சிறுநீரகத்தின் முக்கிய வேலைதான் என்ன? தெரிஞ்சுக்கங்க..!

Kidney Tamil Name -சிறுநீரகம் மனித உடலில் நச்சுக் கழிவுகளை அகற்றும் முக்கிய பணியினை செய்யும் ஒரு ஒப்பற்ற உள்ளுறுப்பாகும்.

HIGHLIGHTS

சிறுநீரகத்தின் முக்கிய வேலைதான் என்ன? தெரிஞ்சுக்கங்க..!
X

kidney in tamil-சிறுநீரகங்கள் (கோப்பு படம்)

Kidney Tamil Name - சிறு நீரகங்கள் இடது வலது என நமக்கு இரண்டு உள்ளன. ஆனாலும் ஒன்று இருந்தாலே போதும், மனிதன் உயிர்வாழ முடியும். அதனால்தான் சிறுநீரகம் தானம் கொடுக்கப்படுகிறது. நமது உடலில் இருந்து நமது கழிவுகளை சீராக வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகங்கள்தான்.


இடைப்பட்ட காலங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தபோது உடலில் வேறு அறுவை சிகிச்சை செய்யும்போது சிறுநீரக திருட்டுகள் நடந்த பல நிகழ்வுகளை நாம் பத்திரிகைகள் வாயிலாக தெரிந்துகொண்டுள்ளோம். சிறுநீரகம் உடலுக்கு எவ்வளவு முக்கியமானது? அதன் வேலைகள் என்ன போன்ற விபரங்களை பார்ப்போம் வாங்க.

சிறுநீரகங்கள் (kidneys)

சிறுநீரகங்கள் இரட்டை உறுப்புகள் ஆகும். அதாவது ரெண்டு இருக்குங்க. அது வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. சிறுநீர் அமைப்பில் மிக முக்கியமான செயல்பாட்டைச் செய்யும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இவைகள் கீழ் முதுகில் அமைந்துள்ளன. இவை பெரிட்டோனியத்தின் பாகங்கள் ஆகும். வலது சிறுநீரகம் இடதுபுற சிறுநீரகத்தை விட சற்றே சிறியது, மேலும் சற்று கீழே தாழ்ந்து அமைந்திருக்கிறது. சிறுநீரகத்தின் தோற்றம் அவரை விதையை ஒத்திருக்கிறது.

அட்ரீனல் சுரப்பிகள்

சிறுநீரகங்கள் இருபுறமும் மனித வயிற்று குழியில் அமைந்துள்ளன. மேலும் நாளமில்லா மற்றும் ஹார்மோன் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை செய்யும் முக்கிய உறுப்பாகும். அவை அட்ரினலின், கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் ஆன்ட்ரோஜன்கள் உட்பட இரண்டு டஜன் ஹார்மோன்களை இரத்தத்தில் உற்பத்தி செய்து உட்செலுத்துகின்றன.

இதன் மூலம் தூண்டுதல்களைப் பெறுவதால் இந்த உறுப்புகளை நிரப்பும் கார்டிகல் மற்றும் மெடுல்லாவிலிருந்து நரம்பு மண்டலம், அட்ரீனல் சுரப்பிகள் பல்வேறு கோளாறுகள் மற்றும் அழுத்தங்களில் தடுப்பு மற்றும் சீரான செயல்முறைகளை சரிசெய்ய உதவுகின்றன.

சிறுநீரகங்கள் என்பவை முதுகெலும்புக் கூட்டுக்குள் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் உள்ள உறுப்புகள் ஆகும். இது அவரை விதை வடிவில் இருக்கும். இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. முதிர்ந்த உடலில் இது 11 செமீ நீளம் கொண்டவையாக இருக்கும். இவை இரத்தத்தை ஓரிணைச் சிறுநீரகத் தமனிகள் வழியாகப் பெறுகின்றன. இவற்றில் இருந்து இரத்தம் ஓரிணைச் சிறுநீரகச் சிரைகள் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டுசெல்கிறது.


சிறுநீரகத்தின் பணிகள்

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் இரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மனிதர்களில் சிறுநீரகம் வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முதுகுத்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அட்ரீனல் சுரப்பி அமைந்துள்ளது. கல்லீரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.


கழிவகற்றல்

சிறுநீரகத்தின் முக்கியமான வேலை , நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருட்களை இரத்தத்தில் இருந்து வடித்தெடுத்தல் ஆகும். வடித்தெடுக்கப்படும் கரைசலில் இருந்து, மீண்டும் நீர், மற்றும் உடலுக்குத் தேவையான பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதன் மூலம், கழிவுகள் நிரம்பிய சிறுநீரை செறிவாக்கி, பின்னர் அதனை சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கடத்தி, அங்கிருந்து வெளியே அனுப்ப உதவும். இந்த வடித்தல், மீள உறிஞ்சல் தொழிலை சிறுநீரகத்திலுள்ள சிறுநீரகத்தி எனப்படும் அமைப்பு செய்கின்றது. இந்த சிறுநீரகத்திகளே சிறுநீரகத்தின் தொழிலைச் செய்யும் அடிப்படை அமைப்பாகும்.

உடலின் இயக்கத்தின்போது வெளியேற்றப்படும் தேவையற்ற அல்லது தீங்கை விளைவிக்கும் பொருட்களே கழிவுகளாகும். அந்த வகையில் புரத செயல்பாடுகளின்போது வெளியேறும் யூரியாவும், நியூக்லிக் அமில செயல்பாடுகளின்போது வெளியேறும் கழிவான யூரிக் அமிலமும் மனித உடலில் பிரதான கழிவுகளாகும். இவற்றை சிறுநீரகம் கரைசல் வடிவில் கழிவாக அகற்றுகின்றது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Feb 2024 9:49 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...