/* */

Mango Benefits in Tamil-மாம்பழக் கன்னம் வேண்டுமா? அப்ப மாம்பழம் சாப்பிடுங்க..!

மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நச்சு கிருமிகள் போன்றவை உடலுக்குள் நுழைவதை தடுக்கும்.

HIGHLIGHTS

Mango Benefits in Tamil-மாம்பழக் கன்னம் வேண்டுமா? அப்ப மாம்பழம் சாப்பிடுங்க..!
X

மாம்பழங்கள் (கோப்பு படம்)

Mango Benefits in Tamil

முக்கனிகளில் முதன்மையாக விளங்கும் மாங்கனி சுவைக்கு மயங்காதவர் இல்லை. நாம் உணவாக உட்கொள்வதற்கு பூமியில் பலவகையான பழங்கள் இருக்கின்றன. அதில் பழங்காலந்தொட்டே இந்திய நாட்டில் மக்களால் விரும்பி உண்ணப்பட்ட பழம் மாம்பழம் ஆகும். மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை அறிவோம் வாருங்கள்.

Mango Benefits in Tamil

மாம்பழம் பயன்கள்

மலட்டுத்தன்மை

ஆண்களும், பெண்களும் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு பின்பு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி நல்ல குழந்தைப்பேறு ஏற்படும்.

உடல்சக்தி

சத்துக் குறைபாடுகளால் சிலருக்கு சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்சக்தி கிடைக்கும்.

Mango Benefits in Tamil

வயிறு ஆரோக்யம்

ஒரு சிலர் வயிற்றில் பூச்சிகள் தொல்லையால் பல வயிறு சார்ந்த நோய்களால் அவதியுறுவர். மாம்பலத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புக்கள் நன்றாக இருக்கும்.

நரம்புகள் பலம்பெற

உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.

சரும பளபளப்பு

இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. வயது அதிகமாகும் போது இந்நிலை நீடிக்காது. நடுமத்திய வயதில் இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.

Mango Benefits in Tamil

கண் குறைபாட்டுக்கு

நலம் நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது.

பசிபோக்கி

பசி நன்கு எடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த அறிகுறி. ஆனால் சிலருக்கு அளவிற்கு அதிகமாக பசி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் மாம்பழங்களை உண்பதால் அதீத பசியெடுக்கும் தன்மை குறையும்.

Mango Benefits in Tamil

மூளை செயல்பாடு

மாம்பழத்தில் மனிதர்களின் மூளை செல்களை அதிகம் தூண்டக்கூடிய தாது மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. மாம்பழத்தை அடிகடி உண்பவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

ஹார்மோன்கள்

நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.

Mango Benefits in Tamil

கருப்பை பிரச்னைகள்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும்.

நோய்யெதிர்ப்பு சக்தி

மாம்பழத்தில் காரச்சத்து கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு ரத்தத்தில் நோயெதிர்ப்பு திறன் அதிகமாகி, உடலை தொற்று நோய்களிலிருந்து காக்கிறது.

Mango Benefits in Tamil

சிறுநீரக கற்கள்

குறைவான அதேசமயம் உப்புத்தன்மை அதிகம் கொண்ட நீரை அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகிறது. இவர்கள் மாம்பழத்தை அடிக்கடி உண்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.

Updated On: 2 Feb 2024 1:47 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்