Leg pain reason in tamil-கால் வலி வந்தால் என்ன செய்யலாம்? தெரிஞ்சுக்கங்க..!

Leg pain reason in tamil-கால் வலி வந்தால் என்ன செய்யலாம்? தெரிஞ்சுக்கங்க..!

leg pain reason in tamil-கால் வலி (கோப்பு படம்)

நாற்பது வயதை தாண்டிவிட்டால் உடலில் வலி என்பது தொடங்கிவிடுகிறது. அதிலும் குறிப்பாக கை, கால் வலி சாதாரணமாக எல்லோருக்கும் வந்துவிடுகிறது.

Leg pain reason in tamil

பொதுவாகவே உயிரினங்களின் மொத்த எடையையும் தாங்கி நிற்பது கால்கள் தான். அதேபோலத்தான் மனிதர்களுக்கும். நமது உடல் எடையைத் தாங்கி நிற்பது கால்கள்தான். அப்பையன் நமது கால்களுக்கு ஓய்வின்றி தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அங்கு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

ஒருவரது உயரத்திற்கு ஏற்ப எடை இருந்தால் அவர்களுக்கு எந்த விதமான பிரச்னையும் வருவதில்லை. ஆனால், உடல் பருமன் உடையவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு குதிகால் வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படத் தொடங்குகிறது. உடல் பருமன் மட்டுமல்லாமல் இந்த வலிக்கு வேறு சில காரணங்களும் உள்ளன, இருப்பினும் உடல் பருமன் என்பது தான் முக்கிய காரணமாக இருக்கும்.


உயரத்திற்கு ஏற்ற எடையை கொண்டிருப்பவர்கள் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்யக் கூடாது. அப்படி அதிக நேரம் நிற்கும் படியான வேலையில் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்களுக்கு நாளடைவில் காலில் வலியும், எரிச்சலும், அசௌகரியமும் ஏற்படும். இப்படியான வலியில் இருந்து எளிய சிகிச்சைகள் மூலமாக நிவாரணம் பெறலாம். தொடக்கத்திலேயே இதற்கு சிகிச்சைப் பெறுவது அவசியம். அதற்கான சிகிச்சைகளை இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.

Leg pain reason in tamil

எண்ணெய் மூலமாக வலி நீக்கும்முறை:

அத்தியாவசிய வலி நிவாரணி என்று கூறப்படும் எண்ணெய் வகைகளில் யூகலிப்டஸ் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவையும் அடங்கும். இந்த மூன்று எண்ணெய்களில் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாளியில் பாதி அளவிற்கு நல்ல சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேற்கூறிய எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் மூன்று துளிகள் தண்ணீரில் விடுங்கள்.

அந்த தண்ணீரில் உங்களுடைய கால்களை கால்மணி நேரம் வரை வைத்திருந்தால் பாத வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி அத்தனையும் சரியாகிவிடும். பின்பு சுத்தமான தண்ணீர் கொண்டு கால்களை கழுவி விடலாம். இதேபோல யூகலிப்டஸ் எண்ணெயிலும் வலியை நீக்கக்கூடிய மற்றும் அழற்சியில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் ஆற்றல் உண்டு. கிராம்பு எண்ணெயில் வலி நிவாரணியாக செயல்படக் கூடிய தன்மைகள் உண்டு. லாவண்டர் எண்ணெய் வலியை கட்டுப்படுத்துகிறது.


Leg pain reason in tamil

உப்பு மூலமாக வலி நீக்கும் முறை:

சூடான தண்ணீர் அரை பக்கெட் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எப்சம் சால்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து நன்றாக கலக்கிவிட்டு, கால்களை பதினைந்து நிமிடம் வரை அப்படியே சூடான தண்ணீரில் கால்களை மூழ்கும்படி வையுங்கள்.

இப்படி செய்து வர சட்டென வலி எல்லாம் நீங்குவதை நீங்களே உணரலாம். எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் இருக்கின்றது. இது மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை குறைத்து தசை நலிவு மற்றும் பிடிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

Leg pain reason in tamil


தேய்த்தல் மூலம் வலி நீக்கும் முறை:

3 டீஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 சொட்டு லேவண்டர் எண்ணெய் கலந்து லேசாக அடுப்பில் வைத்து சூடேற்றி அதை வலி இருக்கும் மூட்டு மற்றும் கணுக்கால் மற்றும் குதிகால் பகுதிகளில் பூசி, சூடு பறக்கத் தேய்த்து விட்டால் போதும். வலியெல்லாம் பறந்து நிம்மதியான உறக்கம் வரும். இதில் உங்கள் வசதியைப்பொறுத்து அதை வலிநிவாரணியாக பயன்படுத்தி பயன் அடையலாம்.

Tags

Next Story