constipation meaning in tamil-மலச் சிக்கல் வந்தால் பலச் சிக்கல்கள் வரும்..! தடுப்பது எப்படி? பார்ப்போம் வாங்க..!
constipation meaning in tamil-பொதுவாக மலச் சிக்கல் நமது உணவுப்பழக்கத்தால் ஏற்படுவதுதான். அதை மாற்றிக்கொண்டால் மலச் சிக்கலை தவிர்க்கமுடியும்.
HIGHLIGHTS

constipation meaning in tamil-மலச் சிக்கல் (கோப்பு படம்)
constipation meaning in tamil-நாம் உண்ணும் உணவு வயிற்றிலும், சிறுகுடலிலும் பயணிக்கும்போது பல்வேறு இரசாயன பரிமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உடலுக்குத் தேவையான சத்துகள் எடுக்கப்படுகின்றன. தேவையான சத்துகளைப் பிரித்தெடுத்தப் பின் மிஞ்சும் சக்கை, கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கிறது. பெருங்குடலில் வந்து சேரும் எஞ்சிய சக்கையில் உள்ள தண்ணீர் முழுவதுமாக உறிஞ்சப்படுகிறது. அவ்வாறு தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டவுடன் மீதி உள்ளவை மலமாக வெளியேற்றப்படுகிறது. இதுதான் பெருங்குடலில் நடக்கும் பணிகள்.
இவ்வாறு மலமாக வெளியேற்றப்படும் பணிகள் முறையாக நடைபெறவில்லையெனில் அதுவே மலச் சிக்கல் ஆகிறது. தொடர்ந்து மலச் சிக்கல் தீராமல் இருந்தால் அது மூல நோயாக மாறுகிறது. அதனால், மலச் சிக்கல் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும்.
மலச்சிக்கல் ஏற்பட காரணம் என்ன?
நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் காரணிகளாக அமைகின்றன.மேலும் தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். ஆமாம், தினமும் காலை எழுந்தவுடன் சுத்தமான நீர் அருந்தலாம். நீர் அருந்திய பின் மலம் கலிக்கச் செல்லலாம். இதை ஒரு முறையான தினசரி நடவடிக்கையாக பின்பற்றினால் மலச் சிக்கல் ஏற்படாது. அதை நடைமுறைப்படுத்திவிட்டால், நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் போகாவிட்டாலும் கூட, மலமே உங்களை கழிவறைக்கு அழைத்துச் சென்றுவிடும்.
constipation meaning in tamil
மலச்சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள்:
- உணவுமுறையில் மாற்றம்
- குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவது
- தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை
- இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள்
- உடல் உழைப்பின்மை
- அதிக மனஅழுத்தம்
- பிரயாணம்
- மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது
- பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.
constipation meaning in tamil
மருத்துவக் காரணங்கள்:
- பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் கோளாறு ஏற்படுவது
- தைராய்டு குறைவாகச் சுரப்பது
- சர்க்கரை நோய்
- பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்திலும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.
constipation meaning in tamil
எவ்வாறு விடுபடுவது?
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம். அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மலத்தை இளக்கும். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா எனக் கவனிக்கவும்.
நார்ச்சத்துள்ள உணவுகள் எடுத்துக்கொள்வது,
நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, டீ மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
ஆப்பிள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பேரிக்காய்,கிவி பழம், வாழைப்பழத்தில் குறிப்பாக பூவன் மலச் சிக்கலுக்கு சிறந்தது. கீரைகள், ப்ரக்கோலி மற்றும் பிற பச்சை காய்கறிகள் குறிப்பாக வாழைத்தண்டு,முள்ளங்கி, சுரைக்காய்,வாழைக்காய், கேரட் போன்றவை மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவு. இவற்றில் நார்ச்சத்து நிறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் நிறைந்திருக்கின்றன.
constipation meaning in tamil
- திரவ உணவுகள் உட்கொள்வது
- போதுமான அளவு தண்ணீர் குடிப்பது
- தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
- மலம் வரும்போது, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் புறக்கணிக்காமல் செல்லவும்.
- எப்போதும் தளர்வு நிலையில் இருப்பது உதவும். (டென்சன், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது)
மருந்து உட்கொள்ளலாமா?
மலச் சிக்கல் பிரச்னை மிகவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் மட்டும் மருந்துகள் பயன்படுத்தலாம். அதுவும் முறையான மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகள் உட்கொள்ளலாம்.