turmeric health benefits-குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள்..! சமையல் அறையின் ராணி..!
turmeric health benefits-மஞ்சளின் மருத்துவ பயன்கள். (கோப்பு படம்)
turmeric health benefits-பொதுவாகவே வெப்பநிலை குறையும் போது, நம் உடலில் பலவிதமான நோய்கள் தாக்குகின்றன.
தற்போது குளிர் கடுமையாக உள்ளது. தை மாதம் தரையெல்லாம் குளிரும் என்பார்கள். ஆகவே, குளிர் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு எதிராக நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். குளிர்ந்த வெப்பநிலையில், நமது நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பலவீனமடையக்கூடும். நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் பலவிதமான நோய்கள் நம்மை எளிதில் பாதிக்கலாம். எனவே, நோயெதிர்ப்பு சக்தியை குளிர்காலத்தில் அதிகரித்துக்கொள்ள நமது உணவில் குறிப்பிட்ட அளவில் மஞ்சள் சேர்த்துக்கொள்வது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மஞ்சளை நம் உணவில் எப்படியெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு சில வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன :
1. குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதன் மூலம் உடலை சூடாக வைத்துக்கொள்ள முடியும். நீரிழிவு நோயாளிகள் கூட இதன் மூலம் பயனடையலாம். ஏனெனில் இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை பச்சை மஞ்சளில் கலந்து மூக்கு வழியே உறிஞ்சுவதன் மூலம் சுவாசம் சீரடையும்.
3. குளிர்காலக் காலை வேளைகளில் சூடான தேநீரைப் பருகுவது சிறந்தது. ஆனால், வழக்கமான தேநீருக்கு பதிலாக மஞ்சள் தேநீரை பருகுவது சிறந்தது. இந்த ஆரோக்கியமான நடைமுறையின் விளைவாக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி தொடர்பான பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
4. பச்சை மஞ்சள் பொடியுடன் இரண்டு ஸ்பூன் அளவு கருப்பு மிளகுத்தூளுடன் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து உண்பது உடலுக்கு சிறந்த பயம் கிடைக்கும்.
5. உணவில் மஞ்சள் சேர்க்கப்படுவதால் சைனஸ் அறிகுறிகளை அகற்றவும் இது உதவும்.
turmeric health benefits
மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள்
1. குளிர்காலம் முழுவதும் குளிர் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வெப்பமூட்டும் மூலிகைகளில் ஒன்றாக மஞ்சள் இருந்து செயல்படுகிறது.
2. பச்சை மஞ்சள் சளி உற்பத்தியை தூண்டுகிறது. இதன் மூலம் இது சுவாச மண்டலத்தை இயற்கையாகவே தடுக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. மஞ்சளின் ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும், இருமல் மற்றும் சளி ஏற்படுவதை தடுக்கிறது.
3. மஞ்சளில் அடங்கியுள்ள குர்குமின் ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. இது லிபோக்சிஜனேஸ் மற்றும் COX-2 இரண்டையும் தடுக்கிறது. இது கடுமையான மற்றும் நாள்பட்ட அழற்சியைக் குறைக்கிறது.
4. குளிர்காலத்தில், நாம் அதிகமாக உண்ணவும் குடிக்கவும் முனைகிறோம். இதன் விளைவாக கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறது. மஞ்சள் தூள் உடல் நச்சுத்தன்மைக்கு உதவும் என்சைம்களின் தொகுப்பை அதிகரிக்கிறது. இது குளிர்காலத்தில் தொடங்கும் ஒருவித சோகம் அல்லது மனச்சோர்வு வராமல் தடுக்கிறது.
5. மனச்சோர்வு என்பது குறைந்த அளவில் மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF- என்பது Brain-derived neurotrophic என்பது பொருளாகும்)
turmeric health benefits
இது மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி, குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், β செல்கள் சோர்வடைவதைத் தடுக்கிறது. மஞ்சளில் அடங்கியுள்ள குர்குமின் மூளை ஹார்மோன் BDNF இன் அளவை உயர்த்துகிறது. இது புதிய நியூரான்களின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும்,மூளையில் பல சிதைவு செயல்முறைகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டுத் தடுக்கிறது. இதனால் மூளை சோர்வடைவது தடுக்கப்படுகிறது.
பார்த்தீங்களா.. நாம சாதாரணமா வீட்டில் பயன்படுத்தும் மஞ்சளில் எவ்ளோ நன்மைகள் இருக்கு பார்த்தீங்களா? இந்த குளிர்காலத்தில் நீங்கள் மஞ்சள் பயன்பாட்டை அதிகரித்து நன்மை பெறுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu