உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, குளிர்காலத்திலும் தயிர் சாப்பிடுங்க...!
மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும் குளிர்காலம் வந்தாலே பலரும் தயிர் சாப்பிடுவதை நிறுத்துவது தவறு. தாராளமாக தயிருடன் சாப்பிடலாம்.
HIGHLIGHTS

தயிர் சாதம் சாப்பிடலாம் வாங்க!
குளிர் காலத்தில், தயிரை தவிர்க்க முக்கிய காரணம், சளி மற்றும் இருமல் வராமல் இருக்கத்தான். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தயிர் சாப்பிட கொடுக்கமாட்டார்கள். ஆனால், தயிர் ஊட்டச்சத்து மிக்கது மட்டுமின்றி இதய ஆரோக்கியம், எலும்புப்புரை அபாயத்தை குறைத்தல் மற்றும் எடையை கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு வழிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தயிரில் 'லாக்டிக்' அமிலம், புரதங்கள், ஆண்டி ஆக்சிடண்டுகள், 'ப்ரோபயோடிக்ஸ்' மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
தயிரில் 'ப்ரோயோட்டிக்'குகள் நிறைந்திருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தொற்று வியாதிகள் எளிதில் தொற்றாமல் தடுக்கிறது. 'புரோபயோட்டிக்'குகள் பொதுவாக அழற்சியை குறைக்கக்கூடியவை. வைரஸ் தொற்று முதல் குடல் அழற்சி வரை பல்வேறு தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்புசக்தியை வழங்குகிறது. மேலும் தயிரில் மக்னீசியம், ஜிங்க், வைட்டமின் டி, செலெனியம் போன்றவை இருப்பதால், உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
செரிமானத்தை தூண்டுதல்
தயிரில் நல்ல பாக்டீயாக்கள் இருப்பதால், செரிமானத்தை தூண்டுகிறது. குடல் எரிச்சல், அஜீரணம் மற்றும் பிற வயிறு பிரச்னைகளை குணப்படுத்த தயிரில் உள்ள 'லாக்டோபேசில்லஸ்' போன்ற 'ப்ரோபயோட்டிக்'குகள் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்க உதவுதல்
தயிரில் பூஜ்ஜிய கலோரிகளே இருந்தாலும் அதீத ஊட்டச்சத்து நிறைந்தது. தயிரிலுள்ள பல்வேறு மூலக்கூறுகள் எடை குறைப்பு மற்றும் அதனை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தயிரில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் இரண்டும் நீண்ட நேரத்திற்கு பசியின்மையை ஏற்படுத்துவதால் நொறுக்குத்தீனி சாப்பிட தூண்டாது. மேலும் இது எடையை, குறிப்பாக இடுப்புச்சதையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய காரணங்களுக்காக எந்த காலமானாலும், தினசரி டயட்டில் தயிர் இடம்பெறுவது நல்லது. குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது பற்றி பல்வேறு தவறான கருத்துகள் பரவிவருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
தவறான கருத்துகளும், உண்மையும்
தயிர் சாப்பிட்டால் சளி, இருமல் வரும். ஆனால் உண்மையில் குளிர்காலத்தில் தயிரை பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை விட, டெஸர்ட்டாக சாப்பிடலாம். இதிலுள்ள 'ப்ரோபயோட்டிக்'குகள் மற்றும் வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி மற்றும் இருமலை தள்ளி வைக்கும்.
இரவில் தயிர்; தினசரி உணவுடன் இரவில் தயிர் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என்கின்றனர் டாக்டர்கள். மூளையில் 'டிரிப்டோபான்' எனப்படும் தனித்துவமான அமினோ அமிலத்தை வெளியிட உதவுவதால், நரம்புகளை மிகவும் தளர்த்தி மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் தெளிவாக சிந்திக்க உதவுகிறது. இரவில் தயிர் சாப்பிடுவது மூளையின் நியூரான்களை ரீசார்ஜ் செய்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
பாலூட்டும் தாய்மார்கள் தயிர் சாப்பிடலாம்
பாலூட்டும் தாய்மார்கள் தயிர் சாப்பிட்டால் அது குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும் என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் தயிரிலுள்ள ஊட்டச்சத்தானது தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் கிடைக்கும் என்பதுதான் உண்மை. குளிர்காலத்திலோ அல்லது இரவு நேரங்களிலோ தாய்மார் தயிர் சாப்பிடுவதால் நோய்த்தொற்றோ அல்லது சளியோ பிடிக்காது. தயிரிலுள்ள நல்ல பாக்டீரியாவானது நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டுகிறது. லாக்டோபேசில்லஸுடன் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்திருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எடை குறைக்க விரும்புபவர்கள் தயிர் சேர்த்துக்கொள்ளக்கூடாது.