குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோருக்கு நகைச்சுவை உணர்வு தேவையா..? அவசியம் தெரியணும்ங்க..!
நகைச்சுவை உணர்வுள்ள பெற்றோர் -கோப்பு படம் -ஷட்டர்ஸ்டாக்
குழ்நதைகளுடன் நகைச்சுவை உணர்வோடு பழகும் பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்தலாம் என்கிறது ஒரு ஆய்வு. வழக்கமான நகைச்சுவை அணுகுமுறை எப்போது குழந்தைகளுக்கான அப்பாவின் நகைச்சுவையாக மாறும்? அது வெளிப்படையாக குழந்தை உணரும்போது.
"அப்பா ஜோக்" என்பதன் மிகச்சிறந்த வடிவம் இது போன்ற நகைச்சுவையில் குழந்தைகளோடு வார்த்தைகளால் விளையாடுவது. குழந்தைக்கு புரிவதுபோல கொஞ்சம் நமது நடிப்பாற்றலை அல்லது சொல்லும் விதத்தை குழந்தைக்காக மாற்றி சொல்லப்படும்போது குழந்தை அதை ரசிக்கும். சிரிக்கும்.
உதாரணமாக காகம் தாகம் தீர்த்த கதை சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தையின் கற்பனைக்காக பறப்பது போல சிறகை விரித்துக்காட்டுவது, தனது அலகால் கற்களை எடுத்துப்போடுவதை செய்துகாட்டுவது என குழந்தையின் ரசிப்புக்கு உட்படும்.
கதை சொல்லும் விதத்தைக்கூட குழந்தைபோலவே கொஞ்சி கொஞ்சிக் கூறும்போது இன்னும் குழந்தையின் ரசனை கூடுமல்லவா..?
ஒரு புதிய ஆய்வின்படி, அப்பா கேலி செய்வது, வழக்கமாக கூக்குரலிடுவதையும் கண்களை உருட்டுவதையும் அல்லது பிற உணர்வுகளை நகைச்சுவையாக வெளிப்படுத்துவது குழந்தையின் ரசிப்புத்தன்மை மற்றும் அவர்களது நகைச்சுவை உணர்வை வளர்க்கிறது.
இந்த அணுகுமுறை அப்பா, அம்மா, உறவினர்கள் அல்லது வார்க்கும் பாதுகாவலர் இடையே ஒரு நெருங்கிய உறவை வளர்க்கும். குழந்தைகள் எப்போதும் சிரிப்பதை விரும்புவார்கள். அந்த சிரிப்பை நாம் அடிக்கடி ஏற்படுத்தும்போது குழந்தை ஆரோக்யமாக வளர்வதற்கும் நமக்கும் குழந்தைக்குமான உறவை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.குழந்தைகளுடன் சிறந்த உறவை உருவாக்க நகைச்சுவை உதவும்.
மனிதனின் சமூக வாழ்க்கையில் நகைச்சுவை அதிகமாக இருக்கிறது.அதேபோல மற்ற ஆய்வுத் துறைகளில் நகைச்சுவை அடிப்படையில் ஏராளமான இலக்கியங்கள் இருக்கின்றன. இருந்தபோதிலும், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் நகைச்சுவையைப் பயன்படுத்துவது என்பது இப்போது வரை மிகக் குறைவான அறிவியல் சார்புடையதாக இருக்கிறது என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
முந்தைய ஆய்வுகள் சிலவற்றின் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு, குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் நகைச்சுவையை உணர்வுடன் குழந்தையிடம் அணுகும்போது குழந்தையின் உறவு மேம்படும் என்பது குறித்த பாடம் நம்மிடையே இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும். ஏனெனில் அதை இனிமேலாவது நாம் சரி செய்தாக வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"நகைச்சுவை என்பது பொதுவாக எல்லோருக்குமே அறிவாற்றலில் ஒரு நெகிழ்வுத்தன்மையைக் கற்பிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் மீள்தன்மையை ஊக்குவிக்கவும் முடியும்" என்கிறார் பென் ஸ்டேட் காலேஜ் ஆஃப் மெடிசின் குழந்தை மருத்துவரான மூத்த எழுத்தாளர் பெஞ்சமின் லெவி.
சொந்த அனுபவம்
"எனது தந்தை எங்களை வளர்ப்பதற்கு நகைச்சுவை அணுகுமுறையைப் பயன்படுத்தினார். அது எனது சிறந்த வளர்ச்சிக்கும் பெற்றோருடனான நெருங்கிய உறவை வளர்ப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனது மருத்துவ நடைமுறையிலும் எனது சொந்த குழந்தைகளிடமும் நான் நகைச்சுவையைப் பயன்படுத்துகிறேன்," என்று லெவி கூறுகிறார்.
ஆனால் நாம் இங்கு ஒரு வினாவை எழுப்பியாகவேண்டும். அதாவது "ஒருவர் நகைச்சுவை உணர்வை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறார்?" என்பாது இங்கு அவசியம். ஏனெனில் எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு அல்லது குழந்தையிடம் எப்படி அந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் இருக்கலாம் அல்லவா?
எவ்வாறு குழந்தையிடம் நகைச்சுவை உணர்வு பயன்படுத்தப்படுகிறதோ அதற்கேற்ப மட்டுமே பிரதிபலனும் கிடைக்கும்.
முந்தையது முழுவதும் நகைச்சுவை சார்ந்த ஆராய்ச்சி அல்ல
இதற்கு முந்தைய ஆராய்ச்சி குழந்தை வளர்ச்சியில் நகைச்சுவை, விளையாட்டு மற்றும் பிற அம்சங்களையும்,சூழல்களையும் உள்ளடக்கியதாக இருந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள், ஆனால், குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்குரிய நகைச்சுவை அணுகுமுறையின் பங்கு இங்கு பெருமளவு கருத்தில் கொள்ளப்படவில்லை அல்லது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.
உள்ளார்ந்த குழந்தை-பெற்றோர் இடையேயான ஒரு சக்தி இயக்கம் இருப்பதால் நகைச்சுவையானது வணிக நடைமுறைக்கு உதவலாம் என்று ஆராய்ச்சி கூறுவது போல குடும்ப உறவுகளுக்கும் இந்த நகைச்சுவை அணுகுமுறை உதவக்கூடும் என்று முதல் எழுத்தாளர் லூசி எமெரி கூறுகிறார். அவர் பென் மாநிலத்தில் உள்ள பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ மாணவராக புதிய ஆய்வில் பணிபுரிந்தார்.
வணிகமா? அன்பா..?
"வணிகம் மற்றும் பெற்றோருக்கான உறவு என்பதற்கு இடையே ஒரு சுவாரஸ்யமான இணைப்பு உள்ளது. ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு படிநிலையானவை" என்று எமெரி கூறுகிறார்.
"வணிக உறவுகளை விட பெற்றோர்-குழந்தை என்ற உறவு மிகவும் அன்பானவை என்றாலும், பெற்றோருக்குரிய சூழ்நிலைகள் நிறைய மாற்றங்களை உருவாக்குகின்றன." என்று அவர் மேலும் கூறுகிறார். "நகைச்சுவை என்பது மனதில் ஏற்படும் பதற்றம் மற்றும் படிநிலையைப் பரப்பவும், மன அழுத்த சூழ்நிலையைப் பற்றி இரு தரப்பினரும் நன்றாக உணரவும் உதவும்."
தற்போது செய்யப்பட்டுள்ள சிறிய ஆராய்ச்சி அடிப்படையில், எமெரியும் அவரது சகாக்களும் ஒரு சிறிய முன்னோடியான ஆய்வை மேற்கொண்டனர். இதில் பெற்றோருக்குரிய அனுபவங்கள் மற்றும் பெற்றோராக அவர்களின் அனுபவங்கள் உட்பட, பெற்றோருக்குரிய நகைச்சுவையின் பங்கு பற்றிய பெற்றோரின் பார்வைகளை ஆராய இது உதவியாக இருக்கும்.
பெற்றோர்கள் எப்படி, எப்போது நகைச்சுவையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதை இன்னும் விரிவாக ஆராய்வதற்காக, எதிர்கால ஆராய்ச்சிக்கு இது ஒரு முன்னோடி ஆய்வாக இருக்கலாம் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பத்து பெற்றோர்
புதிய ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் பெற்றோரின் அனுபவங்கள் மற்றும் நகைச்சுவை மற்றும் பெற்றோரைப் பற்றிய கருத்துக்களை அளவிட 10-பெற்றோரிடம் இந்த கணக்கெடுப்பை உருவாக்கினர், பின்னர் தகுதியான பங்கேற்பாளர்களைக் கண்டறிய ஆன்லைன் மூலமாக பயன்படுத்திக்கொண்டனர்.
அவர்கள் 18 முதல் 45 வயதுடைய பெற்றோரிடம் 312 பதில்களுடன் நிறைவு செய்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் (63.6 சதவீதம்) மற்றும் வெள்ளை நிறத்தவர் (76.6 சதவீதம்) என அடையாளம் காணப்பட்டனர்.
பதிலளித்த அனைவரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களது பெற்றோர் நகைச்சுவை உணர்வோடு தங்களை வளர்த்ததாக கூறியதை கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது, மேலும் கிட்டத்தட்ட 72 சதவீதம் பேர் நகைச்சுவையை ஒரு பயனுள்ள நுட்பமாக பெற்றோர் குழந்தைகளிடம் வெளிப்படுத்தினர்.
பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளுடன் நகைச்சுவையைப் பயன்படுத்துவதாகவும் அல்லது பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் பெரும்பாலானவர்கள் நகைச்சுவைக்கு தீங்கு விளைவிப்பதை விட நன்மை செய்யும் ஆற்றல் அதிகம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
பெற்றோர்களின் நகைச்சுவையைப் பயன்படுத்துவதற்கும், தற்போது வளர்ந்த பிள்ளைகள் இவ்விஷயத்தில் வெளிப்படுத்தும் சில பொருத்தமான கருத்துகளுக்கும் இடையே ஒரு தொடர்பைக் கணக்கெடுப்பு பதில்கள் காட்டுகின்றன.
பங்கேற்பாளர்கள்
பங்கேற்பாளர்கள் தங்கள் பெற்றோருடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதாகப் பதில் அளித்தவர்கள். தங்கள் பெற்றோருடன் நல்ல உறவை மறுத்தவர்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகளை வளர்ப்பதில் நகைச்சுவையைப் பயன்படுத்தியதாக கூறியவர்களின் வாய்ப்பு 43 சதவீதம் அதிகம்.
இந்த பெற்றோர்களில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் அதிகமாக நகைச்சுவையைப் பயன்படுத்துகின்றனர் அல்லது தங்கள் சொந்த குழந்தைகளை வளர்ப்பதில் நகைச்சுவையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
நகைச்சுவையுடன் கூடிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதேபோன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவார்கள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனால் ஆய்வின் ஆசிரியர்கள் இரு குழுக்களிடையே இத்தகைய வியத்தகு வேறுபாட்டை எதிர்பார்க்கவில்லை.
"குழந்தை பிறக்கும் அல்லது வளர்க்கும் வயதில் உள்ள அமெரிக்கர்கள் நகைச்சுவையைப் பற்றி ஒரு பெற்றோருக்குரிய சிறந்த கருவியாக நேர்மறையான எண்ணங்களைக் கொண்டுள்ளனர், மேலும் இதுபோன்ற நகைச்சுவையைப் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தலாம் " என்பதற்கான ஆரம்ப ஆதாரங்களை இந்த ஆய்வு வழங்குகிறது.
எதிர்கால ஆராய்ச்சி, பெற்றோர்கள் பல்வேறு வகையான நகைச்சுவை உணர்வை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அது அவர்களின் குழந்தை வளர்ப்பில் அது எப்படி பயன்படுகிறது மற்றும் நகைச்சுவையின் சமூகப் பாத்திரங்களைப் பற்றிய நமது தற்போதைய அறிவோடு எவ்வாறு பொருந்திப்போகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
"எனது நம்பிக்கை என்னவென்றால், மக்கள் பதற்றத்தைப் பரப்புவதற்கு மட்டுமல்லாமல், தங்களுக்குள் நெகிழ்ச்சி மற்றும் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ரீதியான நெகிழ்வுத்தன்மையை வளர்த்துக் கொள்ளவும், அதை தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகவும், திறமையான பெற்றோருக்குரிய கருவியாகப் பயன்படுத்துவதை இதன் மூலம் கற்றுக்கொள்ள முடியும்" என்று லெவி கூறுகிறார்.
இந்த ஆய்வு PLOS Oneல் வெளியிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu