sugar symptoms in tamil-சர்க்கரை குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சா குணப்படுத்தலாம்..! தெரியுமா உங்களுக்கு..?

sugar symptoms in tamil-இரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபடுவது என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு. அறிகுறிகள் தோன்றும்போதே கண்டுபிடித்தால் குணமாக்கிவிடலாம்.

HIGHLIGHTS

sugar symptoms in tamil-சர்க்கரை குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சா குணப்படுத்தலாம்..! தெரியுமா உங்களுக்கு..?
X

sugar symptoms in tamil-சர்க்கரை குறைபாட்டின் அறிகுறிகள் (கோப்பு படம்)

sugar symptoms in tamil-உடலில் சர்க்கரையின் அளவு கூடும்போது ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, அதில் சர்க்கரை குறைபாட்டுக்கான சில அறிகுறிகள் இருந்தால் அது சர்க்கரை குறைபாடாக இருக்கலாம். சர்க்கரை குறைபாடு தற்போதைய காலகட்டத்தில் நமது உணவு பழக்கவழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சிகள் இல்லாததாலும் உடல் பருமன் ஏற்பட்டு சிறு வயதினரைக் கூட சர்க்கரை குறைபாடு விட்டுவைக்கவில்லை.


சர்க்கரை குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் இரண்டும் உடன்பிறந்த இரட்டைச் சகோதரிகள் என்பார்கள். ஆமாம். சர்க்கரை வந்தால் ரத்த அழுத்தமும் உடன் வந்துவிடும். அதேபோலவே ரத்த அழுத்தம் இருந்தால் சர்க்கரை நோயும் வந்துவிடும் என்பார்கள். ஆக, சர்க்கரை உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டு வரும் சாளரமாக இருக்கிறது.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை ஆகும் என்பதை உணரவேண்டும். ஆகவே, உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் ஏற்படப்போகும் பல பெரிய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

அப்படித் தான் சர்க்கரை குறைபாடும். சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுப்பிடித்தால் போதும். சர்க்கரை குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒரே வழி, அதை உடனே கண்டறிவது மட்டுமே. அதன்மூலம் தக்க தடுப்பு முறைகளை மேற்கொண்டால் தடுத்துவிடலாம்.


sugar symptoms in tamil

சர்க்கரை குறைபாட்டின் சில அறிகுறிகள்

சர்க்கரை அல்லது நீரிழிவு குறைபாடு வருவதற்கு முன்பு உடலில் பல வகையான ஆரம்ப அறிகுறிகள் தென்படும். அவைகளை பார்ப்போம் வாங்க.

பலநோய்களுக்கு வாசல்

இன்றைய நவீன உலகில், நீரிழிவு குறைபாடு என்பது உலகளாவிய குறைபாடாக மாறிவிட்டது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்துகிறது. நீரிழிவு குறைபாடு இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது.


கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூட கர்ப்ப கால நீரழிவு குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மன அழுத்தம், நீரிழிவு குறைபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை அறிந்துகொள்வது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு என்பது நீரிழிவு குறைபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். குறிப்பாக, இந்தியாவில் நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு இந்த டைப்-2 நீரிழிவு குறைபாடு உள்ளது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், நம் நாட்டில் பெரும்பாலானோர் சர்க்கரை குறைபாட்டு பரிசோதனை செய்துகொள்வதில்லை. ஏனெனில் அதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவு. நீரிழிவு குறைபாடு வருவதற்கு முன்பு, சில ஆரம்ப அறிகுறிகள் நிச்சயமாக தென்படும்.

அதன் அறிகுறிகள் :


நீரிழிவு குறைபாடு யார் யாருக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம்?

  • முந்தைய தலைமுறையில் நீரிழிவு குறைபாடு இருந்தவர்களுக்கு
  • அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்புச் சத்து மிகுந்த உணவை உண்பவர்களுக்கு
  • டிரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள், குறைந்த எச்.டி.எல். உடையவர்கள்
  • நீரிழிவு நோயின் முந்தைய கட்டத்தில் இருப்பவர்களுக்கு டி2டிஎம் டைப்-2 நீரிழிவு குறைபாடு வரும் வாய்ப்பு அதிகம்.

sugar symptoms in tamil


அப்படி வந்து விட்டால், நீரிழிவு குறைபாடு ஏற்படும் முன் அறிகுறிகள் என்ன?

1. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுமாயின் சர்க்கரை குறைபாடாக இருக்கக்கூடும்.

2. சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது வழக்கம்.

3. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரை குறைபாடு இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 சர்க்கரை குறைபாட்டை உருவாக்கும்.

4. சர்க்கரை குறைபாடு உள்ளவர்களின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியாது. அதனால், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

5. எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை குறைபாட்டின் அறிகுறி தான்.

6. மங்கும் பார்வைத்திறன், எடை கூடுதல் அல்லது குறைதல், தோல் அரிப்பு, சிறுநீர்த் தொற்று, நீர்ச் சமநிலைக் குறைபாடு போன்றவை ஏற்படும்.

7. அடிக்கடி உடற்சோர்வு:


sugar symptoms in tamil

சர்க்கரை குறைபாடு உடையவர்களின் உடல், சர்க்கரையை உபயோகித்து அதற்கு தேவைப்படும் சக்தியைப் பெற முடியாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடற்சோர்வு, அசதி போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

8. புண்கள் சீக்கிரம் குணமடையாது:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டால் அது குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.


9. ஈறுகளில் வீக்கம்:

சர்க்கரை குறைபாடு வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்னைகள் சர்க்கரை குறைபாடு வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

நீரிழிவு குறைபாடு (Type -1) வகை 1-ல் கணையம் இன்சுலினை சுரக்காது. (Type -2) வகை 2 -ல், கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்காது. மேலும் அது உருவாக்கும் இன்சுலின் எப்போதும் வேலை செய்யாது. இரண்டு வகைகளும் நீரிழிவு குறைபாட்டின் வடிவங்கள்.)

Updated On: 17 Feb 2023 8:56 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
  2. தேனி
    இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
  3. தேனி
    அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
  4. தேனி
    தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
  5. கோவை மாநகர்
    ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
  6. இந்தியா
    மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
  7. இந்தியா
    வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
  8. குமாரபாளையம்
    விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
  10. உலகம்
    Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...