Hernia in tamil -குடல் இறக்கம் ஏன் வருகிறது? அதற்கான சிகிச்சை என்ன?

Hernia in tamil-ஹெர்னியா எனப்படும் குடல் இறக்கம். (கோப்பு படம்)
Hernia in tamil
குடல் அதன் இடத்தை விட்டு வெளியேறி பலூன் போல ஊதி அதிக வலியை ஏற்படுத்தும். அவ்வாறு அவதிப்படும் சிலரை நீங்களும் பார்த்திருக்கலாம்.
வயிற்றின் மேற்பரப்பு தசைகளில் வலிமைக் குன்றிய பகுதிகளில் புடைத்துக்கொண்டு குடல் வெளியே வருவதைக் குடல் இறக்கம் அல்லது ஹெர்னியா என்று சொல்கிறோம். குடல் இறக்கம் ஆரம்ப நிலையில் உயிருக்கு ஆபத்தானதாக இருக்காது. ஆனால் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் அது ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Hernia in tamil
ஏன் வருகிறது?
வயிற்றுக்குள் ஏற்படும் அதீத அழுத்தம் காரணமாக குடல் பாதிக்கப்படுகின்றது. அவை வயிற்றை சுற்றிய பகுதிகளில் எங்கு தசை வலுவிழந்து உள்ளதோ அங்கு வெளிப்பட முயற்சிக்கின்றன. மூச்சுக்கட்டி அதிகப்படியான எடையைத் தூக்குவது, கழிப்பறையில் மலம் வெளியேற சிரமம் காரணமாக முக்குவது, தொடர் இருமல், உடல் பருமன், ஊட்டச்சத்துக் குறைபாடு, சிகரெட் பழக்கம் போன்ற பல காரணங்களால் குடல் இறக்கம் ஏற்படலாம்.
சிலருக்கு பிறவிக் குறைபாடு காரணமாக இந்த பிரச்னை வரலாம். வயது அதிகரிக்கும் போது வயிற்றுப் பகுதி தசைகள் வலுவிழக்கும். அதனால் முதியவர்களுக்கு இந்த பிரச்னை வரலாம். கர்ப்பம், பல முறை கர்ப்பம் தரித்து குழந்தைப் பேறு அடைந்த பெண்களுக்கு குடல் இறக்கம் வரலாம்.
குடும்பத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கு ஹெர்னியா இருந்தால் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
Hernia in tamil
ஹெர்னியா வகை
குடல் இறக்கம் பாதிப்பை பொறுத்தவரை மூன்று முக்கியமான வகைகள் உள்ளன. ஆண்களுக்கு விரைப்பைக்கு செல்லும் ரத்தக் குழாய் வழியாக குடல் கீழே இறங்கலாம். இதை இங்யூனல் ஹெர்னியா என்று அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு தொப்புள் பகுதியில் தசை பலவீனம் அடைந்து குடல் வெளிப்படும். இதை அம்ப்ளிக்கல் ஹெர்னியா என்று கூறப்படுகிறது. வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் குடல் வெளிப்படும் இதை இன்சிஷேனல் ஹெர்னியா என்று அழைக்கப்படுகிறது.
Hernia in tamil
குடல் இறக்கம் அறிகுறிகள்
- குடல் வயிற்றுத் தசையைப் புடைத்துக்கொண்டு வெளியே வரும்போது அந்த பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும்.
- அனைவரும் அறிந்துகொள்ளக் கூடிய அறிகுறி பாதிக்கப்பட்ட இடத்தில் புடைத்துக்கொண்டு குடல் வெளியே வரும். படுத்தால் புடைப்பு தெரியாது.
- சில வகையான ஹெர்னியா பாதிப்பின் போது நெஞ்சு எரிச்சல், விழுங்க முடியாத நிலை, நெஞ்சு வலி போன்றவை ஏற்படும்.
- சில ஹெர்னியா அறிகுறி இன்றி வெளிப்படும். இதைத் தொடர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
Hernia in tamil
சிகிச்சை
ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடல் புடைத்துக்கொண்டு வெளியே வருகிறது என்றால் அதை சரி செய்ய மாத்திரை மருந்துகள் உதவாது.
ஹெர்னியாவை கட்டுப்படுத்த அறுவைசிகிச்சை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மிகச் சிறிய லாப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை முறையிலேயே சரி செய்துவிட முடியும்.
Hernia in tamil
வயிற்றுக்குள் வலை போன்ற அமைப்பை வைத்து குடல் பகுதி வெளியே வருவது தடுக்கப்படும். நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக கரைந்து வயிற்றுச் சுவருடன் ஒட்டிக்கொள்ளும் வகையிலான வலைகள் எல்லாம் தற்போது வந்துவிட்டன.
எல்லா குடல் இறக்க பாதிப்புக்கும் லாப்ராஸ்கோப்பி பயன்படும் என்று கூற முடியாது. அது ஏற்பட்ட இடம், பாதிப்பைப் பொறுத்து மருத்துவர் முடிவு செய்வார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu