/* */

How to Find Pregnancy with Hand Pulse-நாடி பார்த்து கர்ப்பம் தெரிஞ்சிக்கலாமா..?

நாம் பார்க்கும் சினிமாக்களில் மருத்துவர் பெண்ணின் கையைப்பிடித்து நாடித்துடிப்பை பார்ப்பார். உங்களுக்கு நல்ல செய்தி என்பார். இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காக.

HIGHLIGHTS

How to Find Pregnancy with Hand Pulse-நாடி பார்த்து கர்ப்பம் தெரிஞ்சிக்கலாமா..?
X

How to Find Pregnancy with Hand Pulse

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கையில், அவரது இதய துடிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இதய துடிப்பு, இதய ஓட்டம், ரத்த அளவுகள் போன்றவற்றில் மாற்றம் உண்டாகும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உங்கள் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏனென்றால், கர்ப்பப்பையில் குழந்தை வளரும் நிலையில், அதை நோக்கி அதிகமான ரத்தத்தை இதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பத்திற்கு முந்தைய உங்களின் ரத்த ஓட்டத்தில் 5இல் ஒரு பங்கு கர்ப்ப காலத்தில் உங்கள் கர்ப்பப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும்.

How to Find Pregnancy with Hand Pulse

கர்ப்பம் அல்லாத பெண் ஒருவரின் இதயத் துடிப்பு அல்லது நாடித் துடிப்பு என்பது நிமிடத்திற்கு 60 முதல் 100 என்ற வகையில் இருக்கும். எனினும், சராசரியாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 15 முதல் 20 என்ற அளவில் கூடுதலாக இருக்கலாம். பெரும்பாலும் இந்த மாற்றங்கள் கர்ப்ப காலத்தின் முதலாவது அத்தியாய காலத்தில் உண்டாகும் மற்றும் கர்ப்ப காலம் முழுமைக்கும் நீடிக்கும். இதயத்தில் இருந்து மொத்தம் எவ்வளவு ரத்தம் பம்ப் செய்யப்படுகிறதோ அது கார்டியாக் அவுட்புட் என்று குறிப்பிடப்படும். இது 30 முதல் 50 சதவீதம் வரையில் அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்தின் 30ஆவது வாரத்தில் கார்டிக் அவுட்புட் அளவு படிப்படியாக குறைய தொடங்கும்.

எனினும், பிரசவத்தின்போது கார்டியாக் அவுட்புட் மேற்கொண்டு 30 சதவீதம் அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் கார்டியாக் அவுட்புட் முதலில் வெகுவாக சரியும். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக குறையும். தோராயமாக பிரசவத்தில் இருந்து 6 வாரங்கள் கழித்து கார்டியாக் அவுட்புட் என்பது கர்ப்ப காலத்திற்கு முந்தைய நிலையை அடையும்.

How to Find Pregnancy with Hand Pulse

கர்ப்ப காலத்தில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி?

ஒரு கண்காணிப்பு கருவியின் துணையின்றி நாடித்துடிப்பை நீங்கள் சொந்தமாக பரிசோதனை செய்து கொள்வதற்கு 4 வழிமுறைகள் உள்ளன. அந்த 4 முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

ரேடியல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை

ரேடியல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை என்பது உங்களின் ரேடியல் குழாய்கள் வழியாக பம்ப் செய்யப்படும் ரத்த ஓட்டத்தை உணருவதாகும். இது உங்கள் கை மணிக்கட்டு பகுதியில் அமைந்துள்ளது. இது எளிமையான வழிமுறை ஆகும்.

முதலில் ரேடியல் குழாய் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். ஒரு கைக்கு எதிர் திசையில் உள்ள மற்றொரு கையின் மணிக்கட்டு பகுதியில் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் கொண்டு தடவி பார்ப்பதன் மூலமாக இதனை கண்டறியலாம்.

How to Find Pregnancy with Hand Pulse

இரண்டாவதாக, நாடித்துடிப்பை கட்டை விரல் கொண்டு பரிசோதனை செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கட்டை விரல்களில் உள்ள ரத்தக் குழாய்களின் காரணமாக நாடித்துடிப்பை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படும்.

நாடித்துடிப்பை உணரத் தொடங்கியவுடன் 15 நொடிகளுக்கு எத்தனை துடிப்பு வருகிறது என்பதை எண்ணிக் கொள்ளவும்.

உங்கள் இதயத் துடிப்பை கணக்கீடு செய்ய இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு, உங்கள் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 80 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது என்றால் 15 நொடிகளுக்கு 20 என்ற வகையில் இருக்கும்.


கரோடிட் நாடித்துடிப்பு பரிசோதனை முறை

கரோடிட் நாடித்துடிப்பு பரிசோதனை முறை என்பது உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள கரோடிட் குழாய் வழியாக பம்ப் செய்யப்படும் ரத்த ஓட்டத்தை உணருவதன் மூலமாக கணக்கிடும் முறையாகும். உங்கள் கழுத்துப் பகுதியில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி என்பதை இது விவரிக்கிறது.

எப்போதும் போல, முதலில் சரியான குழாயை கண்டறிய வேண்டும். உங்கள் மூச்சுக்குழாய்க்கு பக்கவாட்டில் தாடை எலும்பு பகுதிக்கு கீழே உங்கள் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றை வைத்து தடவிப் பார்க்கவும். உங்கள் இதயத் துடிப்பை தெளிவாக உணரும் வரையில் நீங்கள் விரல்களை நகர்த்திப் பார்க்க வேண்டும்.

How to Find Pregnancy with Hand Pulse

15 நொடிகளுக்கு நீங்கள் உணரும் நாடித்துடிப்பை எண்ணிக் கொள்ளவும்.

உங்கள் இதயத்துடிப்பை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கிக் கொள்ளவும்.

பெடல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை

பெடல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை என்பது நம் கால் பாதத்தின் மேல் பகுதியில் பரிசோதனை செய்யும் முறையாகும்.

அமர்ந்த நிலையில் உங்களால் இந்தப் பரிசோதனையை செய்ய முடியாது என்று நினைத்தால் முதலில் முதுகை கீழே வைத்து படுத்துக் கொள்ளவும்.

உங்கள் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றை உங்கள் பாதத்தை நோக்கிச் செல்லும் எலும்புக்கு கீழே வைத்துக் கொள்ளவும். எலும்பை சுற்றியிலும் அல்லது இரண்டு பக்கமும் உங்கள் விரல்களை நகர்த்துவதன் மூலமாக நீங்கள் நாடித்துடிப்பை உணரலாம்.

நாடித்துடிப்பை கண்டறிந்த பிறகு, 15 நொடிகளுக்கு எத்தனை துடிப்பு என்பதை கணக்கீடு செய்யவும்.

இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கிக் கொள்ளவும்.

பிரேச்சியல் நாடித்துடிப்பு பரிசோதனை முறை

உங்கள் வெளிப்புற கை மேல் நோக்கியும், உள்புற கை லேசாக மடங்கிய வகையிலும் இருக்குமாறு உங்கள் கையை திருப்பவும்.

How to Find Pregnancy with Hand Pulse

உங்கள் மூட்டுப்பகுதிக்கு மேலே உள்ள வளைவுகளுக்கு இடையே மற்றும் உங்கள் மூட்டுப்பகுதிக்கு கீழே உள்ள எலும்பு பகுதி ஆகிய இடங்களில் உங்கள் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றை வைக்கவும். இப்போது உங்கள் கையை ஒரு இன்ச் உயரத்திற்கு தூக்கியபடி விரல்களை நகர்த்தவும். நாடித்துடிப்பை உணருவதற்கு நீங்கள் கடினமாக அழுத்த வேண்டியிருக்கலாம்.

நாடித்துடிப்பை உணர்ந்தவுடன் 15 நொடிகளுக்கு எத்தனை துடிப்பு வருகிறது என்பதை கணக்கீடு செய்யவும்.

இந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கவும்.

உங்கள் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 15 முதல் 20 வரையில் கூடுதலாக இருக்கும் என்றாலும், உச்ச வரம்பை கடக்காமல் இருப்பது மிக முக்கியமாகும். புதிய இதயத் துடிப்பிற்கும் ஒரு உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச வரம்பு என்பது உண்டு. உங்கள் உடல் சீராக இயங்குவதற்கு இது முக்கியமானதாகும்.

இந்த வரம்புக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இதயத்துடிப்பு இருக்குமானால் அது ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கிறது. குறிப்பாக, நீங்கள் பிரசவ காலத்தை எவ்வளவு தூரம் நெருங்கி வருகிறீர்கள் அல்லது உங்கள் உடல்நிலை மோசமாக இருக்கிறதா என்பதை இது உணர்த்தும்.

How to Find Pregnancy with Hand Pulse

உங்கள் நாடித்துடிப்பை கணக்கிடுவதன் மூலமாக இதனை அறியலாம். ஒட்டுமொத்தமாக உங்கள் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை நாடித்துடிப்பு மூலமாக கணக்கிட முடியும். தேவை ஏற்படும் பட்சத்தில் நாடித்துடிப்பை நாமாகவே கணக்கிட்டு கொள்வது குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பொது எச்சரிக்கை

ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம் என்பதை அறிதல் வேண்டும்.

Updated On: 5 Dec 2023 11:43 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...