அது என்னங்க ஆயில் புல்லிங்..? எப்படி செய்வது..? அதனால் என்ன நன்மை..?

oil pulling benefits in tamil-ஆயில் புல்லிங் என்றால் எண்ணெய் கொப்பளிப்பு என்பது பொருள். எண்ணெய் கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போமா..?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அது என்னங்க ஆயில் புல்லிங்..? எப்படி செய்வது..? அதனால் என்ன நன்மை..?
X

oil pulling benefits in tamil-ஆயில் புல்லிங். (கோப்பு படம்)

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

oil pulling benefits in tamil-ஆயில் புல்லிங்.. ஆயில் புல்லிங்.. இந்த வார்த்தையை சமீபகாலமாக அதிகமான விளம்பரங்களில் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். நல்லெண்ணெய்-ஐ வாயில் ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து கொப்பளிக்கும் முறையைத்தான் ஆயில் புல்லிங் என்று கூறப்படுகிறது.

இந்த ஆயில் புல்லிங் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் நம் முன்னோர்கள் கடைபிடித்த ஒன்று. இடையில் இந்த பழக்கம் முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டது. சமீபகாலமாக வழக்கத்திற்கு வந்துள்ளது. இந்த ஆயில் புல்லிங் செய்வதால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம் வாங்க.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் ஆயில் புல்லிங்கை தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

வாய் துர்நாற்றம்

ஆயில் புல்லிங் தொடர்ந்து செய்வதன் மூலம் வாயில் ஏற்படும் துர்நாற்றம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, பற்களின் பழுப்பு தன்மை போன்றவை நீங்கி வாய் சுத்தப்படுத்தப்படுகிறது.

உடற்சூடு குறையும்

உடலில் அதிகப்படியான பித்தம் உடையவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். சூட்டினால் இவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். உடலில் உள்ள பித்தம் குறைந்து, சூடு தணிந்து குளிர்ச்சியான நிலையைப் பெற ஆயில் புல்லிங் செய்வது நல்லது.

உற்சாகம் பெருக

சிலர் எப்பொழுதும் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக மந்தமாக இருப்பார்கள். இதனால் இவர்களது அன்றாட பணிகள் பாதிக்கப்படும். இப்படிப்பட்ட சோம்பேறித்தனம் உள்ளவர்களுக்கு ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பகல் பொழுதில் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்பவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கம் வரும் என்பதை மறுக்க முடியாது.

பார்வைத் திறன் அதிகரிக்க

நல்லெண்ணெய்- ன் குளிர்ச்சியால் கண்களில் உள்ள நரம்புகள் சீராக இயங்குகிறது. இதன் மூலம் கண் பிரச்னைகள் நீங்கி தெளிவான பார்வை கிடைக்கிறது.

சுவாசப் பிரச்னைக்கு தீர்வு

வறட்டு இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பிரச்னை இவைகளுக்கெல்லாம் ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

சரும பொலிவு

ஆயில் புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் சருமம் பொலிவாக காட்சியளிக்கும்.

மாதவிடாய் சீராக

oil pulling benefits in tamil-சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சீராக இருக்காது. ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நம் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் சமநிலை படுத்தப்பட்டு மாதவிடாய் சுழற்சி சீராக்கப்படுகிறது.

தைராய்டு

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் தைராய்டு ஹார்மோன் சீராக சுரக்கப்பட்டு, தைராய்டு பிரச்னையை கட்டுப்படுத்துகிறது.

மூட்டு பிரச்னைகளுக்கு தீர்வு

மூட்டு பிரச்னை உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் செய்து வருவதன் மூலம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் இவைகள் குறைக்கப்படுகிறது. தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் மூட்டு வலி முற்றிலும் வராமலும் தடுக்கலாம்.

மேற்கூறப்பட்ட பயன்களை முழுமையாக பெற ஆயில் புல்லிங் எப்படி செய்யவேண்டும் என்பது தெரியணும். எப்படி..?

ஆயில் புல்லிங் செய்யும் முறை

 • காற்றோட்டமாக உள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் நம் மீது படும்படி அமர்ந்து கொள்ள வேண்டும். கழுத்து பகுதி, தோல் பகுதி இவைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். நல்லெண்ணெய்-ஐ வாயில் ஊற்றி வாயின் எல்லா பாகங்களிலும் படும்படி சுழற்ற வேண்டும். வாயில் ஊற்றப்பட்ட எண்ணெயானது பசை போன்று வரும் வரை வைத்திருக்கலாம். அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் கசியும் வரை வைத்திருக்கலாம்.
 • ஆயில் புல்லிங்கை நல்லெண்ணெய் தவிர தேங்காய் எண்ணெய், பால், பழச்சாறுகள், கோமியம் மற்றும் தேன் போன்ற பொருட்களாலும் கொப்பளிக்கலாம். ஆனால், நல்லெண்ணெய் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நல்லெண்ணையை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வாயில் வைத்திருந்து கொப்பளித்து துப்புவது நல்ல பலனைத் தரும்.
 • oil pulling benefits in tamil-ஆயில் புல்லிங்கை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். ஆயில் புல்லிங் செய்து முடித்து சிறிது நேரம் கழித்துதான் காலை உணவு சாப்பிட வேண்டும்.
Updated On: 24 Aug 2022 11:15 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  2024 Instagram Trend Talk-இன்ஸ்டாகிராமை கட்டமைக்கும் இந்திய 'ஜென்...
 2. கல்வி
  Canada Student Visa Latest News-கனடாவில் படிக்க இந்திய மாணவர்கள்...
 3. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...
 4. தொழில்நுட்பம்
  83 Spanish Newspapers are Suing Meta-மெட்டா மீது ஸ்பானிஷ் ஊடகங்கள்...
 5. நாமக்கல்
  காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர்...
 6. தமிழ்நாடு
  ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
 7. தொழில்நுட்பம்
  Chandrayaan 3 Latest News-சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதைக்கு...
 8. ஈரோடு
  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக சரிவு
 9. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர்...
 10. டாக்டர் சார்
  Pani Vedippu குளிர்காலங்களில் ஏற்படும் பாத வெடிப்புகளைப் போக்க...