கோவிட்-19 என்றால் என்ன..? கொரோனாதான் அதுவா..? பார்க்கலாமா..?
கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)
COVID-19 என்றால் என்ன?
covid 19 symptoms in tamil-COVID-19 என்பது கொரோனா SARS-CoV-2 வைரஸால் உண்டாகிறது. அது நுரையீரல், சுவாசப்பாதைகள் மற்றும் பிற உறுப்புகளைப் பாதிக்கிறது.
கொரோனா வைரஸ் நோய்களை உண்டாக்கும் ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தவை. இது சாதாரண சளி, கடுமையான தீவிர சுவாச நோய்க்குறியை ஏற்படுத்தும்.
SARS-CoV-2 முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. மேலும் விலங்குகளில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வைரஸ் மனிதர்களை எவ்வாறு தொற்றியது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
COVID-19 வைரஸ் மனிதர்களுக்கு ஏற்ப தன்னை பிறழ்வாக்கிக் கொண்டுள்ளது. இந்த பிறழ்வுகளில் சில டெல்டா மாறுபாடு போன்றவை. அசல் வைரஸை விட மிக எளிதாகப் பரவி மிகவும் கடுமையான நோய் தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளது.
COVID-19 அறிகுறிகள் அறிகுறிகள் பின்வருமாறு:
- புதிதாக இருமல் அல்லது மோசமாகும் இருமல்
- காய்ச்சல்
- சுவாச பிரச்சினை
- தொண்டை எரிச்சல்
- தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல்
- தற்காலிக வாசனை இழப்பு அல்லது சுவையில் மாற்றம்.
covid 19 symptoms in tamil-இந்த அறிகுறிகளால் மட்டுமே COVID-19 உள்ளது என்று அர்த்தமாகாது. இந்த அறிகுறிகள் அதிகமாக இருந்தால் பொதுவான நோய்களான ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ போன்றவையாகவும் இருக்கலாம்.
சுவாச பிரச்னை என்பது நிமோனியாவின் சாத்தியமான அறிகுறியாகும். மேலும் இவற்றிற்கு உடனடி மருத்துவ சிகிச்சைத் தேவை.
ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும்.
சில அறியப்படாத அறிகுறிகள்
சிலருக்கு சமயங்களில் அதிகளவில் காணப்படாத அறிகுறிகளும் தென்படலாம். அவை கீழே தரப்பட்டுள்ளன :-
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- தசை வலி அல்லது உடல் வலி
- குமட்டல்
- வாந்தி
- உடல்நலக்குறைவு- ஒரு மாதிரியான அசவுகரிய உணர்வு, நோய் அல்லது அமைதியின்மை ஏற்படுதல்
- நெஞ்சு வலி
- வயிற்றுவலி
- மூட்டு வலி
- குழப்பம் மற்றும் எரிச்சல்
பொதுவாக கொரோனா தோற்று ஏற்பட்டால் 14 நாட்கள் வரை பொறுத்து அறிகுறிகள் தென்படலாம். அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 நாட்கள் வரை முன்பிருந்தே கொரோனா தொற்று இருப்பது தெரியாமலேயே வைரசை மற்றவர்களுக்கு பரப்பலாம். யாரேனும் கோவிட்-19 இருப்பதை அறிவதற்கு முன்பே அதை பரப்பமுடியும்.
COVID-19 (கொரோனா)எப்படி பரவுகிறது
COVID-19 கொரோனா திரவத்துளிகள் மூலம் மனிதருக்கு மனிதர் பரவுகிறது. நோய்தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருமும்போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வைரஸ் கொண்ட திரவதுளிகளை பரவச் செய்யலாம்.
COVID-19 பரவுவதற்கான சாத்தியமான இடங்கள் :
- நல்ல காற்றோட்டம் இல்லாத மூடப்பட்ட இடங்களில்
- அருகில் பலர் கூட்டமாக இருக்கும் இடங்களில்
- நெருக்கமான உரையாடல்கள், பாடுதல் அல்லது கூச்சலிடுதல்
- நெருக்கமான தொடர்பு அமைப்புகளில்.
மக்கள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக விலகி இருப்பது ஆபத்தை குறைக்கும்.
எவ்வாறு பாதுகாப்பது?
- இந்த எளிய வழிமுறைகள் வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் மற்றும் சமூகத்தையும் COVID-19 இலிருந்து பாதுகாக்க உதவும்.
- ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால், வீட்டில் இருந்த படியே மருத்துவரையோ அல்லது பரிசோதனை செய்துகொள்வது குறித்தோ ஆலோசனை பெறுங்கள்.
- கையை மடக்கி முழங்கைக்குள் இருமுங்கள் அல்லது தும்முங்கள்.
- அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து சமூக விலகலை கடைபிடியுங்கள்.
- தேவைப்படும் போது உடல் ரீதியான இடைவெளி கண்டிப்பாக கடைபிடியுங்கள். முகக் கவசத்தை அணியுங்கள்.
covid 19 symptoms in tamil-வெளியே செல்லும்போது மாஸ்க் அணியுங்கள், வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவும். கிருமி நீக்கம் செய்யவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu