துரித உணவுகள் உட்கொள்வது கருவுறுதலை பாதிக்கும்..! ஆண்களே, பெண்களே உஷார்..!

துரித  உணவுகள்  உட்கொள்வது  கருவுறுதலை  பாதிக்கும்..! ஆண்களே, பெண்களே உஷார்..!

Fast Food Affects Fertility-துரித உணவுகள் கருவுறுதலை பாதிக்கும். (கோப்பு படம்)

துரித உணவுகளை உண்பது கருவுறுதலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன.

Eating fast food affect fertility in Tamil, Eating fast food impact fertility health, Eating junk food impact fertility health

நாம் அடிக்கடி விரும்புகின்ற கவர்ச்சியான உணவுகளில் துரித உணவுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால், அவை ஆரோக்யத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களிலும் கருவுறுதலில் குறிப்பிடத்தக்க பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன என்பது தெரியுமா? அதுகுறித்து அறிந்துகொள்வது அவசியம் ஆகும்.

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பல்வேறு காரணிகள் கருவுறுதலை பாதிக்கலாம். மரபணு முன்கணிப்புகள் அல்லது உடல் பாதிப்புகள் போன்ற சில அம்சங்கள் ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. அவை நம் கையில் இல்லை. ஆனால், உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை போன்றவை முற்றிலும் நமது பிடியில் உள்ளன. துரித உணவு உட்கொள்வது பெண்களின் கருவுறுதலை பாதிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, உகந்த தகுதியான கருவுறுதல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த நமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும்.


துரித உணவும் கருவுறுதல் முறையும்

துரித உணவு உண்பது கருவுறுதலில் பாதகமான விளைவை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் தெளிவுபடுத்துக்கொன்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் ராபின்சன் ஆராய்ச்சி நிறுவனம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த 5,600 பெண்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வில் கருத்தரிப்பில் உணவுப் பழக்கத்தின் தாக்கம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க அவதானிப்புகளை மேற்கொண்டனர். துரித உணவை உட்கொள்வது கருத்தரிப்பதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வதில் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. மேலும் துரித உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வரை கருவுறாமை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

மறுபுறம், அதிகமான பழங்கள் உட்கொள்ளல் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதையும் அவர்கள் கவனித்தனர். இது கருத்தரிப்பு செயல்முறையை விரைவுபடுத்துகிறது. குறைந்த அளவு பழங்களை உட்கொள்ளும் பெண்கள் கருவுறாமை அபாயத்தை எதிர்கொள்கின்றனர். 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதம் அளவுக்கு கருவுறாமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்த ஆய்வு கருவுறுதல் செயல்பாடுகளில் உண்ணும் உணவு முக்கிய பங்கு வகிப்பதை எடுத்துக்காட்டுகிறது மேலும் இனப்பெருக்க வளத்தை பெருக்க ஆரோக்யமான உணவை தேர்வு செய்து உட்கொள்வதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.

ஒரு பெண்ணின் இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பு அமிலம் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதுடன் கருமுட்டைகளின் தரத்தை பாதிக்கும் என்று ஆய்வு அவதானிப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


விந்தணு பாதிப்பு

ஆணின் கருவுறுதலைப் பொறுத்தவரை, துரித உணவு உட்கொள்வது விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணு இயக்கத்தை பாதிக்கலாம். சுமார் 3,000 டென்மார்க் ஆண்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், அவர்களின் உணவுப் பழக்கத்தை கருத்தில் கொண்டு அவர்களின் விந்தணுக்களின் தரத்தை ஆய்வு செய்தனர்.

பழங்கள் போன்ற தரமான உயர்தர உணவைப் பராமரிப்பது, துரித உணவு உட்கொள்வதைக் குறைப்பது மேம்பட்ட கருவுறுதல் மற்றும் விரைவாக பெற்றோர் ஆவதை உறுதிப்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பீட்சா, பர்கர்கள், எண்ணெயில் பொரித்தவைகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்ளும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை, காய்கறிகள், மீன்கள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவை உண்பவர்களைக் காட்டிலும் 25 சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்யமான உணவு உண்பவர்களின் விந்தணு எண்ணிக்கை சுமார் 167 மில்லியனாக இருப்பதாகவும், அதேசமயம் ஆரோக்யமற்ற உணவை உண்பவர்களின் எண்ணிக்கை சுமார் 122 மில்லியனாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதலாக, பல விஞ்ஞானிகள் கருவுறுதல் மற்றும் துரித உணவு நுகர்வு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை குறிப்புகளாக எழுத (Decode) முயன்றனர். தவறான உணவைப் பின்பற்றும் ஆண்களுடன் ஆரோக்யமான உணவைப் பின்பற்றும் ஆண்களை ஒப்பிடும்போது, ஆரோக்ய உணவை உண்பவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் இணையும்போது கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு 83 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் அதேவேளையில் தவறான உணவு உட்கொள்பவர்கள் மத்தியில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு 47 சதவீதம் மட்டுமே உள்ளது என்பதும் புலப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் துரித உணவுகள் உட்கொள்வதைக் குறைப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன. மேலும் ஆண்களின் கருவுறுதல் மற்றும் IVF சிகிச்சையின் வெற்றியிலும் உணவுத் தேர்வுகள், குறிப்பாக டிரான்ஸ்-கொழுப்பு உட்கொள்ளல் ஆகியவற்றின் பாதிப்பை வலியுறுத்துகின்றன.


ஆரோக்யமான வாழ்க்கை முறைக்கான பாதை

வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வது ஆரோக்யமான உணவை பராமரிக்க உதவுவதுடன் ஆரோக்யமான வாழ்க்கைக்கும் உதவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை மட்டுமே உண்பவர்கள் உயர்தர உணவுகளை உட்கொள்கின்றனர். இது ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்ய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

மேலும், வீட்டில் சமைத்த உணவைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று குறிப்பிடுவதற்கு காரணம், வெளியில் சமைத்த சில உணவுகளில் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள் (EDCs) காணப்படலாம்.

வீட்டில் தயாரிக்கப்படாத உணவுகளை உட்கொள்பவர்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் செய்வதற்கு பயன்படுத்தபப்டும் பித்தலேட் மற்றும் பிஸ்பெனால் ஏ போன்ற EDC (endocrine-disrupting chemicals) களுக்கு ஆளாக நேரிடும். இது கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மேலும், முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நன்மை பயக்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும், சமநிலையான மற்றும் சத்தான உணவுக்கு பங்களிக்கும். இந்த உணவுத் தேர்வுகள் சிறந்த ஆரோக்ய விளைவுகளை உருவாக்கி இனப்பெருக்க ஆரோக்யத்துக்கு உதவும்.

Tags

Next Story