கல்லீரலை காப்பாத்துங்க..! அது ஒரு சிறு தொழிற்சாலை..! அதன் இயக்கம் அவசியம்..!
Liver Meaning in Tamil
Liver Meaning in Tamil-கல்லீரல் என்பது அடிவயிற்றில் உள்ள ஒரு பெரிய உறுப்பு ஆகும். இது இரத்தத்தை வடிகட்டுதல் உட்பட பல முக்கியமான உடல் செயல்பாடுகளைச் செய்கிறது. உடலுக்குத் தேவையான இரசாயனங்களை உற்பத்தி செய்வதால் இது ஒரு சுரப்பியாகவும் கருதப்படுகிறது. சில நோய்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் கல்லீரலை சேதப்படுத்துகிறது. ஆனால், இந்த முக்கிய உறுப்பைப் பாதுகாக்க பல வழிகள் உள்ளன.
கல்லீரல் என்பது முதுகெலும்புகள் மற்றும் வேறுசில விலங்குகளின் உடலில் காணப்படும் முக்கியமான உள் உறுப்பு ஆகும். மனிதர்களில், கல்லீரல் என்பது ஒரு பெரிய ஆப்பு வடிவ உறுப்பு ஆகும். இது விலா எலும்புகளின் கீழ் வலது பக்கத்திலும், அடிவயிற்றுக்கு மேலேயும், மார்பு மற்றும் அடிவயிற்றைப் பிரிக்கும் செப்டமின் கீழேயும் அமைந்துள்ளது. இதற்குக் கீழே பித்தப்பை மற்றும் இடது புறம் வயிறு உள்ளது. இது உடலில் மிகப்பெரிய உறுப்பு ஆகும். கல்லீரல் திரவத்தைச் சுரக்கும் மிகப்பெரிய சுரப்பியாகும்.
உடலின் உட் சூழலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சமநிலைப்படுத்துதல், வளர்சிதை மாற்றங்களின் மூலமாக நச்சு நீக்குதல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்குத் தேவையான உயிர்வேதிப்பொருட்களின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறுச் செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. கல்லீரல் ஒரு சுரப்பி. ஒரு துணை செரிமான சுரப்பியாக, கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்கிறது. குழம்பாக்குதல் மூலம் கொழுப்பு திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
நமது உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரல் செரிமான பாதையிலிருந்து வரும் ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் முன்னர் இரத்தத்தை வடிகட்டும் வேலையை செய்கிறது. இது இரசாயன பொருட்களின் நச்சுத் தன்மையை நீக்கி வளர்சிதைமாற்றத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் தசைகளை கட்டமைத்தல், தொற்று நோய்களை எதிர்த்து போராடுதல் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்தல் போன்ற பல்வேறு பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன.
உடலில் ஏற்படும் 90 சதவீத நோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தான் காரணமாக அமைகின்றன. அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில் அமைந்துள்ள கல்லீரலும் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்கள் மற்றும் செயற்கை செயல்பாடுகளில் ஏற்படும் தாக்கங்களையும் அது ஏற்றுக்கொள்கிறது. (உதாரணம்: புகைப்பிடித்தலில் புகை படிவு கல்லெரலில்தான் படிகிறது. எனவே, கல்லீரல் செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அது, முழு உடலின் செயல்பட்டையும் பாதிக்கும். எனவே கல்லீரல் செயல்பாடு சரியில்லை என்பதை உணர்த்தும் 5 முக்கியமான அறிகுறிகளை பார்ப்போம் வாங்க.
மஞ்சள் காமாலை ஏற்படுதல்
மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தால் உடலின் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறிவிட்டிருக்கும். இதுவே மஞ்சள் காமாலையின் அறிகுறி. மேலும் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் போகும். இவை கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நமக்கு உணர்த்தும் அறிகுறியாகும்.கல்லீரல் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பகுதியை திறம்பட செய்யத் தவறினால் பிலிரூபின் உருவாகிறது. இது ஒரு வகையான நிறமி ஆகும். ஒரு ஆரோக்கியமான கல்லீரல் பிலிரூபினை உறிஞ்சி பித்தமாக மாற்றுகிறது. இது செரிமான செயல்பாட்டில் பங்கேற்கிறது. மேலும் எஞ்சியவர்கள் மலம் மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
தோலில் அரிப்பு ஏற்படுதல்
கல்லீரல் இயல்பான செயல்பாட்டில் இல்லையெனில் அது தோலுக்கு கீழ் பித்த உப்புக்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இதன் வெளிப்பாடாகவே தோலில் அரிப்பு மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது கல்லீரல் செயல்பாட்டில் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தக்கூடிய முதல் அறிகுறியாகும். இருப்பினும், தோல் அரிப்பு பிரச்னை ஏற்படும் அனைவருக்கும் பித்தத்தின் அளவு அதிகமாக இருக்காது. இது வேறு பிரச்னைக்காகவும் இருக்கலாம்.
பசிக்காத நிலை நீடித்தல்
கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் பித்த நீர் உணவு செரிமானத்திற்கு உதவுவது பிரதான பணியாகும். இயற்கையாகவே, கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அது பசியின்மைக்கு வழிவகுக்கும். மேலும் எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் ஆகியவற்றிற்கும் காரணமாக அமைகிறது.
ரத்தப்போக்கு மற்றும் சிராய்ப்புகள் ஏற்படுதல்
உடலில் அடிக்கடி சிராய்ப்புகள் ஏற்படுவது அல்லது காயங்கள் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொண்டாலோ கல்லீரல்செயல்பாடு குறித்து மருத்துவரிடம் சோதித்து பார்ப்பது நல்லது. காயத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு என்பது ரத்தம் உறைவதற்குத் தேவையான குறிப்பிட்ட புரதங்கள் இல்லாததால் ஏற்படுகிறது. இதற்கு தேவையான புரதம் கல்லீரலில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இதுபோன்ற அறிகுறிகளும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதை உணர்த்துபவை ஆகும்.
கவனச்சிதறல் ஏற்படுதல்
கல்லீரல், இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டத் தவறினால், அது உடலின் மற்ற செயல்பாடுகளைத் தடுக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால் ஏற்படும் நச்சுத்தன்மையால் மன ஆரோக்யம் பாதிக்கப்படுகிறது. அதனால் கவனமின்மை, குழப்பம், நினைவாற்றல் இழப்பு, மனநிலை மாற்றங்கள், முடிவெடுக்க முடியாமை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் கல்லீரல் பிரச்சினைகளின் அறிகுறிகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கல்லீரல் செயலிழப்பை கண்டறிய உதவும் பிற அறிகுறிகள் என்னென்ன என்பது கீழே தரப்பட்டுள்ளன :-
வயிற்றின் மேல் வலது புறத்தில் வலி, வயிறு வீக்கம், குமட்டல், வாந்தி, குழப்பம், தூக்கம், கசப்பான அல்லது இனிமையான வாசனை ஆகியவையும் கல்லீரல் செயலிழப்பை கண்டறிய உதவும் முக்கியமான சில அறிகுறிகள் ஆகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu