gallbladder in tamil-பித்தப்பை கல் இருக்குன்னு எப்டீ கண்டுபிடிக்கிறது..? வாங்க பார்க்கலாம்..!

gallbladder in tamil-பித்தப்பை பித்தத்தை சேமித்து வைக்கும் ஒரு சேமிப்பு அறை. செரிமானத்திற்கு தேவையானபோது அது பகிரும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
gallbladder in tamil-பித்தப்பை கல் இருக்குன்னு எப்டீ கண்டுபிடிக்கிறது..? வாங்க பார்க்கலாம்..!
X

gallbladder in tamil-பித்தப்பை கல் ஏற்படுத்தலினால் உருவாகும் வலி.(கோப்பு படம்)

gallbladder in tamil-பித்தப்பை (Gallbladder) என்பது கல்லீரலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற உறுப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கொழுப்பு வகை உணவை சிதைப்பதற்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருக்கும் அமைப்பு ஆகும். தேவையான நேரத்தில் குடலுக்குள் அனுப்பும் பணியை செய்கிறது.


பித்தப்பையின் முதன்மையான பணி பித்தத்தைச் சேமித்து வைத்தல். இது உணவிலுள்ள கொழுப்பினை சிதைப்பதற்கு தேவையானது.ஈரலில் சுரக்கப்படும் இந்த பித்தம் கல்லீரல் நாளத்தின் வழியாக அனுப்பப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. குறித்த நேரத்தில் பித்தப்பையில் 30 முதல் 60 மில்லிலிட்டர் பித்தம் சேமிக்கப்படும்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பதார்த்தங்கள் உணவுக் குழாயினை அடையும் போது அது முன்சிறுகுடல் மற்றும் நடு சிறுகுடலிலிருந்து முன்கொலிசிஸ்டொகைனினின் சுரப்பைத் தூண்டுகிறது. இச்சுரப்பின் காரணமாக பித்தப்பை பித்தத்தை உள்வாங்கும் வகையில் இறுக்கமுற்று அதன் உள்ளடக்கத்தை பொது பித்தக் குழாயில் வெளியிட, அது இறுதியில் முன்சிறுகுடலை வந்தடைகிறது. பித்தம் கொழுப்பை குறிப்பிட்ட அளவு சிதைக்கச் செய்து உணவில் இருந்து கொழுப்பை உறிஞ்சுவதற்கு அதன் தன்மையை அதிகரிக்கிறது.பித்தம், பித்த உப்புக்களையும், நீரையும் முதன்மையாக கொண்டிருக்கும். ஹீமோகுளோபின் உற்பத்திச் செய்யப்படும்போது வெளியேறும் விளைபொருளான பிலிரூபின் எனப்படும் பித்த நிறப்பொருள் வெளியேற்றப்படுகிறது.

gallbladder in tamil

பித்தப்பை கல்

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்படுவது, அதன் நேர் பின்னே முதுகில் வலி ஏற்படுதல், வலி வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும்.

இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான். இது மனிதனின் ஈரலுக்கு அடிப்பகுதியில் அமைந்து இருக்கிறது. உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது. அது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக் கொள்ள உதவும் ஒரு தனி அறை ஆகும். நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.


பித்தப்பை கல் அறிகுறிகள்

இந்த பித்தப்பை கல் பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும். இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும்.

gallbladder in tamil

பித்தப்பையில் கல் இருந்தால் பித்தப்பை வீக்கம் ஏற்படும். வயிற்றின் மேல்பகுதியிலும், முதுகின் மேற்புறத்தில் வலி உண்டாகும். இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் ஏற்படும். வாந்தி உண்டாகும். உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயுத் தொல்லை ஏற்படும், அஜீரணப் பிரச்னைகள் ஏற்படும்.


தீர்க்கும் முறைகள்

  • நெருஞ்சி இலையை பொடிசெய்து காலையில் இரண்டு டீ ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஒரு வாரத்தில் இந்த நோயை குணப்படுத்தி விடலாம்.
  • கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும். இந்த அறிகுறிகள் தெரிந்தால், எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.
  • ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு நன்றாக கொதி வந்தவுடன், அதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நன்றாக நீர் ஆறியவுடன் வடிகட்டி குடிக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் குணமாகும்.

gallbladder in tamil


பித்தப்பை அகற்றம்

கீழாநெல்லி கல்லையும் கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னி கல், கல்லீரல் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலத்தில் அஜீரணக்கோளாறு, குடற்புண் போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

Updated On: 24 Jan 2023 8:41 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    வேளாங்கண்ணி மாதா கோயில்: பக்தி, அதிசயம், கடற்கரை
  2. நத்தம்
    நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
  4. இந்தியா
    உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்
  5. சுற்றுலா
    திருவண்ணாமலை கோவில் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள
  6. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் இல்லனா என்ன இந்த சட்னி செய்து பாருங்க...!
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  9. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக