பெண்களின் முறையான மாதவிடாய்க்கு எளியமுறை தீர்வு தமிழில்

how to get periods immediately in tamil-பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு எளிமையான வைத்திய முறைகள் தமிழில் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெண்களின் முறையான மாதவிடாய்க்கு எளியமுறை தீர்வு தமிழில்
X

how to get periods immediately in tamil-மாதவிடாய் பிரச்னை (மாதிரி படம்)

how to get periods immediately in tamil-இன்றைய பெண்களின் உணவுப் பழக்கங்கள் பல்வேறு உடல் பிரச்சனைகளை கொண்டுவருகிறது. அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. சிலருக்கு மாதவிடாய் தள்ளிப்போகுதல் அல்லது வராமலே இருப்பது என பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை மாறி முறையான மாதவிடாய் வருவதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் என்று இங்கு விரிவாக பார்ப்போம்.

பெண்களுக்கு பொதுவான பிரச்சினையாக கருதப்படுவது ஒழுங்கற்ற மாதவிடாய்தான். மருத்துவத்தில் 'oligomenorrhea'என்று அழைக்கப்படுகிறது. எடை குறைவது, உடல் ஆரோக்கியம் இல்லாத நிலை போன்றவைகளால் மாதவிடாய் சீரற்று வருகிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற சில எளிமையான தீர்வுகள் உள்ளன. அவைகளை இங்கு பார்க்கப்போகிறோம்.

இயற்கை பல வழிகளில் உயிரினங்களுக்கு பல நன்மைகளை வாரி கொடுத்துள்ளது.அந்தவகையில் நமக்கு பார்ஸ்லி முதல் வைட்டமின் சி நிறைந்த பழ வகைகள் என சுவைமிகு, ஆரோக்ய மூலிகை மற்றும் உணவுப்பொருட்களை தந்துளளது. இந்த உணவுகளின் மூலமாகவே முறையற்ற மாதவிடாயை சரி செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம்.


சீரகம்:

சீரகம் நாம் எல்லோரும் அறிந்ததே. அகம் எனும் உடலின் உள்புறத்தை சீராக வைத்துக் கொள்வதால் தான் இதற்கு சீரகம் என்று பெயர். அகம் என்பதில் கருப்பையும் ஒன்று. சீரகத்தை எவ்வளவுக்கு எவ்வளவு நம் உணவில் சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு வயிறு மற்றும் கருப்பை தொடர்புடைய பிரச்சினைகள் குறையும்.​ஓமம் :

ஓமம் வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும். அதுபோலவே ஓமத்தில் வெல்லம் கலந்து உட்கொண்டால் மாத விடாய் தாமதத்தை சரிசெய்து, கருப்பை சுருக்கங்களை தளர்த்தி மாதவிடாயை சீர்படுத்துகிறது.

பயன்பாடு:

ஒரு டம்ளர் நீரில் 1 தேக்கரண்டி ஓமம் 1 தேக்கரண்டி வெல்லமும் சேர்த்து வேகவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.


​பார்ஸ்லி தழை :

how to get periods immediately in tamil-பல நூற்றாண்டு பாரம்பரியமாக, பார்ஸ்லி தழை மாதவிடாயைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலைகளில் உள்ள அபியோல் மற்றும் மிரிஸ்டிசின் கூட்டுப்பொருட்கள் கருப்பையின் சுருக்கங்களைத் தளர்த்தி மாத விடாயை எளிமையாக்குகிறது. அதனால் மருத்துவ நிபுணர்கள் பார்ஸ்லி இலைகளை பரிந்துரைக்கிறார்கள்.

பயன்பாடு:

தினசரி 6 கிராம் உலர்ந்த பார்ஸ்லி இலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த 6 கிராமை 2 கிராம் என 3 தடவை 150 மில்லி தண்ணீரில் வேக வைத்து பயன்படுத்த வேண்டும். இந்த தழையை தேநீரில் கலந்து இரண்டு முறை குடிக்கலாம்.


​பப்பாளி :

பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாய்க்கு சிறந்த தீர்வு. முன்கூட்டிய மாத விடாய்க்கு இது நல்ல வீட்டு வைத்தியம். பப்பாளி கருப்பையில் உள்ள சுருக்கங்களைத்நீக்கி மாத விடாய்க்கு உதவுகிறது. பப்பாளியில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் என்ற கூட்டுப்பொருள் ஹார்மோனைத் தூண்டுவதால் இது முன்கூட்டிய மாத விடாய்க்கு வழி வகை செய்கிறது.

பயன்பாடு:

ஒரு நாளைக்கு 2 முறை பப்பாளியை பச்சையாகவோ அல்லது சாறாகவோ சாப்பிடலாம். ஒரு கப் பப்பாளி சாறு (தோராயமாக 200 மிலி) அல்லது ஒரு கிண்ணம் நிறைய பப்பாளிபழ துண்டுகளை மாதவிடாய் நெருங்கவும் காலகட்டத்தில் சாப்பிடலாம்.


​செலரி :

செலரியை ஜூஸ்-ஆக்கி குடிப்பது பாதுகாப்பான முறையாகும்.இது மிகவும் இயற்கையான மற்றும் பாதுகாப்பான ஒன்றாக மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை ஃபிரஷ்ஷாகத் தயாரிக்கப்பட்ட செலரி ஜூஸ் குடிக்கலாம். இந்த ஜூஸ் இடுப்பு, கருப்பையில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.இதனால் மாதவிடாய் சீராகிறது.


​கொத்தமல்லி:

கொத்தமல்லி விதைகளில் ஏராளமான மருத்துவப் பண்புகள் அடங்கியிருக்கின்றன. அவற்றின் காரணமாக ஒழுங்கற்ற மாத விடாய்களுக்கும் சிறந்த தீர்வாக இந்த கொத்தமல்லி விதைகள் பரிந்துரை செய்யப்படுகின்றது.

பயன்பாடு :

2 கப் தண்ணீருடன் 1 தேக்கரண்டி கொத்தமல்லி இட்டு ஒரு கப் தண்ணீராக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் வடிகட்டி, ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் உங்கள் மாத சுழற்சிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தொடர்ந்து தினமும் குடிக்கலாம்.


பெருஞ்சீரகம் :

பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.மாத விடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் பெருஞ்சீரகம் பயனுள்ளதாக இருக்கும்.

பயன்பாடு :

ஒரு கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து ஒரு இரவு முழுதும் ஊற வையுங்கள். காலையில் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்கவும்.


​இஞ்சி:

how to get periods immediately in tamil-இஞ்சி டீ சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும். இஞ்சி டீ உடல்நலனுக்கு சக்திவாய்ந்த துணை மருந்துகளில் ஒன்றாகும். மாதவிடாய் ஓட்டத்தை சீர்படுத்தும் சிறந்த பண்புகளைக் கொண்ட மூலிகைகளில் இஞ்சியும் ஒன்று. இது பார்ஸ்லி இலைகளை விட கூடுதல் அமிலத்தன்மை கொண்டது. அதனால் முறையாக இதை எடுத்துக் கொள்ளவது அவசியம்.

பயன்பாடு :

இஞ்சியை டீயுடன் அல்லது இஞ்சி சாறை டீயுடன் தேன் கலந்தோ, வெறும் இஞ்சியை தேனுடன் கலந்தோ சாப்பிடலாம். மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கப் இஞ்சி சாற்றை தண்ணீருடன் 2: 1 என்ற விகிதத்தில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.


​வெந்தயம் :

வெந்தயம் மாதவிடாயை சீராக்குவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிறந்த மருந்து. வெந்தயம் உடலின் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக்குகிறது. வயிறு மற்றும் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலியைக் குறைக்கும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.

பயன்பாடு:

வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் கழுவி ஊற வையுங்கள். காலையில் வேகவைத்து அதை காலையில் குடித்து வாருங்கள். அதேபோல் மதிய வேளைகளில் மோரில் வெந்தயத்தை ஊறவைத்தும் குடிக்கலாம்.


​மாதுளம் பழம்:

மாதுளம் பழச்சாறு மாதவிடாயை சீராக்க உதவியாக இருக்கும். குறிப்பாக, மாதுளம் பிஞ்சை விதையுடன் அதில் உள்ள வெண்ணிற தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் காலத்து வயிறு வலியைக் குறைக்கும். மாதுளம் பூக்களும் சாப்பிடலாம்.

பயன்பாடு:

வழக்கமான மாதவிடாய்க்கு 10 நாட்களுக்கு முன்னதாக ஒரு நாளைக்கு 3 முறை தூய மாதுளை சாற்றைக் குடிக்க வேண்டும். கரும்புச் சாறுடன், மாதுளை சாற்றை சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு 4 முறை குடிக்கலாம்.


​எள் :

எள் உங்கள் மாதவிலக்கை வேகமாகத் தூண்டும். ஆனால் அவை உடலில் அதிக வெப்பத்தை உண்டாக்கும்.அதனால் அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக எடுக்க கூடாது.

பயன்பாடு:

மாதவிடாய்க்கு 15 நாட்களுக்கு முன்பு உடலில் வெப்பத்தை உருவாக்கும் எள்ளை தினமும் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எள்ளுடன் இரண்டு முறை சாப்பிடவேண்டும். அல்லது தேநீருடன் ஒரு தேக்கரண்டி வறுத்த அல்லது பச்சை எள் ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடலாம். அதுவும் குறைந்த அளவே எடுத்துக் கொள்ளவேண்டும்.


​கற்றாழை :

கற்றாழை சாறு பொதுவாக உடல் சூட்டைத் தணிக்கும். கற்றாழை உடல் நோய்கள், சருமப் பிரச்சினை, தலைமுடி பிரச்சினை என எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வை அளிக்கும் மூலிகையாகும்.

பயன்பாடு :

கற்றாழையை பிளந்து ஜெல்லை பிழிந்து எடுக்க வேண்டும். ஜெல்லுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து காலை உணவுக்கு முன் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சில மாதங்களுக்கு இதிற் செய்துவந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

​வைட்டமின் சி :

how to get periods immediately in tamil-வைட்டமின் சி உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிப்பதன் மூலம் மாதவிடாயைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. இதனால் ஹார்மோன் சமநிலை ஏற்பட்டு கருப்பைச் சுருக்கங்கள் தளர்த்தப்படுகின்றன. இது இரத்தப் போக்கின் அளவையும் அதிகரிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், கிவி, தக்காளி, ப்ரோக்கோலி, பெல் பெப்பர்ஸ் போன்ற காய்கறிகள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் வைட்டமின் சி உடலில் அதிகரிக்க வழிவகுக்கும்.

Updated On: 28 Jun 2022 12:38 PM GMT

Related News