செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை முறையை தெரிஞ்சுக்கங்க..!

IUI Meaning in Tamil-குழந்தை இல்லாத பெண்களை இந்த சமூகம் தரக்குறைவாக பேசி அவர்களை இழிவுபடுத்தும் காலங்களையும் பார்த்தவர்கள் நாம்.

HIGHLIGHTS

IUI Meaning in Tamil
X

IUI Meaning in Tamil

IUI Meaning in Tamil-திருமணம் முடித்த தம்பதிகள் முதலில் எதிர்பார்ப்பது குழந்தை பாக்கியம்.எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அமைவதில்லை. வளர்ந்த அறிவியல் மற்றும் மருத்துவ வளர்ச்சியால் இன்று கர்ப்பம் தரிக்க பல வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒருகாலத்தில் குழந்தைகள் இல்லையென்றால் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய காலம் மலையேறிவிட்டது. ஆம், மருத்துவத்துறை இன்று பல சாதனைகளை எட்டியுள்ளது.அதில் ஒன்றுதான் செயற்கை முறை கருவூட்டல்.

செயற்கை முறை கருவூட்டல் என்றால் என்ன?

செயற்கை முறை கருவூட்டல் என்பது இயற்கையான முறையில் கருத்தரிக்க தாமதமாகும் தம்பதிகளுக்கு சிகிச்சைகள் மூலம் விந்தையும் சூல்முட்டையையும் சேரவைத்து கருவூட்ட உதவுதலேயாகும். இதில் எளிய முறையான IUI முறையிலான கருவூட்டல், மிகவும் முன்னேற்றகரமான சோதனைக்குழாய் கருவூட்டலான IVF முறை மற்றும் நுண்ணிய நுட்பகரமான முறையான ICSI முறை என மூன்று முறைகளில் செயற்கை முறை கருவூட்டல் மேற்கொள்ளப்படுகிறது.

IUI முறை கருவூட்டல் என்றால் என்ன?

ஆரம்ப சிகிச்சைகள் மற்றும் மாத்திரைகளில் கருத்தரிக்க முடியாத தம்பதிகளுக்கு IUI முறை பயன்படுகிறது. இதற்கு சீரான சூல் முட்டை வளர்ச்சி, அடைப்புகள் இல்லாத பலோப்பியன் குழாய்கள் மற்றும் ஓரளவு சராசரியான விந்து போன்றவை அடிப்படையான தேவைகள். இதற்கு நாம் மருந்துகள் மூலம் சூல் முட்டை வளர்ச்சியை தூண்டி 12ம் நாளில் ஸ்கேன் செய்து சூல் முட்டையின் வளர்ச்சி நிலைஅறியப்படுகிறது.

இதன் பருமனளவு 18 – 20mm ஆக இருந்தால் ஹார்மோன் ஊசி வழங்கப்படும்போது முட்டையானது வெளியேறும். பின்னர் 36 மணி நேரத்தில் விந்துகளை செறிவாக்கி ஊசி மூலம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும். பின்னர் வழங்கும் ஹார்மோன் மாத்திரைகள் மூலம் கரு வளர்வதற்கு வகைசெய்யப்படும். இவ்வாறு முறையான கண்காணிப்பில் இருந்தால் வெற்றி விகிதம் 35 – 40% ஆக இருக்கும். இதன் செலவும் மிக அதிகம் இல்லை.

IVF முறை என்றால் என்ன?

IVF முறை கருவூட்டலானது நீண்ட காலமாக குழந்தை பிறப்பது தாமதமடைந்து வரும் தம்பதிகளுக்கும் பலோப்பியன் குழாய்கள் இரண்டும் முற்றாக அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் விந்துகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள ஆண்களுக்கும் IUI முறை பல தடவை செய்து தோல்வி கண்டவர்களுக்கும் செய்யப்படுகின்றது.

மேலே கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட காரணங்களுக்கு IVF முறையில் உள்ள நன்மை, தீமை இரண்டையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது இதற்கான செலவு மற்றும் இதன் வெற்றி சதவிகிதம் போன்றவைகளையும் அறிந்துகொள்ளவேண்டும். இதன் வெற்றி 25% – 30% சதவிகிதமாக மட்டுமே இருக்கமுடியும்.

பொதுவாக 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் வெற்றி சதவிகிதம் குறைவாகவே இருக்கும். ஆனால் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம் கூடுதல் சதவிகிதத்தை எதிர்பார்க்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Feb 2024 6:23 AM GMT

Related News