Olive Oil for Skin Whitening-ஆலிவ் ஆயில் அழகை கூட்டும்..!

olive oil for skin whitening-ஆலிவ் எண்ணெய் நன்மைகள் (கோப்பு படம்)
Olive Oil for Skin Whitening
நமது முக சருமம் ரொம்பவும் சென்சிடிவ் ஆனது. மிருதுவான தோல் அமைப்பு கொண்டுள்ள முகம் வெகு விரைவாகவே எதையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. முகத்தில் எப்பொழுதும் ஈரப்பதமும், சுத்தமும் இருந்தால் தான் என்றென்றும் 16 போல இளமையாக இருக்க முடியும்.
உங்களுடைய சருமம் 10 வயது குறைந்தது போல இளமையான தோற்றத்துடன் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! வாருங்கள் பதிவில் தொடர்ந்து பார்ப்போம். முகத்தை அடிக்கடி கைகளை கொண்டு தொடக்கூடாது.
Olive Oil for Skin Whitening
கைகளில் இருக்கும் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், நம்முடைய சரும ஆரோக்கியத்தை பாதித்துவிடும். இதனால் முகத்தில் பருக்கள் உண்டாவது, தடிப்புகள், வீக்கம், புள்ளிகள் ஆகியவை தோன்றுவது போன்ற பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். வெளியில் எங்காவது சென்று வந்து விட்டால் கண்டிப்பாக முகத்தை ஒருமுறை சாதாரண தண்ணீரால் கழுவி கொள்வது நல்லது.
இதய நலத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆலிவ் எண்ணெய். கொலஸ்டிரால் மிகவும் குறைந்த அளவில் இந்த எண்ணெய்யில் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்த பாதிப்புள்ளானவர்களுக்கும் ஆலிவ் எண்ணெய் நன்மை செய்கிறது. மேலைநாடுகளில் சமையலுக்கும் சருமப் பாதுகாப்புக்கும் ஆலிவ் எண்ணெய் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் ஆலிவ் எண்ணெயின் நன்மை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
Olive Oil for Skin Whitening
இதனால் ஆலிவ் எண்ணெயை வைத்து சமையல் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது சமையல் தவிர சருமப் பாதுகாப்புக்கும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம் என உணவியல் துறை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
எனவே ஆலிவ் எண்ணெய் என்பது உங்கள் சமையல் அறையில் மட்டும் பயன்படும் பொருள் அல்ல. இதை உங்கள் சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகளை சரிசெய்யவும் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஆலிவ் எண்ணெய் பயன்பாடுகள்
சன்ஸ்கிரீன்: இதை டீ டிக்காஷனோடு சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகம் முழுவதும் பூசவும். 1 மணி நேரம் கழித்து நீரால் அலசவும். சருமத்தில் இந்தக் கலவை சன்ஸ்கிரீனாக செயல்படும்.
வலி நிவாரணி: ஆறு துளி லேவண்டர் எசன்ஷியல் ஆயிலுடன், 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலக்கி வலி உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும்.
Olive Oil for Skin Whitening
வறண்ட சருமம்/கூந்தலுக்கு: முட்டையின் மஞ்சள் கருவுடன் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை கலக்கி, முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவவும். மஞ்சள் கரு, ஆலிவ் ஆயில் கலவை, வறண்ட கூந்தலையும் சரி செய்ய உதவும்.
உடையும் நகத்துக்கு: 1 கப் ஆலிவ் ஆயிலுடன், ஒரு துளி எலுமிச்சை, யூகலிப்டஸ் எசன்ஷியல் ஆயிலை சேர்த்து, அதில் நகங்களை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்களுடைய நகங்கள் பலமடைந்து ஆரோக்கியமாகக் காட்சியளிக்கும்.
சருமம் வெள்ளையாக
தோல் பகுதிகள் வெள்ளையாக மாற பவுலில் கஸ்தூரி மஞ்சள் தூள் 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில் 3 அல்லது 4 ட்ராப்ஸ்கள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்ததை தோல் பகுதியில் இரவு நேரத்தில் தடவி வரவேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்தால் தோலிற்கு நல்ல மாற்றம் தெரியும். தடவியதை காலையில் வாஷ் செய்து கொள்ளலாம்.
Olive Oil for Skin Whitening
பாத வெடிப்பு
அனைவருக்கும் பாதங்களில் வெடிப்பு வருவது இயல்பு. பாத வெடிப்பு நீங்க வாஸ்லின் மற்றும் 2,3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை சேர்த்து வெடிப்பு பகுதியில் மசாஜ் செய்து சாக்ஸ் அணிந்தால் விரைவில் வெடிப்பு நீங்கும்.
முகம் பளிச்சிட
பெண்கள் அனைவருக்கும் ஃபேஸ் பேக் போடும் வழக்கம் இருக்கும். இதற்கு கடைகளில் விற்கும் முல்தானிமிட்டி உபயோகிப்பார்கள். முல்தானிமிட்டி சருமத்தை வறண்ட நிலையில் ஏற்படுத்திவிடும். அதனால் முல்தானிமிட்டியுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வர முகம் விரைவில் பளிச்சென்று இருக்கும். இந்த டிப்ஸ் சரும பிரச்சனை உள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu