'அம்மா ஆகிட்டீங்க' என்பதை எப்படி தெரிஞ்சிக்கிறது..? இப்ப தெரிஞ்சுக்கங்க..!

Pre Pregnancy Symptoms in Tamil
Pre Pregnancy Symptoms in Tamil
கர்ப்பம் ஆகிவிட்டதை அறிந்துகொள்ள பல அறிகுறிகள் உள்ளன. ஆனால், எல்லா அறிகுறிகளும் எல்லாருக்கும் காட்டாது. எப்படியான அறிகுறிகளைக் காட்டும் என்பதை பார்ப்போம் வாங்க.
மூச்சுத் திணறல்
early pregnancy symptoms in tamil-சாதாரணமாக நடக்கும்போது கூட திடீர் மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா? அப்படியானால் அது கர்ப்பமாக இருப்பதால் கூட இருக்கலாம். வளரும் கருவிற்கு ஆக்சிஜன் தேவை என்பதால், சுவாசத்திற்கு ஒரு சிறிய குறுகிய இடைவெளி ஏற்படலாம். இந்த நிலை கர்ப்ப காலம் முழுவதும் தொடரலாம். ஏனெனில் வளர்ந்து வரும் குழந்தை, தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதன் விளைவாக ஏற்படுகிறது.
மார்பகங்களில் தளர்வு
உள்ளாடை அணியும் போது லேசான வலி ஏற்படுவதை போல் உணர்வது அல்லது மார்பகங்கள் கொஞ்சம் பெரிதாக உள்ளது போன்ற உணர்வு அல்லது தளர்ந்த மற்றும் கனத்த மார்பகங்கள் போன்ற உணர்வுகள், மார்பக காம்பு கருமையடைதல் மற்றும் மார்பு நரம்புகள் விறைப்படைதல் முதலியன கர்ப்பமாக இருப்பதற்கு ஒரு முதல் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில்,கர்ப்பம் ஆனது உறுதியானவுடன் குழந்தைக்கு பாலூட்டத் தேவையான முன்னேற்பாட்டை செய்வதன் அறிகுறிதான் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள். ஆகவே படுக்கைக்கு செல்லும்போது தளர்ந்த உள்ளாடையை அணியலாம்.
சோர்வு
புத்தகத்தில் ஒரு பக்கம் கூட படிக்க முடியாமல் தூக்கம் வருகிறது என்றால் அல்லது திடீரென சோர்வடைந்தாலோ, அது உடலில் ஹார்மோன்கள் அதிகரித்ததன் காரணமாக இருக்கலாம். பல பெண்களுக்கு சோர்வு முதல் மூன்று மாதங்கள் தொடரும். பின்னர் இது விட்டு விட்டு வரலாம்.
குமட்டல்
பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு கரு 6 வாரங்கள் ஆனா நிலையில் குமட்டல் ஏற்படுகிறது. ஆனால் சிலருக்கு காலை சுகவீனம் (துரதிர்ஷ்டவசமாக காலை, மதியம் மற்றும் இரவு ஏற்படலாம்) ஏற்படுவதை உணர முடியும். இது இரண்டாவது அல்லது மூன்றாவது மாத கால கட்டத்தில் நுழையும் போது பெரும்பாலும் குறைந்துவிடும். இடையிடையே வயிறு நிரம்பக்கூடிய நொறுக்குத் தீனி மற்றும் இஞ்சி மிட்டாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் போகுதல்
early pregnancy symptoms in tamil-திடீரென்று சிறுநீர் கழிக்காமல் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை என்றால், கர்ப்பம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் உடலானது கூடுதல் திரவங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக, சிறுநீர்ப்பைக்கு அதிக வேலை .ஏற்படுகிறது. அதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
தலைவலி
கர்ப்பமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று, ஹார்மோன் மாற்றங்கள் விளைவாக ஏற்படும் தலைவலியாகும்.
பின் முதுகில் வலி
முதுகு வலி இல்லாத போது, பின் முதுகு லேசாக தளர்வாக காணப்பட்டால், அது தசைநார்கள் தளர்ந்து வருவதன் காரணத்தால் ஏற்படுவதாகும். இந்த வலி கர்ப்ப காலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏனென்றால், கர்ப்பத்தின் போது எடை அதிகரிப்பதால், ஈர்ப்பு மையம் விலகுவதன் காரணமாக இது ஏற்படுகிறது.
தசைப்பிடிப்பு
இது மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறியா? அல்லது கர்ப்பமா? என்பதை வரையறுக்கமுடியாது. ஆனால் கர்ப்பப்பைக்குள் சுரண்டுவது போன்ற உணர்வு இருந்தால் , அது குழந்தை வளர்வதற்கு தயாராக கருப்பை நீட்சி அடைகிறது என்று அர்த்தம்.
பசி அல்லது தாகம்
திடீரென்று, வயிறு போதுமான சிட்ரஸ் பெற முடியாத நிலை அடையும் போது அல்லது வயிற்றில் அஜீரண கோளாறு முதலியவை புதியதாக தோன்றும் பட்சத்தில் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.
மலச்சிக்கல் மற்றும் வீக்கம்
ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரித்து இருந்தால் அது செரிமான அமைப்பு குறைவடைவதன் காரணமாக ஏற்படுகிறது. இது கர்ப்பத்தின் காரணமாக, கூடுதல் புரோஜெஸ்டிரோன் உருவாவதன் மூலமாக ஏற்படுகிறது.
நிலையற்ற மனம்
அடிக்கடி மனதில் சந்தோஷம், கஷ்டம் போன்ற மாற்றங்களை உணர்கிறீர்கள் என்றால், உடல் நலம், புதிய ஹார்மோன்களை சுரக்கத் தொடங்கியுள்ளது என்பதை காட்டுகிறது.
வயிற்றின் அடிப்பகுதி வெப்ப உயர்வு
கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்வதற்கான இன்னொரு அறிகுறி வயிற்றின் அடிப்பகுதியின் வெப்ப நிலை அதிகமாவது. கருத்தரிப்பதற்கு சாத்தியமாக 2 வாரங்களாக உயர்ந்து வந்திருப்பதை அறியலாம். அதன் பிறகும் இந்த வெப்ப நிலை உயர்வு காணப்பட்டால், கருவுற்றிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
தலைச்சுற்றல் அல்லது மயக்கமுறுதல்
இது குறைந்த சர்க்கரை அளவு அல்லது இரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படுவது.எனவே, நன்றாக சாப்பிட்டு, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் பின்னரும் தொடர்ந்தால், கர்ப்பம் தான்.
லேசான ரத்தக்கசிவு
மாதவிடாய் வரவில்லையா? அல்லது அது சாதாரணமாக வருவதை விட லேசாக இருந்தது என்றால் மற்றும் எதிர்பார்க்கும் நாட்களை விட சற்று முன்பாகவே வந்துவிட்டது என்றால், கரு முட்டை கருவுறுதலுக்கு தயாராகிறது என்பது பொருள். ஏனென்றால் கருவுற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் மோதும்போது சிறிது இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு சாத்தியமுள்ளன.
மாதவிடாய் தாமதமாவது
கர்ப்பம் உண்டாவதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிலக்கின் (PMS) ஆரம்ப அறிகுறிகளாகவே இருக்கும். அதிகமாக சொல்லப்படும் தடயம் மாதவிடாய் தாமதமாவது.
கர்ப்ப சோதனை
அம்மா ஆகிவிட்டீர்களா இல்லையா என்று உறுதியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், பீ-ஸ்டிக் சோதனை (pee-stick test) செய்து கொள்ளும் வரை, அதை உறுதி செய்து கொள்ள முடியாது. அந்த சோதனை முடிவு எதிர்மறையாக தங்களுக்கு கர்ப்பம் இல்லை என்று தெரிய வந்தும், மாதவிடாய் தாமதமானால், சற்று முன்கூட்டியே இந்த சோதனையை செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே சில நாட்கள் காத்திருந்து மீண்டும் சோதனை செய்ய வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu