Diwali dental Health Tips-தீபாவளி இனிப்பை சாப்பிட்டுவிட்டு பல் சுத்தம் செய்ங்க..!

Diwali dental Health Tips-தீபாவளி இனிப்பை சாப்பிட்டுவிட்டு பல் சுத்தம் செய்ங்க..!
X

Diwali dental health tips-பண்டிகை கால பல் பாதுகாப்பு (கோப்பு படம்)

சொல் சுத்தம் வேணுமென்றால் பல்சுத்தம் வேணுமுங்க. சொல் சுத்தம் என்றால் நான் சொல்றது உச்சரிப்பைங்கோ. பல் போனா சொல் போய்டும் பாருங்க.

Diwali dental Health Tips, Diwali 2023, 2023 Diwali Sweets,Dental Health Dos and Don'ts to Follow During the Festive Season,Festive Season and Tooth Decay,Diwali Festivities

தீபாவளி பண்டிகை வந்தாச்சு. அதனால் வீட்டில் நிறைய இனிப்புகள் செய்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பலகாரம் என்றால் சொல்லவா வேண்டும்? புகுந்து விளையாடுவார்கள். ஆனாலும் நாம் பல்லை கவனிக்கவேண்டும் அல்லவா?

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் இனிப்புக்கு பஞ்சம் இருக்காது. இனிப்பு பொதுவாக பல் ஆரோக்யத்தை அச்சுறுத்தும். பண்டிகைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய சில முக்கியமானவைகளை இங்கே பார்க்கலாம் வாங்க.


Diwali dental Health Tips

நாம் அனைவரும் பண்டிகைக் காலத்துக்குத் தயாராகிவிட்டோம். ஆனால், பண்டிகைக் காலங்களில் வாயை ஆரோக்யமாக வைத்திருப்பதை கண்டுகொள்ளாமல் நாம் புறக்கணித்தால் அதற்கான விளைவுகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டும்.

நம்மில் பலர் பண்டிகைக் காலங்களில் இனிப்பு பண்டங்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அதிகமாக உட்கொள்ள முனைகிறோம். இது பல் சொத்தை, வாய் துர்நாற்றம், அல்லது பற்களுக்கு இடையில் உணவு சிக்கிக்கொள்வது போன்ற தொடர் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்கிறார் லைஃப்பெர்ரி ஹெல்த் நிறுவனத்தின் தலைமைப் பல் மருத்துவர் டாக்டர் சுர்பி பாட்டியா எல். உங்கள் பற்களை சிதைவு மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்க, பண்டிகைக் காலத்திற்கான சில பல் பாதுகாப்பு குறிப்புகளை டாக்டர் சுர்பி பகிர்ந்துள்ளார்.

Diwali dental Health Tips


சாப்பிட்ட உடனேயே வாயை நன்றாக கொப்பளிக்கவும். இது பல் பிரச்னைகளுக்கு பங்களிக்கும் உங்கள் பற்களில் உருவாகும் எஞ்சிய உணவுத் துகள்களை அகற்ற வழிவகுக்கும்.

நமது இந்திய பண்டிகைகளில் இனிப்பு இல்லாமல் எந்த பண்டிகையும் முழுமையடையாது. ஆனால் இனிப்புகள் மோசமானவை என்று குழந்தை பருவத்திலிருந்தே நமக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், இனிப்புகளில் அதிக அளவு அமிலம் உள்ளது.

இது சர்க்கரையைப் போலவே மோசமானது. மேலும் அவைகளை வாயில் வைத்தால் பல் சொத்தைக்கு வழிவகுக்கும். நீண்ட காலத்திற்கு சர்க்கரை பண்டங்களை உண்பதால் உங்கள் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர ஊக்குவிக்கிறது. மேலும் இந்த பாக்டீரியா அமிலத்தை உற்பத்தி செய்கிறது. அந்த அமிலம் உங்கள் பற்களை உண்ணும். அதனால்தான் சர்க்கரை கலந்த பசை போன்ற உணவுகளை முடிந்தவரை குறுகிய நேரத்திற்கு வாயில் வைத்திருப்பது நல்லது.

Diwali dental Health Tips


சூயிங்கம் உங்கள் பற்களை சுத்தம் செய்வதற்கும் உதவியாக இருக்கும். சர்க்கரை இல்லாத பசையை மெல்ல முயற்சிக்கவும். ஏனெனில் இது உங்கள் வாயில் உணவு ஒட்டும் தன்மையைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும்.


பழச்சாறுகள் மற்றும் பிற பானங்களிலிருந்து சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். மேலும் நீங்கள் ஒரு ஸ்ட்ரா மூலம் குடித்தால், அது உங்கள் பற்களின் பாதிப்புகளைக் குறைக்கும்.

பற்களை இனிப்புகள் மற்றும் உணவு சாப்பிடும்போது தவறான முறையில் சுத்தம் செய்யக் கூடாது. மேலும் வாய் முறையாக சுத்தம் செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.


பரிசுப் பொதியைக் கிழிக்க அல்லது உங்கள் புதிய ஆடைகளின் விலை பட்டியைக் கிழிக்க உங்கள் பற்களைப் பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் பற்களை சேதப்படுத்தலாம் அல்லது சில்லாக உடையலாம்.

Diwali dental Health Tips

விழாவை கொண்டாடுவதற்காக நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தால், உங்கள் பயணப் பிரஷ், மினி டூத்பேஸ்ட் மற்றும் பல் ஃப்ளோஸ் (மெல்லிய பல் சுத்தம் செய்யும் கம்பி) ஆகியவற்றைக் கொண்டு துலக்க மற்றும் ஃப்ளோஸ் செய்யலாம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!