headache meaning in tamil-தலைவலி ஏன் வருகிறது? தலைவலிக்கு என்ன செய்யலாம்..? வாங்க தெரிஞ்சுக்கங்க..!

headache meaning in tamil-தலைவலி என்பது பல வேலைகளை செய்யவிடாமல் தடுக்கும் பெருவலியாகும். இதனால் பலபேர் அவதியுற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
headache meaning in tamil-தலைவலி ஏன் வருகிறது? தலைவலிக்கு என்ன செய்யலாம்..? வாங்க தெரிஞ்சுக்கங்க..!
X

headache meaning in tamil-தலைவலி (கோப்பு படம்)

headache meaning in tamil-தலைவலி என்பது தலையில் ஏற்படும் வலியாகும். அதாவது மண்டைக்குள் ஏற்படும் வலி. தலைப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாக கருதப்படுவது தலைவலி. பலருக்கு அடிக்கடி வரக்கூடும்.

அதனால் வேறு எந்த தொல்லைகள் வந்தாலும் கூட எனக்கு பெரிய தலை வலியா போச்சு என்பார்கள் பேச்சு வழக்கில். தலை வலி என்று சாதாரணமாகவும் இருந்துவிடக்கூடாது. அடிக்கடி தலைவலி வந்தால் நிச்சயமாக பரிசோதனை அவசியம்.


தலைவலியில் தீங்கில்லாத விரைவில் தானாகவே குணமாகக் கூடியவையும் உள்ளன. சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின், பாராசிட்டமால், இபுபுரோபின் போன்ற வலி நிவாரணிகள் போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால், சில குறிப்ட்பிட குறிப்பிட்ட வகைத் தலைவலிக்கு வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கலாம். ஆகவே அதற்கான மருத்துவ முறைகளை நாடவேண்டும். தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. தலைவலியை மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்று ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் காணமுடியுமானால் அதனைத் தவிர்க்க முடியும்.

headache meaning in tamil

மூளையில் வலியுணரிகள் இல்லாததால், மூளை வலியை உணராது. தலைப் பகுதியில் அமைந்த சில நரம்புத் தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள் என்பன காயப்படக் கூடியவை. மூளையுறை, தமனிகள் என்பன வலியை உணரக்கூடியவை. தலைவலி பெரும்பாலும், மூளையுறையில் அல்லது தமனிகளில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது அழுத்தம் காரணமாக ஏற்படுகின்றன. தலையில் காணப்படும் தசைநார்களும் வலியை உணரக்கூடியவை.

உலக சுகாதார அமைப்பு 2016, ஏப்ரலில் கொடுத்த அறிக்கையின்படி, ஜனத்தொகையில் பாதியளவு மக்கள் ஒரு ஆண்டில் ஒருமுறையேனும் தலைவலிக்கு உட்படுகிறார்கள். தலைவலியால் அவதிப்படுபவர்கள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அந்த தலைவலி ஆபத்தற்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சிகிச்சை பெறவும் மருத்துவரின் உதவியை நாடுவது பாதுகாப்பானது.

தலைவலிக்கான காரணங்கள்

தலைவலிக்கான பொதுவான காரணங்களாக, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, கண்களில் ஏற்படும் களைப்பு, உடல் வறட்சி, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், நெற்றியெலும்புப்புழை அழற்சி (sinusitis) போன்றவையாகும்.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையழற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக்கட்டிகள் போன்றவற்றினால் வரும் தலைவலி மிகக் குறைவுதான். தலைக் காயங்களுடன் தலைவலி ஏற்படும்போது அது வெளிப்படையானது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரும் தலைவலி அது மாதவிடாய்க்கு முன்னரோ அல்லது பின்னரோ அதற்கு இயக்குநீர் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கமே காரணமாகும்.

நரம்பு மண்டலத்தில் வரும் தலைவலி

headache meaning in tamil

இந்த வகை தலைவலி 40 வயதுக்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வுப் போல வலி இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலி ஏற்பட காரணமாக அமையலாம்.

கண் தொடர்பான நோய்கள்

ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம்.

பக்கவாதம்

இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.

தலைச்சுற்றல்

இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் ஏற்படலாம்.

உளவியல் ரீதியான பிரச்னைகள்

மனச்சோர்வு, பதற்றம், தற்கொலை எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு அவ்வப்போது வந்து போகும்.

சைனஸ் தலைவலி

headache meaning in tamil

கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும்.

பல் நோய்கள்

பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும். இது மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

தைராய்டு குறைதல்

தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி நீங்கப்பெறலாம்.

ஆபத்தான தலைவலி

பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

 • மண்டையோட்டுக் குழியினுள் அழுத்தம் அதிகரித்தல்.
 • சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளை அழற்சி
 • இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis)
 • மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் இரத்தப் பெருக்கு
 • தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி
 • திடீரென ஏற்படும் கண்ணின் அழுத்த அதிகரிப்பு
 • மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள்

மேற்கூறிய காரணிகளால் ஏற்படும் தலைவலிக்கு சிறப்பு சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஏனெனில் மேற்கூறிய காரணங்கள் மோசமான விளைவுகளைத் தரக்கூடியது. சில உயிராபத்தையே ஏற்படுத்தலாம்.

புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்பட்டால், முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் (Altered Consciousness), தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின், ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின், காலையில் எழும் போதே தலைவலி இருப்பதுடன், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின், பார்வையில் மாற்றம் ஏற்படின் (குனியும் போது /வளையும் போது /இருமும் போது) உடனடி மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

headache meaning in tamil

ஆபத்தில்லாத தலைவலி

ஒற்றைத் தலைவலி

பொதுவாக நாற்பது வயதிற்குட்டபட்டவர்களிலே ஏற்படுகின்ற தலைவலியாகும். இது தீவிரமான தலைவலியை ஏற்படுத்தும். இடிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தலைவலியாகும். இதனுடன் சேர்ந்து வயிற்றுப்பிரட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இவ் வகைத் தலைவலி உடையோர் இயல்பான வேலைகளில் ஈடுபடமுடியாது பெரிதும் அவதியுறுவர்.


வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி

இருபக்கத் தலையிலும் உணரப்படுகின்ற மந்தமான ஒரு தலைவலியாகக் காணப்படும். ஒரு சிலருக்கு கண்களுக்கு பின்னால் அழுத்துவது போன்று உணர்வார்கள். சிலர் தலையுச்சியில் அழுத்துவது போன்று உணர்வார்கள். இவ்வகைத் தலைவலி அதிக மனஅழுத்தம், வேலைப்பளு உள்ளவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்றது. இவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள் பரிந்துரைக்கபடுகின்றது. சிலருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படலாம்.

கிளஸ்டர் தலைவலி (Cluster Headache)

இருபதுக்கும், நாற்பதுக்குமிடையிலான வயதுடைய ஆண்களில் ஏற்படக் கூடிய ஒரு வகைத் தலைவலியாக இது காணப்படுகின்றது. மிகத் தீவிரமான தாங்கமுடியாத தலைவலியாகக் காணப்படும். ஒரு பக்கத் தலைப்பகுதியிலேயே ஏற்படும். கண்ணின் பின்னால் உருவெடுக்கும் இத் தலைவலியுடன் கண்ணீர் சுரத்தல், மூக்கடைப்பு, கண் செந்நிறமாதல், தற்காலிகமாகக் கண்ணை இறுக மூடமுடியாதிருத்தல் போன்றனவும் ஏற் படலாம்.

தலைவலியில் இருந்து குணமடைய முறையான மருத்துவ சிகிக்சை

மருத்துவரிடம் காண்பித்து முறையான சிகிச்சை பெறுதல் மூலம் தலைவலியில் இருந்து குணமடையலாம்.

மனதை தளர்வாக்கும் சிகிச்சை

headache meaning in tamil

தலைவலிக்கு அடிப்படை மன அழுத்தம். தேவையற்ற கோபம், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும் போது மனதை தளர்வாக்கிக் கொள்ளும் சிகிச்சை உள்ளது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் இல்லாத அறையில் அமர்ந்து சிகிச்சை பெறவேண்டும் . அங்கு நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். கட்டில் அல்லது தரையில் படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவும். பின்னர் கண்களை இறுக்கமாக இல்லாமல் இலகுவாக மூடிக் கொள்ளவும். கோபம் வரும் போது சிலர் புருவங்களை சுருக்கிக் கொள்வர். முகம் இறுக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் தசை இறுகும். இதைத் தவிர்க்க புருவத்தையும், முகத்தசைகள் இறுகுவதையும் தவிர்த்து சாதாரணமாக வைத்துக் கொள்ளலாம். மனதுக்குப் பிடித்த வேலை மூலம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் . மனம் அமைதி அடைந்த பின்னர் நிதானமாக யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தலைவலிக்கு விடை கொடுக்கலாம்.

பாட்டி வைத்தியம்

அருகம்புல், ஆலமர இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக குணமாகும். அவரை இலையை அவித்துத் தலையில் பூசிக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

இஞ்சியைத் தோல் நீக்கி தேன் சேர்த்து வதக்கி தண்ணீர் 50மிலி அளவில் விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

இஞ்சியைக் காயவைத்து பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம் குறையும்.

இஞ்சிச்சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சிசாற்றில் வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.

headache meaning in tamil

நீராவி பிடித்தால் அதிக வியர்வை வெளியேறி தலைவலி குறையும். எருக்கம் பாலில் வெள்ளை எள்ளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். எலுமிச்சம்பழச் சாறை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி நீங்கும்.

எலுமிச்சம்பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம். எலுமிச்சம்பழச் சாறுடன் மிளகை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். கடுகை தண்ணீரில் ஊற வைத்து முளைக்கட்டவும், பின்னர் அதனை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். ( சில தகவல்கள் விக்கிப்பீடியாவில் இருந்து )

Updated On: 27 Dec 2022 10:43 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
 2. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. காஞ்சிபுரம்
  செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
 4. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்
 6. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் இன்று (புதன்கிழமை) மின்தடை
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை தீபத் திருவிழா; பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்,...
 8. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை நிலவரம்
 9. தமிழ்நாடு
  TRP Exam- பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பிக்க...
 10. நாமக்கல்
  திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல்...