விக்கல் எதனால் ஏற்படுகிறது? எப்படி நிறுத்தலாம்? தெரிஞ்சுக்கங்க..!

Hiccups Meaning in Tamil-விக்கல் அடிக்கடி வருவது நல்லதா? அது வேறு ஏதாவது பிரச்னைகளுக்கு வழிவகுக்குமா? பார்க்கலாம் வாங்க.

HIGHLIGHTS

Hiccups Meaning in Tamil
X

Hiccups Meaning in Tamil

Hiccups Meaning in Tamil

சாதாரணமாக நம் சுவாசத்தின்போது காற்றை உள்ளே இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. அப்போது தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரத்தில் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது.


இதனால், நாம் சுவாசிக்கும் பொது காற்றானது , திறந்த குரல் நாண்கள் வழியாக தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் செல்கிறது. இதுதான் இயல்பாக நடக்கக்கூடிய சுவாச நிகழ்வு ஆகும். சில நேரங்களில், மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக திடீர் திடீரென சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல் நாண்கள் சரியாக திறப்பதில்லை.

அவ்வாறான நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல் நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரலுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்த காற்று, புல்லாங்குழலுக்குள் காற்று தடைபட்டு இசையொலி எழுவதைப்போல தொண்டையில் 'விக்... விக்...' என்று ஒரு 'விக்' ஒலி எழுகிறது. இதுக்குப் பேர்தான் 'விக்கல்'.

Hiccups Meaning in Tamil

இந்த விக்கலு, தும்மலு இதையெல்லாம் உடனே நிறுத்திட முடியாது. விக்கல் நிற்பதற்கு சிலர் அதிர்ச்சியான செய்தியை சொல்லும்போது அவர்கள் அதிர்ச்சியில் மூச்சடக்கி நிற்கும்போது விக்கல் நின்றுபோகிறது.


விக்கலுக்கான காரணங்கள்

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது

மிகச் சூடாக சாப்பிடுவது

தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது போன்றவை விக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள். சில வேளைகளில் வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும் வாய்ப்புகள் உள்ளன.

Hiccups Meaning in Tamil


தொடர் விக்கல்

விக்கல் தொடர்ந்து வருகிறது என்றால் அது வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கல்லீரல் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இரைப்பை புண், மூளைக் காய்ச்சல், நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, கணைய அழற்சி போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கும் இவ்வாறு அடிக்கடி விக்கல் வரும் வாய்ப்புகள் உள்ளன. விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்றுவிட்டால் அது வேறு கோளாறு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தொடர்ச்சியான விக்கல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

விக்கலை நிறுத்த என்ன செய்யலாம்?

மூச்சு விடாமல் நிறைய தண்ணீர் குடிக்கலாம்.

மூச்சை நன்றாக உள்ளிழுத்து சில வினாடிகள் அடக்கி வைத்து மூச்சை மெதுவாக விடலாம்.

Hiccups Meaning in Tamil

சர்க்கரை கொஞ்சம் வாயில் போடலாம்

எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சையை சுவைத்து விழுங்கலாம். இவ்வாறு செய்தால் விக்கல் நின்றுவிடும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Feb 2024 5:36 AM GMT

Related News

Latest News

 1. போளூர்
  முதல்வா் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
 2. சிங்காநல்லூர்
  ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்...
 3. கலசப்பாக்கம்
  ஜவ்வாது மலையில் புதிய கட்டிடங்கள் திறப்பு
 4. நாமக்கல்
  நாமக்கல் பகுதியில் 5 வழித்தடங்களில் பஸ் வசதி; துவக்கி வைத்த அமைச்சர்
 5. கோவை மாநகர்
  மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சித்து வருகிறார் :...
 6. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 7. திருவண்ணாமலை
  நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
 8. தமிழ்நாடு
  98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! அமைச்சர் தகவல்
 9. திருவண்ணாமலை
  சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் சேர்ப்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி