/* */

சிறுநீரகத்தில் கல் இருந்தால் என்ன அறிகுறி..? தெரிஞ்சுக்கங்க..!

Stone Symptoms in Tamil-மனித உடலில் சிறுநீரகங்கள் இரண்டு உள்ளன. ஒரு ஆரோக்யமான சிறுநீரகம் இருந்தாலே மனிதன் உயிர்வாழ முடியும்.

HIGHLIGHTS

Stone Symptoms in Tamil
X

Stone Symptoms in Tamil

Stone Symptoms in Tamil-கிட்னியின் முக்கியமான வேலை என்ன தெரியுமா? சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் இரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு. இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான செயல்பாடுகளை முறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறுநீரகங்கள் உடலில் எங்கு உள்ளன?

சிறுநீரகங்கள் (kidneys) என்பவை விலா எலும்புக்கூட்டுக்குள் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்துள்ளன. இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. வளர்ந்த உடலில் இது 11 செமீ நீள அளவில் இருக்கும். இவை இரத்தத்தை ஓரிணைச் சிறுநீரகத் தமனிகள் வழியாகப் பெறுகின்றன. இவைகளில் இருந்து இரத்தம் ஓரிணைச் சிறுநீரகச் சிரைகள் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டுசெல்கிறது.

மனிதர்களின் உடலில் சிறுநீரகங்கள் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. இதனால், உடலில் நச்சுக்கள் சேராமல் தவிர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான பணியைச் செய்யும் சிறுநீரங்களின் உட்பகுதியில் கரைந்த தாதுக்கள் சேர்வதால் ஏற்படுவது தான் சிறுநீரக கற்கள். இந்த சிறுநீரக கற்கள் உருவானால் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். ஒரு நாளில் 2 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் குடிப்பவருக்குத்தான் பொதுவாக சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

4 லிட்டர் தண்ணீர்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகங்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் போதுமான அளவு உடலில் இல்லாத போது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை நீர்த்துப் போகச் செய்து கடினமாக்கி, சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. அதனால் ஒரு நாளில் குறைந்தபட்ஷமாக 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்புகள் இல்லை.

சிறுநீரக கற்கள் உருவாகி இருப்பதை எப்படி அறிவது? அதன் அறிகுறிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீரக கல் அறிகுறிகளில் மிகவும் பொதுவான அறிகுறி சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுவது. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் இருந்தால் உடனே, மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்வது நல்லது. சில நேரங்களில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றும் சிறுநீரக கற்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் , சிறுநீர்ப்பையில் கற்கள் உள்ளது என்று அர்த்தம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீரில் இரத்தம் வருவது

சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால் சிறுநீரக கற்கள் உள்ளது என்பது உறுதியாகிறது. இந்த அறிகுறியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடி சிகிச்சைப் பெற மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால், சிறுநீரக கற்களின் அறிகுறியும் இதுவே. இம்மாதிரியான அறிகுறி சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதைக்கு கீழே நகர்ந்துள்ளதைக் குறிப்பதாகும். இதை உடனடியாக சரிசெய்ய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

சிறுநீரில் துர்நாற்றம்

சிறுநீர் பிங்க் நிறமாக அல்லது சிவப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருந்தால், அது சிறுநீரக கற்கள் உருவாகி இருப்பதற்கான அறிகுறியாகும். சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது. ஆனால், துர்நாற்றம் வீசுவதுடன் சிறுநீர் தெளிவில்லாமல் இருக்கும். இது சிறுநீரக கற்களின் தெளிவான அறிகுறியாகும்.

சிறுநீர் பாதையில் அடைப்பு

சிறுநீரக கற்களின் அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. இது சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதையின் கீழ் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாகும்.இதனால் கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து அழுத்தத்தைக் குறைக்கும். அதனால், சிறுநீர் வெளியேறமுடியாமல் வலி ஏற்படும்.

காய்ச்சல்

சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகப் பாதையிலோ தொற்று இருந்தால் காய்ச்சல் மற்றும் குளிர் இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

வாந்தி

சிறுநீரகங்கள் இரைப்பைக் குழாயுடன் நரம்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே இது வயிற்று உப்புசம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் கடுமையான வலி ஏற்படுவதால் வாந்தி வரும். வலியின் எதிர்வினையே வாந்தி. அதனால் மருத்துவரை தாமதிக்காமல் பார்த்து சிகிச்சை எடுக்கவேண்டும்.

முதுகு வலி

முதுகு வலிப்பது அல்லது வயிறு வலிப்பது சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். அதாவது சிறுநீரகத்தில் கற்கள் பெரிதாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ இருந்தால், இம்மாதிரியான வலி வரும். ஆரம்பத்தில் வலி தாங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அது சில நாட்கள் கழித்து தாங்க முடியாத பெரிய வலியாக இருக்கும். வலியில் இருந்து விடுபட உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 10:32 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...