Halim Seeds in Tamil Name-தாய்ப்பால் அதிகரிக்க சாலியா விதை..!

Halim Seeds in Tamil Name-தாய்ப்பால் அதிகரிக்க சாலியா விதை..!

halim seeds in tamil name-சாலியா விதை (கோப்பு படம்)

சாலியா விதைகள் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இந்த பதிவில் சாலியா விதையின் நன்மைகளை அறிந்துகொள்வோம் வாங்க.

Halim Seeds in Tamil Name

ஹலிம் விதைகள் தமிழில் சாலியா விதைகள் என்று அழைக்கபடுகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் பல நன்மைகளை உள்ளடக்கியது. சாலியா விதைகளை சாப்பிடுவதால் நம் உடலிற்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Halim Seeds in Tamil Name

15 கிராம் சாலியா விதையில் உள்ள சத்துக்கள்:

4 கிராம் புரோட்டீன்

6 கிராம் கார்போஹைட்ரேட்

1 கிராம் நார்ச்சத்து

மேலும் நமது உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய நல்ல கொழுப்பு சத்துக்களும் உள்ளது.

மேலும் இவற்றில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B1, B2, B3 ஆகிய சத்துக்கள் உள்ளது.

இரத்த சோகை:

சாலியா விதைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இவை இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ஒரு தேக்கரண்டி ஹலிம் விதைகள் நம் உடலிற்கு 12 மி.கி இரும்பு சத்தை வழங்குகிறது.

Halim Seeds in Tamil Name

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க:

சாலியா விதைகளில் புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், சக்திவாய்ந்த கேலக்டோகாக் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டவும், பராமரிக்கவும் கேலக்டோகாக்ஸ் உணவுகள் பயன்படுகின்றன. பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஹலிம் விதைகளை சாப்பிடுவது நல்லது.

மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது:

வழக்கமான மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கும் மிகவும் முக்கியமானது. சாலியா விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன, இவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றுகின்றன, இதனால் ஒழுங்கற்ற மாதவிடாயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்குவதற்கும் இது இயற்கையான வழியாகும்.

Halim Seeds in Tamil Name

உடல் எடையை குறைக்க உதவுகிறது:

சாலியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து வளமான அளவில் இருப்பதால், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும், அதிகப்படியான உணவு உட்க்கொள்வதையும் தவிர்க்க உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஹலிம் விதைகளை சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

சாலியா விதையில் ஃபிளாவனாய்டுகள் (ஆன்டிஆக்ஸிடன்ட்கள்), ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஒரு சிறந்த உணவாகும். ஹலிம் விதைகள் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

Halim Seeds in Tamil Name

மலச்சிக்கலை போக்க உதவுகிறது:

சாலியா விதைகளில் வளமான அளவில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

சாலியா விதை எப்படி சாப்பிடும் முறை:

இந்த விதையை ஊறவைத்து பாலில் கலந்து சாப்பிடலாம்.

பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.

இனிப்பு பண்டங்களில் பொடி செய்து கலந்து சாப்பிடலாம்.

Tags

Next Story