தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். (பைல் படம்)
உலகம் முழுவதும், கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி வாழ்த்தும் விதமாக தேசிய மருத்துவர்கள் தினம் ஆண்டு தோறும் ஜூலை 1 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போதைய கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் மருத்துவர்களின் சேவை மகத்தானது. அல்லும்-பகலும் அயராமல் பணிசெய்து இலட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிவரும் மருத்துவர்களின் நலனை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
தங்களுக்காக மட்டுமல்லாமல் மற்ற உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொது நலத்தோடு பணியாற்றும் மருத்துவர்களின் வாழ்க்கைக்கு அரணாக இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu