/* */

உடல் பருமனை குறைக்கும் காய்ந்த அத்திப்பழங்கள்

காய்ந்த அத்திப்பழங்களை சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்க முடியும்.

HIGHLIGHTS

உடல் பருமனை குறைக்கும் காய்ந்த அத்திப்பழங்கள்
X

பைல் படம்.

அத்திப்பழத்தின் உலர்ந்த வடிவம், அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேன், நீர் போன்றவற்றில் ஊற வைத்தும் சாப்பிடலாம். காய்ந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். இதில் அதிக கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நீரில் ஊற வைக்கும் போது கரையும் நார்ச்சத்து உடைந்து எளிதில் உடலுக்குள் செரிக்கப்படுவதால் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது.

இரவில் ஊறவைத்து அதிகாலையில் சாப்பிட்டால் நல்ல பலனை தரும். உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மூன்று விஷயம் என்னவென்றால், அத்திப்பழம் பேரிச்சம்பழம் தேன் இவை மூன்றையும் சொல்லலாம். இதனை நாள்தோறும் குறைவான அளவில் சாப்பிட்டு வந்தாலே போதுமானது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் வலிமை பெறும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிரம்பியுள்ளதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருப்பதற்கு இதனை அன்றாடம் உட்கொள்வது மிகச்சிறந்தது. அதிலும் தற்போது நிறைய பேர் அவஸ்தைப்படும் உடல் பருமனைக் குறைக்க, உலர்ந்த அத்திப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே மலமிளக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளான எரிச்சலூட்டும் குடலியக்க பிரச்சனைகளும் தடுக்கப்படும்.

Updated On: 15 July 2022 2:45 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..