/* */

infertility causes in female in tamil-பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுவது எதனால்? தெரிஞ்சுக்கங்க..!

infertility causes in female in tamil-பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவைகளை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

HIGHLIGHTS

infertility causes in female in tamil-பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுவது எதனால்? தெரிஞ்சுக்கங்க..!
X

infertility causes in female in tamil-பெண் கருவுறாமைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகளை எடுக்கும் முறைகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

பொதுவாகவே குழந்தை பிறக்கவில்லை என்றால் எல்லோரும் பெண்களைத்தான் முதலில் சாடுவார்கள். அந்த குறைபாடு ஆனிடம்கூட இருக்கலாம் என்ற அதிப்படை தெரியாமல் பெண்களை குறைக்கூறுவது சரியானது அல்ல. இருப்பினும் பெண்களுக்கு கருவுறாமை என் ஏற்படுகிறது என்பதை இங்கு பார்ப்போம்.


கருவுறாமை என்பது என்ன?

திருமணமான ஒரு தம்பதிக்கு குறிப்பிட்ட காலத்தில் குழந்தை பிறக்காமல் இருந்தால் இருவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறான பரிசோதனையில் பெண்ணுக்கு குறைபாடுகள் இருப்பின் அது பெண் கருவுறாமை என்று கூறுகிறோம்.

கருவுறாமை என்பது பெண்களால் இயற்கையாகக் கருவுற முடியாத நிலையைக்குறிக்கிறது.ஏதாவது ஒரு குறைபாடு இருப்பதால் பெண்களுக்கு கருவுறுதல் ஏற்படாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் சில பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி இல்லாமல் கருச்சிதைவு ஏற்படும்.

infertility causes in female in tamil

கருவுறாமை பிரச்னை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. பெண்களுக்குக் கருவுறாமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் கருவுறாமையைக் குணப்படுத்த பல மருத்துவ சிகிச்சைகளும் இருக்கின்றன.

முதலில் கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தற்காலத்தில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுவதற்கான காரணங்கள்

பெண்கள் கருவுறாமல் போவதற்குப் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவைகள் கீழே தரப்பட்டுள்ளன :

  • அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்.
  • கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்னைகள்.
  • கருப்பை வாயில் பிரச்னை.

இந்த முக்கிய காரணங்கள் மட்டுமல்லாமல், பெண்களுக்குக் கருவுறாமை ஏற்பட வேறு சில காரணங்களும் ஏற்படலாம்.அவைகள் :

infertility causes in female in tamil


மாதவிடாய் தொந்தரவு

ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.அதாவது மாதவிடாய் முன்கூட்டியே வருவது அல்லது தாமதமாக வருவது. மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் வலி அளவுக்கு அதிகமாக இருப்பதும் கருவுறாமைப் பிரச்னையின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

நாள் தவறிய மாதவிடாய் பிசிஓடி( PCOD -Polycystic Ovarian Disease) பிரச்னைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. வலியுடன் கூடிய மாதவிடாய்,இண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆக உடனே மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

வயதுக் காரணம்

அதிக வயதாகிவிட்டால் பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமான சூழலை ஏற்படுத்துகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயற்சி எடுக்கும்போது கருத்தரித்தல் சற்று சிரமமாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடாமல், உடல் வளமான சினை முட்டைகளை உற்பத்தி செய்யும் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது பிற்காலத்திலும் ஏற்படப்போகும் மன உளைச்சல்கள் மற்றும் வருத்தங்களை தவிர்க்கமுடியும்.

infertility causes in female in tamil

புகைபிடித்தல் மற்றும் மது

பல பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. குறிப்பாக இன்று வளர்ந்த நகரங்களில் பெண்கள் புகைப்பிடிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆகவே, புகைபிடிக்கும் பழக்கத்தாலும் கருவுறாமைப் பிரச்னை ஏற்படுகிறது. புகைபிடிப்பதால் உடலில் சேரும் நிகோட்டின் மற்றும் மற்ற நச்சுக்கள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை மட்டுப்படுத்தி விடுகின்றன. அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்களுக்கும் இந்த பிரச்னை கூடுதலாகவே ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே,இந்த பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது.

மனஅழுத்தம்

இன்றைய வாழ்க்கை முறையில் பெண்களும் வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் பல பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும் சூழல் ஏற்படுவதால் அவர்கள் அதிக மனச் சோர்வு அடைவதுடன் அவர்களுக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதனால், உடல் சுரப்பிகளின் சுரப்பு சீரற்ற நிலைகுத் தள்ளப்படுகிறது. இதுவும் கருவுறாமையை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறது. அதனால் பெண்கள் மன அமைதியோடு இருப்பது அவசியம்.

எடை குறைதல் மற்றும் கூடுதல்

இன்றைய உணவு முறை பல பெண்களின் எடையை அதிகரிக்கச் செய்துள்ளது. இது ஒருபுறம் என்றால் சில பெண்கள் இடுப்பே தெரியாமல் முள்ளுக்குச்சி போல எடை இல்லாமல் மெலிந்து காணப்படுகிறார்கள். அதனால் பெண்களுக்கு அதிக உடல் எடை அல்லது மிகக் குறைவான உடல் எடை இந்த இரண்டுமே கருவுறாமைக்கான காரணியாகிறது.

கருவுறாமைக்கு சுமார் 12 சதவீதம் இந்த எடைப் பிரச்னை காரணமாக இருக்கிறது. அதனால், பெண்கள் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு கண்டதையும் தின்னாமல் இருந்தாலே போதுமானது. நொறுக்குத் தீனிகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களை தள்ளிவைப்பது நல்லது.

infertility causes in female in tamil


நோய்த்தொற்று

பாலியல் ரீதியான உறவுகள் மூலமாக ஏற்படும் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் அதுவும் கருத்தரித்தலுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால், நோய்த்தொற்று இருப்பின் உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

சுரப்பிகள் குறைபாடு

கருவுறுதலுக்கு சுரப்பிகளின் பங்கு இன்றியமையாததாகும். சுரப்பிகள் சீரான வகையில் சுரத்தல் பணிகளை செய்யாவிட்டால், கருவுறுதல் நடக்காது. எனவே கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்கவேண்டும். இந்த பிரச்னை தீர மருத்துவர்கள் சில மருந்துகளை அல்லது மாத்திரைகளை பரிந்துரைக்கலாம்.

கட்டிகள் மற்றும் புற்றுநோய்

கருப்பையில் அல்லது அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்டி அல்லது புற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் கருவுறுதல் நடக்காது. ஒன்று பிரச்னைக்குரிய கட்டிகளை அகற்றவேண்டும். கட்டி அகற்றப்பட்டால் கருவுறுதல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

infertility causes in female in tamil

சத்தான உணவு

பல பெண்களுக்கு வேலைப்பளு அதிகம். சில பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து அதன்பின்னர் வெளியில் வேலைக்கும் செல்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த போதுமான அவகாசம் இல்லாமல் போகிறது. அவர்கள் சரியான சத்தான உணவுகளை உட்கொள்வதும் உடல் ஆரோக்யம் குறைந்தால் கருவுறுதலுக்கு தடைபடும். ஆகவே,பெண்கள் தினம் கீரை, காய் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது அவசியம்.


தைராய்டு பிரச்னை

தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உடலிலிருந்தாலும் கருவுறாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை இதற்கு சிகிச்சை எடுப்பது அவசியம்.

கருப்பைத் தொற்று

ஏதாவது ஒரு வகையில் முன்னரே கருப்பையில் தொற்று ஏற்பட்டிருந்தால் கருவுறுதலை தடுக்கும் காரணியாக இருக்கும். ஆகவே, கருப்பை தொற்றுக்கு சிகிச்சை எடுப்பது நல்லது.

infertility causes in female in tamil

உடலுறவின்போது வலி

உடலுறவின் போது வலி ஏற்படுவது கருவுறுதல் ஏற்படுவதற்கான சிக்கலை ஏற்படுத்தும் மற்றொரு அறிகுறியாகும். வலி ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெறுவது அல்லது சிகிச்சை பெறுவது அவசியம்.

வீரியமான மாத்திரைகள் உட்கொள்வது

உடலில் வேறு ஏதாவது தீர்க்க முடியாத நோய் இருப்பது. அந்த நோய்க்காக வீரியம் அதிகம் உள்ள மருந்துகளை எடுத்துக் கொள்வதும் கருவுறாமைக்கான காரணியாகும்.

மரபு வழி பிரச்னை

பிறப்பிலேயே கருவுறாமைக்கான குறைபாடுகள் இருக்கலாம். பெற்றோர் வழி மரபில் கருவுறுதல் குறைபாடு இருந்தால் அது தொடர்வதற்கு வாய்ப்புள்ளது.

infertility causes in female in tamil


கருப்பை வாய் சளி

கருப்பை வாய் சளி தடிமனாக இருப்பது. அதனால் விந்தணு பெண்ணின் கர்ப்பபையைச் சென்று அடையத் தாமதமாகிறது. இதனால் விந்தணு உயிர்ப்புத் தன்மை இல்லாமல் கருப்பைக்குள் செல்லும். கருப்பை வாய் சளி தரமாக உள்ளதா என்பதை அதன் நிறத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கரு போல அது இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கருவுறாமை ஏற்படலாம்.

நீரிழிவு நோய்

இந்த நோய்ப் பாதிப்புக்கு ஆளான பெண்கள் சிலருக்கும் கருவுறாமைப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

கருவுறாமையைக் கண்டறியும் பரிசோதனை

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்னையைக் கண்டறிய பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவைகளில் சில :

  • இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
  • மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப் படுகிறது.
  • லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
  • எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
  • ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
  • அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உடலில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிந்து கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.

infertility causes in female in tamil

பெண் கருவுறாமைக்கான சிகிச்சை

இன்று மருத்துவத் துறையில் பல சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று உடல் நிலைக்கு ஏற்றவாறும், வயது மற்றும் பல காரணிகளைக் கருத்தில் கொண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறது. இங்கே சில பெண்களுக்கான கருவுறாமைக்கான சிகிச்சை முறைகள், நீங்கள் தெரிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ளன.

உடலில் உள்ள சுரப்பிகள் சரியான விகிதத்தில் சுரக்க சிகிச்சையளிக்கப்படுகிறது.இதனால் முதலில் சீரற்ற மாதவிடாய் சீர் படுத்தப்படுகிறது.

  • அண்டவிடுப்பின் செயல்பாட்டைச் சீர்படுத்துவது.
  • தேவையான சத்துக்களை உடலில் சேர்த்து கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்துவது.
  • ஏதாவது நோய்த்தொற்று இருந்தால் அதற்கான ஆண்டிபயோடிக்ஸ் கொடுத்து குணப்படுத்துவது.
  • தேவைப்பட்டால் சிறு அறுவைசிகிச்சை செய்து கருப்பை குழாய், கருப்பை மற்றும் அது தொடர்பான பகுதிகளில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்வது.

பெண் கருவுறாமைக்கான சிகிச்சை

இன்று மருத்துவத்துறையில் பல சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறும், வயது மற்றும் பல காரணிகளைக் கருத்தில் கொண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறது.இங்கே சில பெண்களுக்கான கருவுறாமைக்கான சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

infertility causes in female in tamil

ஐவிஎப் மற்றும் ஐயுஐ

இந்த சிகிச்சை முறைகள் மட்டுமின்றி ஐவிஎப் மற்றும் ஐயுஐ போன்ற மருத்துவச் சிகிச்சை முறையும் நடைமுறையில் உள்ளது. எனினும் இதற்கான செலவுகள் அதிகம். இவற்றின் பலன்களும் எடுக்கும் முயற்சிக்கு ஏற்றவாறே இருக்கும்.

Updated On: 5 Feb 2023 12:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...