/* */

சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை கரைக்கும் கருஞ்சீரகம்..!

Kalonji Meaning in Tamil-சீரகத்தைப்போலவே கருஞ்சீரகமும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவப் பொருள்தான். ஆனால், அளவோடு பயன்படுத்தவேண்டும்.

HIGHLIGHTS

சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை கரைக்கும் கருஞ்சீரகம்..!
X

kalonji in tamil-கருஞ்சீரகம் (கோப்பு படம்)

Kalonji Meaning in Tamil-கருஞ்சீரகம் பல மருத்துவ குணம் கொண்ட தாவரங்களில் ஒன்றாகும். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவில் வளரக்கூடிய தாவர வகையைச் சேர்ந்தது. இது ஆங்கிலத்தில் "Black cumin seeds" மற்றும் "Small Fennel" என்றும் அழைக்கப்படுகிறது.

யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவத்தில் அரேபியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இரைப்பை நோய் தவிர மற்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்தக்கூடியது இந்த கருஞ்சீரகம்.


கருஞ்சீரகம் ஊட்டச்சத்துகள்

அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை கருஞ்சீரகத்தில் உள்ளது. மேலும், வைட்டமின்கள் A, B, C மற்றும் B12 இதில் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி

தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் கருஞ்சீரகத்தில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகளை வளரச் செய்யும். மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

கணைய புற்றுக்கு கருஞ்சீரகம்

கருஞ்சீரகம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உள்ளது. முக்கியமாக கணையப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது.

மூக்கடைப்பு, சிறுநீரக கற்கள்

கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடாக்கி இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு நீங்கும். சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரைய நன்கு கொதிக்கவைத்த வெந்நீரை ஆற வைத்து ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.

சளி, இருமல்

சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை அரைத்த பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். அத்துடன் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றிவிடும். குளிக்கும் போது கருஞ்சீரகத் தூள் சேர்த்தால் சொரியாசிஸ், புண்கள், தழும்புகள் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.


கொழுப்பு குறைய

கருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. கருஞ்சீரக எண்ணெய் பொடியை விடவும் அதிக நன்மைகளைத் தரவல்லது. தினமும் உணவில் இந்த பொடியையோ அல்லது எண்ணெயையோ சேர்த்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக குறைவதைக் காணமுடியும்.

சர்க்கரை குறைபாடு

சிலருக்கு ஏற்படும் அதிகப்படியான ஹைப்பர் டென்ஷனை மிகவும் எளிதாக குறைக்கக் கூடியது கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. சர்க்கரை குறைபாடு அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதை தடுத்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கருஞ்சீரகம் உதவுகிறது.


பாதுகாப்பு எச்சரிக்கை

கருஞ்சீரக விதைகள் இரத்த உறைதலை குறைத்து இரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை. அதிகப்படியான கருஞ்சீரக நுகர்வு இரத்தபோக்கு கோளாறுகளை மேலும் மோசமாக்கும். நீரிழிவு இருப்பவர்கள் மருந்துகளோடு கருஞ்சீரக விதைகளை தொடர்ந்து எடுத்துகொள்ளும் போது அது திடீரென்று இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிடும் அபாயம் உள்ளது. உடல் ஆரோக்யமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிகமாக கருஞ்சீரகம் பயன்படுத்தினால் அது உடல் நலத்தை கெடுத்துவிடும். உடலில் ஆபத்து உண்டாகும். ஆகவே அளவோடு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 Feb 2024 10:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி