/* */

எச்.ஐ.வி எய்ட்ஸ் இருந்தால் அறிகுறிகள் என்னென்ன..? தெரிஞ்சுக்குவோம் வாங்க..!

HIV Symptoms in Tamil-எச்.ஐ.வி என்பது மிக கொடிய வைரஸ். இதை வராமல் தடுப்பதே நமக்கு பாதுகாப்பு. ஒருமுறை வந்துவிட்டால் மரணம் உறுதி.

HIGHLIGHTS

HIV Symptoms in Tamil
X

HIV Symptoms in Tamil

எச்.ஐ.வி பொதுவிளக்கம்

HIV Symptoms in Tamil-எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் இந்த நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய். அதாவது Human Immuno Deficiency Virus. இதையே சுருக்கமாக HIV என அழைக்கப்படுகிறது. மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் ஆகும். அது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்க்க முடியும்.

இந்நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டால், சிகிச்சை செய்வது மிகவும் எளிதாக இருக்கும். எச்.ஐ.வி நோய் குறித்த பரிசோதனைக்குச் செல்வதே பலருக்கு மனதுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தும். இருந்தாலும், வேறு சில அறிகுறிகள் மூலமாகவும் இந்நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்த முடியும்.

அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் இருக்கின்றன. மேலும் நோயாளிகளின் பதிவேடுகள் ரகசியமாக பராமரிக்கவும் வசதிகள் உள்ளன. எச்.ஐ.வி-ஐ தொடக்க நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்துவிட முடியும். எச்.ஐ.வி-யின் தீவிரநிலை அதன் அறிகுறிகள் அதன் நிலை மற்றும்நிலையைப் பொறுத்தே அமைகின்றன. இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர் தன்னிடமிருந்து, மற்றவர்களுக்கு தன்னுடைய உடலின் நீர்மங்களை கொடுப்பதன் மூலம் இந்நோய் பல்கிப் பெருகவும் காரணமாக அமைகிறது. அதனால் உடனடியாக எச்.ஐ.வி-க்கு முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் பல வருடங்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து, பின்னர் வெளிவரும். எச்.ஐ.வி தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பு. எச்.ஐ.வி, அதன் சிகிச்சை முறை மற்றும் காரணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக எய்ட்ஸ் தினம் உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி-யின் சில தொடக்கநிலை அறிகுறிகள் தரப்பட்டுள்ளன :-

1. எடை குறைதல்

உடல் எடையில் வேகமான மாற்றங்கள் ஏற்படுதல். அதாவது வழக்கத்தை விடவும் வேகமாக உடல் எடை குறைந்தால் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு எடை குறைவது எச்.ஐ.வி-யின் அறிகுறிகளில் ஒன்றாகும். எடை குறைவது இந்நோயின் முன்னேற்ற நிலையை குறிப்பதாக இருக்கும். அதாவது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதே எடை குறைதல்.

2. தொடர்ச்சியான இருமல்

தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. ஆனால், குப்பைகளை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் கூட இது இருக்கலாம். எனினும், தொடர்ந்து இருமல் நீடித்து இருந்தால் எச்.ஐ.வி அதிகரிக்க அதிகரிக்க இருமலும் அதிகரிக்கும்.

3. நகங்களில் ஏற்படும் மாற்றம்

எச்.ஐ.வி வைரஸ் பாதிப்பை நகங்களில் கூட கண்டறியலாம். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் விசித்திரமாக இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நகங்கள் பிரிவதும், அவற்றின் நிறங்களில் மாற்றம் ஏற்படுவதும் இதன் ஒரு பகுதியாகும். எனவே, இந்த அறிகுறியை கண்டால் பரிசோதனை செய்து கொள்வதே பாதுகாப்பு.

4. களைப்பு

பெரும்பாலான நேரங்கள் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தால் அதனை எச்.ஐ.வி பாதிப்பாக கருத முடியும். எச்.ஐ.வி-யின் தொடக்கத்தில் இந்த களைப்பு நிலை வரும்.

5. தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்கமுடியாத வலி இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதுவும் எச்.ஐ.வி-ன் அறிகுறிகளில் ஒன்று.

6. தலைவலி

சிலருக்கு சளி அல்லது தூக்கமில்லாததால் கூட தலைவலி வரும். ஆனால், தலைவலி தினமும் தொடர்ந்து வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டால் இதையும் எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம். அது எச்.ஐ.வி-க்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ARS பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

7. தோல் மாற்றங்கள்

எச்.ஐ.வி நோயின் தொடக்க மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு மிகுதி உருவாகிறது. எனவே, தோலை சற்றே கூர்ந்து கவனிக்கவேண்டும்.

மத்திய,மாநில அரசுகள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி பாதிப்பு குறித்த தகவல்களும், நுட்ப கணக்கீடுகளும் திறனுடன் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே எச்.ஐ.வி பாதிப்புகளுக்கு சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படவேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 April 2024 7:02 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...