வெயில் காலத்தில் குழந்தைகளை கவனமா பார்த்துக்கங்க..! அம்மை பாதிப்பு வரலாம்..!
measles in tamil-சின்னம்மைக்கான தடுப்பூசி .(கோப்பு படம்)
Measles in Tamil-தட்டம்மை, சின்னம்மை, சின்னமுத்து அல்லது மணல்வாரி அம்மை (Measles) என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நோய் பாராமைக்சோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி நுண்கிருமியால் ஏற்படும் ஓர் சுவாச தொற்றுநோயாகும்.
குழந்தைகளுக்கு வேகமாக தொற்றும்
சின்னம்மை மிக வேகமாக தொற்றும் பண்புடையது. குறிப்பாக குழந்தைகளை இலகுவாக தொற்றும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாக பரவலாம். சின்னம்மை தொற்று உடையவர் இருமுவதன் மூலமாகவோ, தும்முவதன் மூலமாகவோ காற்றில் இந்த வைரஸ் கிருமிகள் எளிதில் பரவும்.
சின்னம்மை ஏற்பட்டுள்ள கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவோ அல்லது கொப்புளம் உடைந்து அந்த நீர் பிறருக்கு ஏதோ ஒரு வழியில் ஒட்டினாலோ அந்த நோய் பரவலாம்.
உச்சி வெயில் பயணம்
அதேபோல சூரியக் கதிரின் நேரடி வெப்பம் படுவதால் மயக்கம், தலை சுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும். அதனால், உச்சிப்பொழுதான நண்பகல் முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே அவசியம் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வெள்ளை நிறக்குடை அல்லது தொப்பி அணிந்து செல்லலாம்.
கட்டுப்பாடான உணவு
அம்மை நோய் தாக்கியவர்கள் கண்ட உணவுகளையும் சாப்பிடக்கூடாது. கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். மருந்துகளும் உட்கொள்ளலாம். மருந்து எடுத்துக்கொண்டால் விரைவான குணம் கிடைக்கும். ஆனால், பெரும்பாலானவர்கள் அம்மைநோய் பாதிப்பு இருக்கும்போது மருந்துகள் உட்கொள்வதில்லை. அம்மை நோய் உறுதியாகிவிட்டால் அப்பொழுது முதல் நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், கஞ்சி போன்ற உணவுகளை சாப்பிடலாம். பழச்சாறுகள், பால் குடிப்பதும் நல்லது.
மசித்த உணவு
அம்மை நோய் தாக்கத்தின் போது காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் குறைந்த பின்னர் மசித்த உணவுகளை சாப்பிட வேண்டும். சமையலில் எண்ணெய் சேர்க்கக் கூடாது. குறைந்தளவு உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாதுளை, கருப்பு திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறுகள் போன்ற நீர் ஆகாரங்கள் நோய் தாக்கத்தின் களைப்பு நீங்கி உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
தண்ணீர் குடிக்கலாம்
அம்மை பாதிப்பின்போது தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும். இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க பருத்தி உடைகளை உடுத்தலாம். குழந்தைகளை வெயிலில் அழைத்துச் செல்லக் கூடாது.
தாய்ப்பால் கொடுத்தல் கூடாது
பெண்கள் வெயிலில் போய்விட்டு வந்தவுடன், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளின் தாக்கங்கள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், வெளியே போய்விட்டு வந்தால் குளித்துவிட்டு சிறிது நேரம் கழித்த பின்னரே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்த்தல்
சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் காலரா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் எளிதாக வரக்கூடும். அதனால், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும்.
வெப்ப நோய்கள்
மழைக்காலத்தில் நோய் பரவுதல் ஏற்படுவதுபோல வெயில் காலத்திலும் வெப்பநோய்கள் ஏற்படும். அதனால் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu