mookirattai keerai-வாதம் போக்கும் மூக்கிரட்டை..! எல்லோருக்கும் அவசியமான ஒண்ணுங்க..!

mookirattai keerai-சாதாரணமாக சாலையோரங்களில் வளரும் சில செடிகள், மிகப்பெரிய மருத்துவ குணங்களை பெற்றிருக்கும். அதை அறிந்தால் நாமே வியந்து போவோம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
mookirattai keerai-வாதம் போக்கும் மூக்கிரட்டை..! எல்லோருக்கும் அவசியமான ஒண்ணுங்க..!
X

mookirattai keerai-மூக்கிரட்டை கீரையின் பயன்கள்.(கோப்பு படம்)

mookirattai keerai-சில செடிகளின் அளப்பரிய நற்பண்புகள் மூலமாக மட்டுமே அவற்றின் பயன்கள் நமக்கு தெரிய வரும். அந்த வகையில் வயல்வெளிகள் மற்றும் சாதாரணமாக எல்லா இடங்களிலும் இந்த செடி வளர்ந்திருக்கும். களைச் செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான் அரிய மூலிகையாக, அதுவும் ஆயுளை காக்கும் மூலிகையாக பயன்படுகிறது. தற்காலத்தில் நகரங்களில் இருக்கும் மூலிகை குறித்த விழிப்புணர்வு கிராமங்களில் இன்னும் பரவலாகவில்லை.


நிலத்தில் படர்ந்து வளரும் தன்மை கொண்டது. மூக்கிரட்டை செடி. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் இந்த மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, உடலின் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது. இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.

ஈரல்

நமது உடலில் இருக்கும் முக்கியமான ஒரு உள்ளுறுப்பான ஈரலில் பல்வேறு விதமான நச்சுக்கள் நமது உடல் வழியாக நுழைந்து தீங்கு ஏற்படுத்துவதை தடுக்கிறது. மூக்கிரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ஈரல் நன்கு பலம் பெறும். ஈரலில் ஏற்பட்டிருக்கும் எப்படிப்பட்ட குறைபாடுகளையும் போக்கும். பித்தநீர் சுரப்பை ஊக்குவிக்கும். உடலை பல்வேறு விதமான நோய்த் தாக்கங்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

mookirattai keerai


சிறுநீரகம் :

ஒருவரின் உடலுக்கு இதயத்தின் நலம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு அவரின் சிறுநீரகங்களின் நலமும் முக்கியமானது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.

கண்கள் :

எல்லோருக்கும் தெளிவான கண்பார்வை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், உண்மை நிலை அப்படி இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் சிலருக்கு கண்பார்வையில் தெளிவின்மை மற்றும் இன்னபிற குறைகள் ஏற்படுகின்றன. மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காயவைத்து, அரைத்து பொடியாக்கி அதை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண் சம்பந்தமான அத்தனை குறைகளையும் நீக்கிவிடும்.

மலட்டுத் தன்மை நீங்க :

மலட்டுத் தன்மை என்பது வயது வந்த ஆண் மற்றும் பெண் உடல்நலம் நன்றாக இருந்தும் சில காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையே மலட்டுத் தன்மை என்கிறோம். மூக்கிரட்டை கீரையை குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டுத் தன்மை நீங்கும்.

mookirattai keerai

மூக்கிரட்டை மருத்துவப் பயன்கள்

1.மூக்கிரட்டைச் செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாக இருக்கிறது.

2. மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம் போக்கவும், மூச்சிரைப்பைப் போக்கவும், கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைத்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்கிறது.

3.புற்று நோய்கள் ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி உடல் இளமையை தக்க வைக்கும்.

mookirattai keerai

4. மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.

மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை தெளிவாகும்.

5.மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.

6.மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வு பெறும். உடல் இளமைப்பொலிவுடன் காணப்படும்.


mookirattai keerai

7. மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும்.

மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் நன்றாக வேகவைத்து இட்டு அதை ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.

8. மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணெயில் இட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.

9. உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.

mookirattai keerai

10. இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.

Updated On: 6 Dec 2022 10:43 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...