வாழ்நாள் முழுவதும் நமது வாயில் எத்தனை லிட்டர் எச்சில் சுரக்கும் தெரியுமா..?
மனித உடலின் ஆரோக்ய உண்மைகள் -கோப்பு படம்
206 எலும்புகள் மனித எலும்புக்கூட்டை உருவாக்குகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? மனித உடலின் செயல்பாடுகள், மனிதனின் சிந்தனை, செயல்படும் விதம் அனைத்தும் படைப்பின் விசித்திரம். ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விந்தை. மனித உடலின் சில விசித்திரங்களை காணலாம் வாங்க.
1. நமது கண்கள் நிமிடத்திற்கு 20 முறை சிமிட்டும். இது ஒரு வருடத்திற்கு பத்து மில்லியன் முறை சிமிட்டுகிறது.
2. நமது காதுகள் வளர்வதை நிறுத்தாது, தெரியுமா?
3. காதில் வெளியாகும் மெழுகுபோன்ற பொருள் உண்மையில் ஒரு வகை வியர்வை.
4. நாக்கு சுமார் 8,000 சுவை மொட்டுகளை உள்ளடக்கி மூடப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் 100 செல்கள் வரை நமது உணவை சுவைக்க உதவுகிறது.
5. நமது வாழ்நாளில் சுமார் 40,000 லிட்டர் எச்சிலை உற்பத்தி செய்கிறோம் அல்லது வேறு விதமாகச் சொல்வதென்றால், வாயில் உருவாகும் எச்சிலை துப்பிக்கொண்டே இருந்தால் ஐநூறு குளியல் தொட்டிகளை நிரப்பி விடும்.
6.மூக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு கப் நாசி சளியை உற்பத்தி செய்கிறது.
7. நாம் படுக்கைக்குச் சென்று காலையில் எழுந்தவுடன் சுமார் 1 செ.மீ. அளவுக்கு நாம் அதிக உயரமாக இருப்போம். ஏனென்றால், பகலில் நமது எலும்புகளுக்கு இடையே உள்ள மென்மையான குருத்தெலும்பு நசுக்கப்பட்டு சுருக்கப்படுகிறது.
8. நாம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் நடந்தால், சராசரியாக ஒருவருக்கு உலகைச் சுற்றி வர 690 நாட்கள் ஆகும்.
9. ஒருபோதும் சோர்வடையாத ஒரே தசை இதயம் மட்டுமே.
10. நமது தோலின் முழு மேற்பரப்பும் ஒவ்வொரு மாதமும் மாற்றப்படுகிறது. அதாவது நமது வாழ்க்கையில் சுமார் 1,000 வெவ்வேறு வகையான தோல்களை கொண்டிருப்போம்.
11. நமது உடல் முழுவதும் 2.5 மில்லியன் வியர்வைத் துளைகள் உள்ளன.
12. ஒவ்வொரு நிமிடமும் நாம் நமது சருமத்தில் இருந்து 30,000 இறந்த செல்களை வெளியேற்றிக்கொண்டிருக்கிறோம்.
13. நாம் 70 வயது வரை வாழ்ந்தால், நமது இதயம் சுமார் 2.5 பில்லியன் முறை துடித்துக்கொண்டிருக்கும்.
14. ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் கணக்கு எடுத்தால் பெரும்பாலானவர்கள் சராசரியாக ஒரு வருடம் கழிப்பறையில் அமர்ந்திருப்பார்கள்.
15. ஒரு நாள் முழுவதும் நாம் சுவாசிக்க எடுத்துக்கொள்ளும் காற்றின் அளவுக்கு ஒரு பார்ட்டி பலூனை நிரப்புவதற்கு தேவைப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu