Coriander Leaves in Tamil-அடேங்கப்பா..கொத்தமல்லி தழையில் இவ்ளோ நன்மைகளா?

coriander leaves in tamil-கொத்தமல்லி தழை ஜூஸ் (கோப்பு படம்)
Coriander Leaves in Tamil
பச்சை தங்கம் என்று கூறப்படும் கொத்தமல்லி தழை சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உடல் நலத்திற்கு பல அரிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை கொத்தமல்லித்தழை ஆகும். இது ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட கொத்தமல்லி தழையை குடும்பத் தலைவிகள் அன்றாடம் சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
Coriander Leaves in Tamil
இது உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு
புளி ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது
வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது
கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்
.கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும்
தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.
Coriander Leaves in Tamil
கொத்தமல்லியில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தினமும் காலையில் கொத்தமல்லி தழை சாறு குடித்து வந்தால் அசிடிட்டி பிரச்சனை குணமாகும்.
மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு அதிக இரத்தப்போக்கு இருந்தால் கொத்தமல்லி இலை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு உள்ளவர்களும் கொத்தமல்லி சாறின் மூலமாக நிவாரணம் பெறலாம்.
தைராய்டு பிரச்சனைகளுக்கும் இந்த பானம் நன்மை பயக்கும்.
உங்களுக்கு பிபி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கொத்தமல்லி சாறு அன்றைய நாளைத் தொடங்குங்கள்.
Coriander Leaves in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு மக்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அதை நிர்வகிப்பதும் நன்மை பயக்கும்.
தினமும் காலையில் கொத்தமல்லித் சாற்றைக் குடிப்பதால் வீக்கம் மற்றும் நீர்ப்பிடிப்பு பிரச்சனைகள் நீங்கும்.
அல்சர் அல்லது கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தாலும் கொத்தமல்லி சாறு குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
ஒற்றைத் தலைவலி, கோபம் அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் இந்த சாற்றைக் கொண்டு நாளைத் தொடங்குங்கள்.
Coriander Leaves in Tamil
கொத்தமல்லி சாறு குடித்தால் கண் பார்வை மேம்படுகிறது.
இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
இதனால் செரிமானமும் மேம்படும். உங்களுக்கு அடிக்கடி வயிறு உபாதை இருந்தால் இந்த பானத்துடன் அன்றைய நாளைத் தொடங்குங்கள்.
எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
இதை துவையலாக அரைத்தும் சாப்பிடலாம். இட்லி அல்லது தோசைக்கு கெட்டியாக சட்னி அரைத்தும் சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும்.
Coriander Leaves in Tamil
கொத்தமல்லி சாறு தயாரிக்கும் முறை
ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையை எடுத்துக் கொள்ளவும்.
அதை 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு 7-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அதை வடிகட்டி குடிக்கவும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu