு ஒழுகுதல் என்பது கொரோனா வைரஸுடன் தொடர்புடைய ஒரு அறிகுறியாகும். கோவிட்-19 நோயாளிகளுக்கு மூக்கு ஒழுகுதல் மிகவும் பொதுவான அறிகுறியாகவே மாறிவிட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu