Kidney stone symptoms in tamil-சிறுநீரக கற்களால் வலியா..? எளிய வீட்டு வைத்தியம்..!

Kidney stone symptoms in tamil-சிறுநீரக கற்களால்  வலியா..? எளிய வீட்டு வைத்தியம்..!

kidney stone symptoms in tamil-சிறுநீரகக்கல் (கோப்பு படம்)

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

Kidney stone symptoms in tamil

சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் உருவாகும் கடினமான, படிக கனிமப் பொருளாகும். சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்புறவழி ஆகியவை அடங்கும்.

சிறுநீரகக் கல் என்பது மருத்துவத்தில் சிறுநீரக கால்குலஸ் அல்லது நெஃப்ரோலித் என்றும் அழைக்கப்படுகிறது. சிறுநீரக கற்கள் மருத்துவ நிலைகளில் மிகவும் வேதனையான ஒன்றாக அறியப்படுகிறது. சிறுநீரகக் கற்கள் உருவானால் வழியும் வேதனையும் உண்டாகும்.


சிறுநீரக கற்கள் பொதுவாக சிறுநீரகத்தின் வழியாக வடிகட்டப்பட்டு, சிறுநீரின் மூலம் நம் உடலில் இருந்து வெளியேறும். சில நேரங்களில், நீரிழப்பு காரணமாக, உப்புகள் கரையாமல் அப்படியே இருந்து படிகமயமாக்கல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த படிகங்கள் சிறுநீரகக் குழாய்களைத் தடுக்கும் அளவுக்கு பெரியதாக வளர்கின்றன. மேலும் இந்த கற்கள் சிறுநீர்க்குழாயில் சிக்கி, சிறுநீர் பாதையில் கூர்மையான மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன.

சிறுநீரக கற்கள் உருவாக பல காரணங்கள் உள்ளன. நீர்ப்போக்கு மிகவும் பொதுவான காரணியாகும். தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.

Kidney stone symptoms in tamil


உணவுமுறை மற்றும் பரம்பரை காரணிகளும் கல் உருவாவதற்கு சாத்தியமான காரணங்களாக இருக்கலாம். சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலி மிகவும் கடுமையானதாக இருக்கும். பொதுவாக அந்த வலி 20 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

சிறுநீரகக்கல் அறிகுறிகள்

  • பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
  • குமட்டல், வாந்தி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீர் அளவு அதிகரித்தல்
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
  • அடிவயிற்றில் வலி
  • வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
  • இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
  • ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
  • சிறுநீரின் நிறம் இயற்கைக்கு மாறாக காணப்படுதல்

சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம், சிறுநீரக கற்களால் ஏற்படும் அசௌகரியத்தை ஆற்றவும், உடலில் இயற்கையான குணப்படுத்தும் ஆற்றலை விரைவுபடுத்தவும் உதவலாம்.


1. துளசி இலை

துளசி இலைகள் (துளசி) பொதுவாக சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்யத்திற்கு நல்லது. துளசி இலையிலிருந்து ஒரு டீஸ்பூன் சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் குடிக்கவும். இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை மென்று சாப்பிடுவது சிறுநீரக கல் வலியை குறைக்க உதவுகிறது.


2. தர்பூசணி

தர்பூசணியில் உள்ள நீர் மற்றும் அதில் உள்ள பொட்டாசியம் ஆரோக்யமான சிறுநீரகத்திற்கு இன்றியமையாத பொருளாகும். தர்பூசணி சிறுநீரில் உள்ள அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவது அல்லது அதன் சாறு குடிப்பது சிறுநீரக கற்களை இயற்கையாகவே கரைக்க உதவும்.

Kidney stone symptoms in tamil


3. தக்காளி சாறு

தினமும் காலையில் ஒரு கிளாஸ் தக்காளி சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் குடிக்கவும். இது சிறுநீரகத்தில் உள்ள தாது உப்புகளை கரைக்க உதவுகிறது மற்றும் உப்புகள் மேலும் கற்கள் உருவாக்குவதை தடுக்கிறது.


4. சிவப்பு காராமணி

சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிவப்பு காராமணி (ராஜ்மா) ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். காய்களில் இருந்து விதைகளை அகற்றி, பின்னர் காய்களை சுத்திகரிக்கப்பட்ட சூடான நீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கவும். அந்த திரவத்தை வடிகட்டவும். அது ஆறும் வரை வைத்து இருக்கவும். இப்படி குளிர்ந்த இந்த காராமணி திரவத்தை நாள் முழுவதும் பல முறை குடிக்கவும். இவ்வாறு பல முறை குடிப்பதால் சிறுநீரக கல் வலியைக் குறைத்து நிவாரணம் அளிக்கும்.


5. எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது கால்சியம் சார்ந்த சிறுநீரக கற்களை உடைக்க உதவுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று டம்ளர் எலுமிச்சை சாறு குடித்து வந்தால், சிறுநீர் வெளியேறும் அளவு அதிகரித்து, சிறுநீரின் மூலம் கற்கள் இயற்கையாக அகற்றப்படும்.

Kidney stone symptoms in tamil

மேலே கூறப்பட்டுள்ள வைத்திய முறைகள் சிறுநீரகக் கற்கள் முழுமையாக குணமாகும் மருத்துவ முறை அல்ல. அவை வலியைக் குறைக்கும். நீங்கள் கடுமையான வலியை அனுபவித்தால், உடனடியாக ஒரு சிறுநீரகவியல் மருத்துவரை அணுகவும். மேலும் நிரந்தர தீர்வளிக்கும் மருத்துவ முறையை பரிசீலிக்கவேண்டும்.

Tags

Next Story