mustard in tamil-அடடே..கடுகில் இத்தனை நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

mustard in tamil-கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது அதன் மருத்துவ குணத்தை வைத்துத்தான் கூறியிருப்பார்கள் போலும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
mustard in tamil-அடடே..கடுகில் இத்தனை நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!
X

mustard in tamil-கடுகு (கோப்பு படம்)

mustard in tamil-5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடுஇருந்திருப்பது தெரியவந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகைகள் உள்ளன. இது சிறு செடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல கடுகில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. திரிகடுகம் என்று சொல்லப்படும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி அளவிலான ஆற்றல் கிடைக்கிறது. கடுகில் எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

mustard in tamil

உடல் ஆரோக்யம்

போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில், இவை பங்கெடுக்கக் முக்கிய காரணிகளாக இருக்கின்றது. நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பெரிதும் பங்கெடுக்கின்றன.

மருத்துவ பயன்கள்

இருமலை கட்டுப்படுத்த கூடியது. விஷத்தை முறிக்கவல்லது. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியது. ஒற்றைத் தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. விக்கலை கட்டுப்படுத்த கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் அத்தியாவசிய பொருளாக விளங்குவது கடுகு.

மைக்ரேன் தலைவலி

கடுகு மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குவதிலும் கடுகு முக்கிய பங்கு வகிக்கிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.


ஜீரணக் கோளாறு

ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தி தூண்டப்படும். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படாது.

உணவு உண்பதற்கு முன்பு கடுகை 20 நிமிடம் ஊறவைத்து, நன்றாக அரைத்து பாலில் கலந்து குடித்து வர ஜீரணசக்தி அதிகமாகும். அஜீரணக் கோளாறால் வாய்வுக் கோளாறால் வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

mustard in tamil

சைனஸ் பிரச்னைக்கு

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

விஷ முறிவுக்கு

சிலர் தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட நேரிட்டால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி எடுத்துவிடுவார்கள். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷம் வெளியேறிவிடும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும். காணாக்கடிகள் என்பது என்ன கடித்தது என்பதை அறியாத எந்த வகை கடிக்கும் கடுகை அரைத்து தடவினால் விஷம் எடுபட்டுவிடும்.


சிறுநீர் கோளாறு

கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிஅளவில் எடுத்துக்கொண்டு வெந்நீர் ஊற்றி களிபோல் கிளறி எடுத்து அதை இருமல், மூச்சுத்திணறல் இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் மற்றும் மூச்சு இளைப்பு இல்லாமல் போகும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் கடுகை அரைத்து பற்றுப் போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்

mustard in tamil

கருப்பைக் கட்டி

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வட இந்திய சமையலில் பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும். கருப்பைக் கட்டியை கரையாகி செய்வதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தினால் பல ஆரோக்ய நன்மைகள் கிடைக்கும். வயிறு வலி உள்ளவர்கள் வயிற்றின் மீது வெளிப்பூச்சாக கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசி, காலை நேரத்தில் வெந்நீரில் குளித்துவர வயிறு வலி நீங்கும். கடுகு பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை தீர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. நல்ல உறக்கத்தை தருகிறது.

Updated On: 23 Feb 2023 10:31 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
 2. இந்தியா
  Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
 3. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
 4. குமாரபாளையம்
  சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
 5. தேனி
  தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
 6. சிவகாசி
  சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
 7. நாமக்கல்
  புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
 8. நாமக்கல்
  மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
 9. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு
 10. தேனி
  தேனியில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள்...