தடுப்பூசி வந்தாலும் கவனமா இருக்கனுங்க..! கொரோனா கோரம் குறையலை..!
coronavirus symptoms in tamil-கொரோனா பாதுகாப்பு (கோப்பு படம்)
coronavirus symptoms in tamil-கொரோனா நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தற்போது கோவிட் தடுப்பூசிகள் வந்துவிட்டன.தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மிகவும் குறைந்த அளவிலான சதவீதத்தினர் மட்டுமே இந்த நோய்த்தொற்றால் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக நீண்ட நாட்களுக்கு கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று கூறுகிறார்கள், மருத்துவ நிபுணர்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் சில அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.
கோவிட் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வந்தால் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும். தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு சில சமயங்களில் இதயம், மூளை, நுரையீரல் அல்லது உடலின் வேறு எந்த ஒரு பாகத்தையும் பாதிக்கும் அல்லது பலவீனமாக்கும். அதனால் நீண்ட நாட்களுக்கு கோவிட் அறிகுறிகளை அனுபவிக்க நேரிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
மும்பையின் மசினா மருத்துவமனையின் மார்பு மருத்துவர் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் சங்கேத் ஜெயின் கூறுகையில் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் மிக சிறிய அளவிலான சதவீதத்தினரே நாள்பட்ட கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்.
பொதுவான அறிகுறிகள் :
coronavirus symptoms in tamil-காய்ச்சல், கடுமையான வறட்டு இருமல், மூச்சுத்திணறல், பலவீனம், படபடப்பு, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், தலைவலி, பூஞ்சை தோல் வெடிப்பு, மூக்கு ஒழுகுதல், தும்மல், அடிவயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தசைவலி போன்றவை பொதுவான அறிகுறிகள் என்கிறார்கள் நிபுணர்கள்.
நீண்டகால அறிகுறிகளான தலைசுற்றல், குமட்டல், கவனமின்மை, சோர்வு, பசியின்மை போன்றவை பொதுவாக வயதானவர்களிடம் காணப்படும். சிலருக்கு நீண்டகால கோவிட் என்பது ஒரு மாதம் ஒரு வருடம் அல்லது இயலாமையையும் ஏற்படுத்தலாம்.
பொதுவாக நீரிழிவு, எஸ்கிமிக் இதயநோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை, கீமோதெரபியில் நோய்எதிர்ப்பு குறைவான அளவில் உள்ளவர்கள் பொதுவாக நீண்டகால கோவிட் நோய்க்கு ஆளாகிறார்கள் என கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu