keelanelli uses-வழுக்கையிலும் முடி முளைக்க வைக்கும் கீழாநெல்லி..!

keelanelli uses-வழுக்கையிலும் முடி முளைக்க வைக்கும் கீழாநெல்லி..!

keelanelli uses in tamil-கீழாநெல்லி செடி (கோப்பு படம்)

கீழாநெல்லி என்றால் மஞ்சள் காமாலைக்கு கொடுக்கும் மூலிகை மருந்து என்று மட்டுமே நினைக்காதீர்கள். கீழாநெல்லி பல நோய்களைத் தீர்க்கிறது.

keelanelli uses, keelanelli uses in tamil

கீழாநெல்லி

கீழாநெல்லி என்பது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகைச் செடியாகும். இந்த செடியின் பாகங்கள் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு கொண்டது. இது வெப்பமண்டல பகுதிகளில் வளரும் செடி இனத்தை சேர்ந்தது.

கீழாநெல்லிச் செடி சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும். கீழாநெல்லி என்ற பெயர் பெற்றதற்கு காரணம் உள்ளது. அதாவது கீழாநெல்லியின் இதன் இலையின் அடிக்காம்பு பகுதியில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் இலையின் கீழ் வரும் "கீழ்காய் நெல்லி" என அழைக்கப்பட்டது. பின்னர் பேச்சு வழக்கில் அந்தப்பெயர் மருவி கீழாநெல்லி என அழைக்கப்படுகிறது.


keelanelli uses, keelanelli uses in tamil

காலம் காலமாக தமிழர்கள் மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லி மூலிகையைத்தான் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இன்றும் கீழாநெல்லி பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கீழாநெல்லி மிகுந்த குளிர்ச்சிமிகுந்த தாவரமாகும். இது இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம். ஆனால் லேசான கசப்புச் சுவை கொண்டது.

கீழாநெல்லியின் வேறு பெயர்கள் என்ன ?

கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி, இளஞ்சியம், அவகதவாய், கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி போன்ற பல பெயர்களால் கீழாநெல்லி அழைக்கப் படுகிறது.

keelanelli uses, keelanelli uses in tamil


கீழாநெல்லியின் மருத்துவப் பயன்கள்

வழுக்கை நீங்கும்

சிலருக்கு இளம் வயதிலேயே முடி கொட்டி தலையில் வழுக்கை விழுந்துவிடும். அப்படி வழுக்கை விழுந்தவர்கள் தலையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி தலையில் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி வளரும்.

தோல் நோய் குணமாக

கீழாநெல்லி இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

மனஅழுத்தம் குறைய

கீழாநெல்லிவேர், நல்லெண்ணெய், கருஞ்சீரகம், சீரகம் இவைகளை தலா 10 கிராம் அளவு எடுத்து பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் காய்ச்சி வடிகட்டி தலைக்குக் குளிக்கலாம். இதனால் உச்சி குளிர்ந்து மன அழுத்தம் குறையும்.

keelanelli uses, keelanelli uses in tamil


பல வகை நோய் தீர்க்கும் கீழாநெல்லி

மஞ்சள் காமாலை, சீறுநீரக நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிறு சம்பந்தமான நோய்கள், காய்ச்சல், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், புரை, வீக்கம், ரத்தம் வடிதல் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி முக்கிய மருத்துவ மூலப்பொருளாக பயன்படுகின்றது.

சூடு தணிக்கும்

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு தணிந்து, உடம்பு சும்மா ஜில்லுன்னு ஆகிடும்.

நீர் கடுப்பை போக்கும்

நாள்பட்ட நீர் கடுப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து 1 வாரத்திற்கு இரண்டு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகி விடும்.

மங்கலான கண் பார்வைக்கு

கீழாநெல்லி, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை போன்றவைகளை சம அளவு எடுத்து அரைத்து சிறிது மோரில் கலக்கி 45 நாட்களுக்கு உட்கொண்டுவந்தால் மாலைக்கண் நோய், பார்வை மங்கல் பிரச்னை, வெள்ளெழுத்து பிரச்னைகள் தீரும்.


பல் கூச்சத்தை போக்கும்

எதை சாப்பிட்டாலும் பல் கூச்சம் பிரச்னை சிலருக்கு இருக்கும். பல் கூச்சம் உள்ளவர்கள் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் உடனே பல் கூச்சம் போய்விடும். ( இந்த காலத்தில் பல் கூச்சம் போவதற்கு பெரிய விளம்பரங்கள் வருகின்றன. நாங்க ஒரு கீழாநெல்லி வேரிலேயே சரிப்படுத்துவோம்)

keelanelli uses, keelanelli uses in tamil

வெள்ளைப்படுதல் குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாக கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து சம அளவில் கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீரில் கலந்து 40 நாள் உட்கொண்டால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தாமதமாக வருதல், அதிக இரத்தப்போக்கு போன்றவை தீரும்.

சீதபேதி குணமாகும்

கீழாநெல்லி இலையுடன் மாதுளம்பழம், நாவல் கொழுந்து இலை போன்றவைகளை சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதி குணமாகும்.


உயிரணுக்களை அதிகரிக்கும்

கீழாநெல்லி இலையுடன், ஓரிதழ் தாமரையை சம அளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்கள் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, ரத்த சோகை குணமாகும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

keelanelli uses, keelanelli uses in tamil

பல்வலி, ஈறு நோய் குணமாக

பல்வலி அல்லது ஈறு பிரச்னை உள்ளவர்கள் கீழாநெல்லி இலையை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி, ஈறு நோய் குணமாகும்.

Tags

Read MoreRead Less
Next Story