சோள சோறு சாப்பிட்டு இருக்கீங்களா? அவ்வளவும் சத்து..! அதுவே உடலின் சொத்து..!

Jawari Meaning in Tamil
X

Jawari Meaning in Tamil

Jawari Meaning in Tamil-அறுபது, எழுபதுகளில் பிறந்து கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு சோள சோறு சாப்பிட்ட அனுபவம் நிச்சயமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Jawari Meaning in Tamil

சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். சோளம் சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். சோளத்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில வகை தானியங்களுக்காகவும் வேறு சில வகை கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இன்னும் சில வகை மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. சோளம் உலகம் முழுவதும் மிதமான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் வளரக்கூடியது.

சோளத்தை ஆங்கிலத்தில் கிரேட் மில்லெட் என்று அழைப்பார்கள். இதற்கு சோர்கம்,. மைலோ’போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

சோளத்தின் வகைகள்

வெண்சாமரச் சோளம், சிவப்புச் சோளம், வெள்ளைச் சோளம், பழுப்புநிச் ற சோளம் என பலவகைகள் உள்ளன.

சோளத்தின் ஊட்டச்சத்துக்கள்

சோளம் அரிசியைப் விட பல மடங்கு சத்துக்களை கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். சோளத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்., வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன.

தமிழகத்தில் 1980ம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்டுகளில் கிராமங்களில் பிரதான உணவுகளில் கம்பு, சோளம், வரகு போன்றவை மட்டுமே இருந்தன. நெல் சோறு என்பது அமாவாசை அன்று மட்டுமே கிடைக்கும் அரிய உணவாகும்.

ஆனால், சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை விட்டுவிட்டு இன்று நம் உடலுக்கு ஒவ்வாத, உடல் பருமன் ஏற்படும் துரித உணவுகளை குப்பைகளாக உண்டு வருகிறோம். ஆனால் சிறு மகிழ்ச்சி இதில், இன்றைய இளைஞர்களுக்கு உணவு மீதான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுதானியங்கள் புத்துயிர் பெற்று வருகின்றன.

வெள்ளை சோளத்தின் நன்மைகள்

மக்காச்சோளம் பெரும்பாலனவர்கள் சாப்பிட்டிருப்போம். ஆனால் வெள்ளை சோளம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. வெள்ளை சோளத்தில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றது. அதன் ஆராய நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.

இதய ஆரோக்கியம்

வெள்ளைச் சோளத்தில் இருக்கும் அதிகபடியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்யத்தை பாதுகாக்கிறது. இதனால் இரத்தம் சுத்தமாகவும், கொழுப்பு இல்லாமல் ஆரோக்யமாகவும் இருக்கும். கொழுப்பு அகற்றப்படுவதால் மாரடைப்பு வராமல் வெள்ளைச் சோளம் தடுத்து இதயத்தை பாதுகாக்கின்றது.

எலும்புகள் பலம்

வெள்ளைச் சோளத்தில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடைய செய்கின்றன. வெள்ளைச் சோளம் வயது முதிர்வால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற உணவாகும். இதை உண்பதால் எலும்பு வலு பெறுவதுடன் எலும்பு தேய்மானத்தை தடுத்து சரிசெய்யப்படுகிறது.

கட்டுக்குள் சர்க்கரை அளவு

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் வெள்ளைச் சோளத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். வெள்ளைச் சோளத்தில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது.

ஒவ்வாமை தடுக்க

நீண்ட தூரம் பயணம் செய்யும் சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பயணத்தின்போது உடலில் வேர்வை அதிகம் தங்குவதால் சருமம் பாதிப்புக்குள்ளாகி இது போன்ற ஒவ்வாமை (அலர்ஜி)ஏற்படலாம். இது அதிக எரிச்சலுடன் கூடிய அரிப்பு மற்றும் தோல் குறிப்பிட்ட இடத்தில் உரிந்து சிவப்பு நிறமாக மாறிவிடும். இதற்கு வெள்ளைச் சோளத்தை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, மீண்டும் இதைப்போன்ற அலர்ஜி ஏற்படாமலும் தடுக்கிறது.

செரிமானத்திற்கு ஏற்றது

சோளத்தில் உள்ள அதிகமான நார்ச் சத்து மற்றும் மாவுசத்து உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதிலிருக்கும் நார்ச் சத்து உணவு மண்டலத்தை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

உடலை வலுப்படுத்துவதற்கு

வெள்ளைச் சோளத்தில் தேவையான தாதுக்களான இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளதால் உடல் சுழற்சி முறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை தானாக சரிசெய்கின்றது. உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை தந்து உடலை வலுப்பெற வைக்கிறது.

உடல் எடையை குறைய

வெள்ளைச் சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பெரிது உதவியாக இருக்கின்றது. உடல் எடை கூடாமல் சீராக இருக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வெள்ளைச் சோளத்தில் போதுமான அளவு நோயை எதிர்த்து போராடும் ஆண்டிஆக்சிடன்ட்கள் இருக்கின்றன. இதனால் வயிற்று வலி, உடற் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

ஆற்றல் அதிகரிக்க

உடலில் ஏற்படும் சோர்வு நிகழாமல் காப்பதில் வெள்ளைச் சோளம் அற்புத பணி செய்கிறது. உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுத்து உடலை பலப்படுத்துகின்றது. உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் பாதுகாக்கின்றது. அதனால் சோர்வு விலகி ஓடுகிறது. அதனால் வெள்ளைச் சோளத்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடலுக்கு அவ்வளவு நல்லது.

இரத்த அழுத்தத்தை சரிசெய்ய

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளைச் சோளம் தடுக்கின்றது. இதிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி இரத்தத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை அணுக்களை எதிர்த்துப் போராடுகிறது. இதனால், குறைந்த இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மயக்கம், அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

பயன்பாடு

சோளத்தை உரலில் இட்டு குத்தி மேலுள்ள உம்மியை நீக்கிவிட்டு குருணை அரிசிபோல உடைத்து சோள சோறு ஆக்கலாம். சோளத்தை இடித்து சோளக்கூழ் தயாரிக்கலாம். சோளத்தை மாவாக்கி தோசை, அடை, குழிப்பணியாரம் போன்ற உணவுகளாக தயார் செய்யலாம். வெள்ளைச் சோளத்தில் பாப்கார்ன் செய்தும் சாப்பிடலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story