பெண்களின் முகம் இளமையாக தோற்றமளிக்க வெள்ளரிக்காய்..! படிச்சா விடமாட்டீங்க..!

Cucumber Benefits in Tamil
X

Cucumber Benefits in Tamil

Cucumber Benefits in Tamil-வெள்ளரிக்காய் கோடை காலத்தில் மட்டும் சாப்பிடுவது என்று எண்ணிவிடாதீர்கள். ஏராளமான மருத்துவ குணம் நிறைந்தது வெள்ளரிக்காய்.

Cucumber Benefits in Tamil

வெள்ளரிக்காய் பிஞ்சும், காயும் கோடைக்கேற்ற இதமான உணவுகள். வெள்ளரிக்காயை தினமும் கொஞ்சம் சாப்பிட்டுவந்தால், சிறுநீர்ப்பாதை எரிச்சல் தீரும். சிறுநீர் பிரிவது இயல்பாகும். நாக்கு வறட்சி தீரும். உணவு உட்கொண்ட பிறகு வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கு ஏற்ற காயாகும்.

வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால், இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிவிடும். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கலோரியை எரிப்பதற்கு வெள்ளரிக்காய் சிறப்பாக பயன்படுகிறது.

வெள்ளரி விதை வாய்ப்புண்ணை போக்கும் சிறந்த மருந்து. சரியான தூக்கம் இல்லாததாலும், வயதாவதாலும் பலருக்கு கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றுவது வழக்கம். இந்த கருவளையங்களைத் தவிர்க்க வெள்ளரியை விட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

டிப்ஸ்

  • வெள்ளரிக்காயை அரிந்து நன்றாக நசுக்கி, அதில் உள்ள சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து எடுத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு, கண்கள் மீது அந்தப் பஞ்சை வையுங்கள். பதினைந்து நிமிடங்கள் இப்படி வைத்து எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாகும். உங்களுக்கு இருந்த கருவளையங்கள் மாயமாகும்.
  • இது தவிர,வெள்ளரியை அப்படியே சிறுசிறு துண்டுகளாக வட்ட வடிவில் அரிந்தும் கண்கள் மீது வைக்கலாம்.பனிக்காலத்தில் உதடுகள் சிலருக்கு வெடித்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் மற்றும் கால் கைகளில் ரத்தக்கசிவே ஏற்படும் அளவுக்கு பனி வெடிப்பு மோசமாகும்.இதற்கும் உங்களுக்கு நல்ல தீர்வாக இருப்பது வெள்ளரிக்காயே.
  • வெள்ளரியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி உதடுகள் மீது அப்படியே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துவிடவும். இப்படி தினசரி செய்தால் உதடு வெடிப்பு சரியாகிவிடும்.
  • வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு, சிறுநீரக குழாய் எரிச்சல் ஆகியவை குணமாகும்.
  • வெள்ளரிப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப் புண் ஆகியவை குணமாகும்.
  • வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாயில் உண்டாகும் கிருமிகள் அழிந்து, வாய்துர்நாற்றத்தை வரவிடாமல் தடுக்கும்.

உடல் எடை குறையும்

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொழுப்பு செல்கலைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். அதனால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

வெள்ளரிக்காயில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆனால் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

300 – கிராம் வெள்ளரிக்காயில்,

கலோரிகள் : 45

கொழுப்பு : 0 கிராம்

கார்ப்ஸ் : 11 கிராம்

புரதம் : 2 கிராம்

நார்ச்சத்து : 2 கிராம்

வைட்டமின் சி : தினமும் உட்கொள்ளவேண்டிய அளவில் 14%

வைட்டமின் கே : 62%

மெக்னீசியம் : 10%

பொட்டாசியம் : 13%

மாங்கனீசு : 12%

இளமையான சருமம்:

உடலில் நீர்ச்சத்து குறைவதால், தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர்களைப் போல் தோற்றமளிக்கும். நீர்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டால் தோல் ஆரோக்கியமாக இருக்கும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோலின் சுருக்கங்கள் வராமல் தடுத்து இளமையான தோற்றத்தைக் கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. அதனால் தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்யம்.

மலச்சிக்கல்:

வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடப்பதற்கு உதவுகிறது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai healthcare products