/* */

Disorder Meaning in Tamil-ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் என்றால் என்ன? தெரிஞ்சுக்கங்க..!

பொதுவாக கோளாறுகள் அல்லது பாதிப்புகளை disorder என்று கூறுவது வழக்கம். குறிப்பாக மனம் அல்லது உடல் சார்ந்த பாதிப்புகளை வலியுறுத்த இந்த disorder பயன்படுகிறது.

HIGHLIGHTS

Disorder Meaning in Tamil-ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் என்றால் என்ன? தெரிஞ்சுக்கங்க..!
X

disorder meaning in tamil-ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்(கோப்பு படம்)

Disorder Meaning in Tamil

ஆங்கிலத்தில் Disorder என்றால் சாதாரண இயல்பு நிலையில் இருந்து மாறி இருப்பது அல்லது மாறுவது என்று பொருள். நோய் அடிப்படையில் பாதிப்பு அல்லது கோளாறு என்று நாம் பொருள் கொள்ளலாம். அதற்கு உதாரணமாக நாம் Autoimmune Disorder குறித்து பார்க்கலாம்.

ஆட்டோ இம்யூன் கோளாறு என்றால் என்ன..? அறிகுறிகள் எப்படி இருக்கும்

ஆட்டோ இம்யூன் கோளாறுகளால் சினிமா பிரபலங்களான சல்மான் கான், சமந்தா, நிக்கி ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர். Autoimmune disorders என்பது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் தவறான புரிதலால் நம் உடலையே தாக்குவதால் ஏற்படும் நோய் ஆகும்.

Disorder Meaning in Tamil

நோயெதிர்ப்பு மண்டலத்தின் முதன்மை செயல்பாடு பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் பாதுகாப்பதே. ஆனால் நம்முடைய வெள்ளை அணுக்களை கிருமிகள் என தவறாக நினைத்து நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் ஆன்டிபாடிகள் தாக்குவதால் இந்த ஆட்டோ இம்யூன் நோய் ஏற்படுகிறது.

பொதுவாக நம்முடைய நோயெதிர்ப்பு அமைப்பு பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவை வெளியில் இருந்து உடலுக்குள் ஊடுருவதை கண்டறிந்தவுடன், உடனே அவற்றை எதிர்த்து போராட தற்காப்பு உயிரணுக்களின் படையை அனுப்புகிறது.

நம் நோயெதிர்ப்பு மண்டலம் வெளியில் இருந்து வரும் செல்கள் மற்றும் நமது உடலுக்கு சொந்தமான செல்கள் என இரண்டையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் இந்த ஆட்டோ இம்யூன் கோளாறு விஷயத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு நம் தோல் அல்லது மூட்டுகள் போன்ற உடலின் ஒரு பகுதியை அந்நியமாக உணர்ந்து, ஆரோக்யமாக இருக்கும் செல்களை தாக்க கூடிய ஆட்டோ ஆன்டிபாடிஸ்களை உருவாக்குகிறது.

Disorder Meaning in Tamil


சில ஆட்டோ இம்யூன்கள் டைப் 1 நீரிழிவு நோயில் கணையம் போன்ற ஒரு உறுப்பை குறிவைக்கின்றன. அதே நேரம் Systemic lupus erythematosus (SLE) அல்லது Lupus போன்ற பிற ஆட்டோ இம்யூன் கண்டிஷன்ஸ் முழு உடலையும் பாதிக்க கூடியவையாக இருக்கின்றன.

ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர்களின் அறிகுறிகள்:

நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பு ஒரு உறுப்புக்கு மட்டும் அல்ல என டாக்டர் விவேக் பால் சிங் கூறியுள்ளார். ஆட்டோ இம்யூன் நோய் உடலின் பல பாகங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். டாக்டர் விவேக் பால் சிங்கின் கூற்றுப்படி, ஆட்டோ இம்யூன் நோயின் சில அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன :

Disorder Meaning in Tamil

  • தசை மற்றும் மூட்டு வலி அல்லது பலவீனம், காய்ச்சல்
  • முடி உதிர்வு, தோல் அல்லது வாயின் உள்ளே ஒயிட் பேட்ச்சஸ் ஏற்படுவது, எடை இழப்பு
  • வயிற்று வலி, மலத்தில் ரத்தம் அல்லது சளி வெளியேறுவது, வயிற்றுப்போக்கு, இன்சோம்னியா, மயக்கம்
  • அதிக களைப்பாக உணருவது, மார்பு வலி, கை அல்லது கால்களில் கூச்ச உணர்வு
  • குமட்டல், ரேஷ் மற்றும் அரிப்பு, வேகமான அல்லது சீரற்ற ஹார்ட் பீட், பார்வை மங்கலாதல், கவனம் செலுத்துவதில் சிரமம்
  • வாய், கண்கள் அல்லது சரும வறட்சி

Disorder Meaning in Tamil

சிகிச்சை:

ஆட்டோ இம்யூன் கோளாறுகளை சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியாது. ஆனால் ஹைப்பர்ஆக்ட்டிவ் இம்யூன் ரெஸ்பான்ஸை நிர்வகிக்கலாம். குறைந்தபட்சம் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கலாம் என்கிறது ஹெல்த்லைன். இப்யூபுரூஃபன் (மோட்ரின், அட்வில்) மற்றும் நாப்ராக்ஸன் (நாப்ரோசின்) போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) மற்றும் இம்யூன்-சப்ரெஸிங் மருந்துகள் உள்ளிட்டவை இத்தகைய கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.

சோர்வு, வலி, சரும வெடிப்பு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை போக்கவும் சிகிச்சைகள் உள்ளன. ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது மற்றும் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமும் பாதிக்கப்பட்ட நபர் தனது நல்வாழ்வை மேம்படுத்தி கொள்ளலாம்.

Updated On: 4 Dec 2023 10:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!