எண்ணி அடி எடுத்துவச்சா ஏழு வருஷம் ஆயுள் நீளும்..! எப்படி..? தெரிஞ்சுக்கங்க..!

Number of steps a day needed to stay healthy in Tamil, Number of Steps in Walking keeps Healthy, Number of steps a day needed to stay healthy, Walking Steps Keep Healthy
இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு சீராக இயங்க 2,300 அடி (ஸ்டெப்) போதுமானது. இருப்பினும், கூடுதல் முயற்சி எடுத்தால் நன்மைகளும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்யமாகவும் உறுதியான உடல் அமைப்புடனும் இருப்பதற்கு ஒரு நாளைக்கு நடைப்பயணத்தில் 5,000 க்கும் குறைவான அடிகள் தேவைப்படும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. போலந்து நாட்டில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றின் ஆய்வின் அடிப்படையில் உலகம் முழுவதும் 226,000 க்கும் அதிகமானவர்களிடம் ஆய்வு செய்ததில் 4,000 அடிகள் நடந்தாலே முன்கூட்டிய இறப்பைத் தள்ளிப்போடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் 4ஆயிரம் அடிகள் நடப்பவருக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் முன்கூட்டியே இறக்கும் அபாயத்தைக் குறைக்கத் தொடங்குகின்றன.
குறிப்பாக இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்ய 2,300 அடிகள் போதுமானது. இருப்பினும், கூடுதல் முயற்சி எடுத்தால் அதிக ஆரோக்ய நன்மைகள் உண்டாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 4 ஆயிரம் அடிகளுக்கு அப்பால் வைக்கப்படும் ஒவ்வொரு கூடுதல் அடியும் 20,000 அடிகள் வரை 15சதவீதம் இறக்கும் அபாயத்தை குறைக்கிறது என்றும் ஆய்வு கூறுகிறது.
'வாழ்க்கை முறை மாற்றங்கள் இருதய அபாயத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்'
லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மாசிஏஜ் பனாச் (Maciej Banach) நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை மட்டுமே ஆரோக்யத்தைப்பேண காரணியாக இருந்துவிட முடியாது என்று கூறினார்.
ஆய்வின் முக்கிய காரணியாக இருந்த உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், "குறைந்த பட்சம், அல்லது இன்னும் அதிகமாக, இருதய அபாயத்தைக் குறைப்பதற்கும், ஆயுளை நீடிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்பதை மக்கள் உணரவேண்டும் என்று பனாச் கூறினார்.
உலகளாவிய ஃபிட்னஸ் நிறுவனமான பாரியின் பயிற்றுவிப்பாளர் ஹனி ஃபைன், அதிகமாக உட்காருவதால் ஏற்படும் பிரச்னைகளை எடுத்துரைத்தார். பிபிசியிடம் பேசிய ஃபைன், அதிகமாக உட்கார்ந்திருப்பது வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்தும் மற்றும் தசை வளர்ச்சி மற்றும் வலிமையை பாதிக்கும். இது வலிகளை ஏற்படுத்தும்.
"அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது எல்லா வகையான முதுகுப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். அலுவலக வேலைகளில் இருப்பவர்களிடம் இதை அதிகம் காணமுடிகிறது. அவர்களின் முதுகு தொடர்ந்து அழுத்த நிலையில் வைக்கப்படுகிறது. இது பிற்கால வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது," என்று ஃபைன் மேலும் கூறினார்.
உடற்பயிற்சி அல்லாத செயல்பாடுகளான தெர்மோஜெனீசிஸின் (NEAT) முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். இது பயிற்சி செய்வோரின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது மற்றும் கலோரிகளை எரிக்கிறது.
நிற்பது, எடுத்துச் செல்வது, ஷாப்பிங் செய்வது, தரையைக் கழுவுவது உள்ளிட்ட பணிகள் மக்களை மிகவும் சுறுசுறுப்பாகச் செய்வதோடு, கலோரிகளை மிகவும் திறமையாக எரிக்க உதவுவதாக ஃபைன் கூறினார்.
நம்ம வேலைகளை செய்தாலே போதுமானது
இந்த ஆய்வுகளை கவனிக்கும்போது நம் முன்னோர்கள் செய்த வேலைகள் நினைவுக்கு வருகின்றன. நன்றாக எண்ணிப்பாருங்கள் விவசாய நிலங்களில் ஆண்கள் உழைத்தார்கள், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தியது. உழைத்த களைப்பில் உடல் ஆரோக்யமாக இருந்தது.
பெண்கள் கிணற்றில் நீர் இறைத்தார்கள், அம்மி அரைத்தார்கள், ஆட்டுரலில் மாவாட்டினார்கள். அவர்களுக்கும் உடல் ஆரோக்யமாக இருந்தது. உழைப்பை மறந்து நாற்காலி வேலையைத் தேடத் தொடங்கியபோதே நமது ஆரோக்யமும் அடகுப்போய்விட்டது. ஆமாம், நோய்களிடம் அடகு கொடுத்துவிட்டோம்.
இன்று நடைப்பயிற்சி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். நடந்தாவது ஆரோக்யம் பேணுங்கள். அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து ஆரோக்யம் பெறுவோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu