/* */

சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகள் என்ன..? பார்ப்போமா..?

Kidney Stone Symptoms in Tamil -போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீர் கற்கள் உருவாகும். தண்ணீர் நிறைய குடிங்க.

HIGHLIGHTS

சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகள் என்ன..? பார்ப்போமா..?
X

kidney stone symptoms in tamil-கிட்னி கற்களால் ஏற்படும் முதுகு வலி.

kidney stone symptoms in tamil-உடலில் சிறுநீரகங்கள் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கழிவுகளை சிறுநீர் வழியே வெளியேற்றுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான பணியைச் செய்யும் சிறுநீரங்களின் உட்பகுதியில் கரைந்த தாதுக்கள் சேர்வதால் ஏற்படுவது தான் சிறுநீரக கற்கள். இந்த சிறுநீரக கற்கள் உருவானால் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். ஒரு நாளில் 2 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் குடி[பவருக்குத்தான் பொதுவாக சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகங்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் போதுமான அளவு உடலில் இல்லாத போது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை நீர்த்துப் போகச் செய்து கடினமாகி, சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகின்றன.


சிறுநீரக கற்கள் இருப்பதை எப்படி அறிவது?அறிகுறிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீரக கல் அறிகுறிகளில் மிகவும் பொதுவான அறிகுறி சிறுநீர் போகும்போது எரிச்சல் இருப்பது. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் இருந்தால் உடனே பரிசோதனை செய்வது நல்லது. சில நேரங்களில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றும் சிறுநீரக கற்களின் ஆரம்ப அறிகுறியாகும். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் , சிறுநீர்ப்பையில் கற்கள் உள்ளது என்று அர்த்தம். இது போன்ற அறிகுறிகளை அனுபவித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால் சிறுநீரக கற்கள் உள்ளது என்பது உறுதியாகிறது. இந்த அறிகுறியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடி சிகிச்சைப் பெற மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால், சிறுநீரக கற்களின் அறிகுறியும் இதுவே. இம்மாதிரியான அறிகுறி சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதைக்கு கீழே நகர்ந்துள்ளதைக் குறிப்பதாகும். இதை உடனடியாக சரிசெய்ய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

சிறுநீரில் துர்நாற்றம்

kidney stone symptoms in tamil-சிறுநீர் பிங்க் நிறமாக அல்லது சிவப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருந்தால், அது சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது. ஆனால், துர்நாற்றம் வீசுவதுடன் சிறுநீர் தெளிவில்லாமல் இருக்கும். இது சிறுநீரக கற்களின் தெளிவான அறிகுறியாகும்.

சிறுநீர் பாதையில் அடைப்பு

சிறுநீரக கற்களின் அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. இது சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதையின் கீழ் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாகும்.இதனால் கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து அழுத்தத்தைக் குறைக்கும். அதனால் சிறுநீர் வெளியேறமுடியாமல் வலி ஏற்படும்.

காய்ச்சல்

சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரக பாதையிலோ தொற்று இருந்தால் காய்ச்சல் மற்றும் குளிர் இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது முக்கியம்.

வாந்தி

சிறுநீரகங்கள் இரைப்பைக் குழாயுடன் நரம்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே இது வயிற்று உப்புசம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் கடுமையான வலி ஏற்படுவதால் வாந்தி வரும். வலியின் எதிர்வினையே வாந்தி. அதனால் மருத்துவரை தாமதிக்காமல் பார்த்து சிகிச்சை எடுக்கவேண்டும்.

முதுகு வலி

முதுகு வலி அல்லது வயிற்று வலி சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். அதாவது சிறுநீரகத்தில் கற்கள் பெரிதாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ இருந்தால், இம்மாதிரியான வலியை வரும். ஆரம்பத்தில் வலி தாங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அது சில நாட்கள் கழித்து தாங்க முடியாத அளவில் இருக்கும். வலியில் இருந்து விடுபட உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 11 Jan 2023 7:37 AM GMT

Related News

Latest News

 1. கல்வி
  தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 45%...
 2. வீடியோ
  🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
 3. இந்தியா
  தண்டவாளங்கள் மூழ்கியதால் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து...
 4. வேலைவாய்ப்பு
  எச்ஏஎல் நிறுவனத்தில் ஆபரேட்டர் & டெக்னீசியன் காலிப்பணியிடங்கள்
 5. போளூர்
  போளூர் ரயில்வே மேம்பால பணிகள் எப்போதுதான் முடியும்? பொதுமக்கள் கேள்வி
 6. விளையாட்டு
  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றி பெற்ற...
 7. வீடியோ
  😧கிடு கிடுவென உயரும் விலை | வெள்ளிக்கு விலை இவ்வளவா? #gold #silver...
 8. ஈரோடு
  மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு
 9. போளூர்
  கோடை மழை பெய்ததால் நெல்லை விதைப்பு செய்ய தொடங்கிய விவசாயிகள்
 10. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு